Author: Farook

Bukhari-2749

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 அல்லாஹ் கூறுகிறான்:

மரணமடைந்தவர் செய்திருந்த மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அவரது கடன் அடைக்கப்பட்ட பின்னரும் தான் (அவரது சொத்து வாரிசுகளிடையே மேலே விவரித்தபடி பங்கிடப்பட வேண்டும்). (4 : 12)

நீதிபதி ஷுரைஹ் (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ் , அதாஉ, இப்னு உதைனா (ரஹ்-அலைஹிம்) ஆகியோர், நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் தருவது செல்லும் என்று அனுமதித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், ஒரு மனிதன் செய்யும் தருமங்களில் தகுதி மிக்கது அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளிலும் செய்யும் (மரண சாசன) தருமமேயாகும் என்று கூறினார்கள்.

இப்ராஹீம் நகஈ (ரஹ்), ஹகம் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்:

மரணப்படுக்கையில் உள்ள நோயாளி ஒருவர், தன் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்து விட்டால் அவர் கடன் சுமையிலிருந்து விடுபட்டு விடுவார். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தமது மனைவியிடம், அவரது வீட்டில் இருப்பவற்றை (அவரே வைத்துக் கொள்ளும்படியும்) மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று(ம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள்.


آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ


Bukhari-2748

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 மரணத் தருவாயில் தர்மம் செய்வது.

2748. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும்.

உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, ‘இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்’ என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
Book : 55


قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ حَرِيصٌ، تَأْمُلُ الغِنَى، وَتَخْشَى الفَقْرَ، وَلاَ تُمْهِلْ حَتَّى إِذَا بَلَغَتِ الحُلْقُومَ، قُلْتَ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ»


Bukhari-2747

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 வாரிசுக்கு மரண சாசனம் செய்யக் கூடாது.

2747. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(தொடக்கக் காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும் மரண சாசனம் தாய், தந்தைக்குரியதாகவும் இருந்தது. தான் விரும்பியதை அதிலிருந்து அல்லாஹ் மாற்றிவிட்டான்.

இரண்டு பெண்களின் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனுடைய பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்.
Book : 55


«كَانَ المَالُ لِلْوَلَدِ، وَكَانَتِ الوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ، فَنَسَخَ اللَّهُ مِنْ ذَلِكَ مَا أَحَبَّ، فَجَعَلَ لِلذَّكَرِ مِثْلَ حَظِّ الأُنْثَيَيْنِ، وَجَعَلَ لِلْأَبَوَيْنِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسَ، وَجَعَلَ لِلْمَرْأَةِ الثُّمُنَ وَالرُّبُعَ، وَلِلزَّوْجِ الشَّطْرَ وَالرُّبُعَ»


Bukhari-2746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 நோயாளி தனது தலையால் தெளிவான சைகை செய்தால் அது செல்லும்.

2746. அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அச்சிறுமியிடம், ‘உன்னை இப்படிச் செய்தது யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லிக் கேட்கப்பட்டது. இறுதியில், அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டவுடன் (‘அவன்தான் இப்படிச் செய்தான்’ என்று) அச்சிறுமி தன் தலையால் சைகை செய்தாள்.

உடனே அந்த யூதன் கொண்டு வரப்பட்டான். அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை தொடர்ந்து விசாரிக்கப்பட்டான். அவன் ஒப்புக் கொண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையைக் கல்லால் நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.
Book : 55


أَنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا: مَنْ فَعَلَ بِكِ، أَفُلاَنٌ أَوْ فُلاَنٌ، حَتَّى سُمِّيَ اليَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِهِ، فَلَمْ يَزَلْ حَتَّى اعْتَرَفَ، «فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضَّ رَأْسُهُ بِالحِجَارَةِ»


Bukhari-2745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 மரண சாசனம் செய்பவர் தன் பொறுப்பாளரிடம், என் மகனை கவனித்துக் கொள் என்று சொல்வதும்,பொறுப்பாளர் உரிமை கோர அனுமதிக்கப்பட்டவையும்.

2745. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உத்பா இப்னு அபீ வக்காஸ் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனை நீ பிடித்து வைத்துக் கொள்’ என்று உறுதிமொழி வாங்கியிருந்தார். மக்காவை வெற்றி கொண்ட ஆண்டில் ஸஅத்(ரலி) அவனைப் பிடித்தார்கள். அப்போது அவர்கள், ‘(இவன் என்) சகோதரரின் மகன். என் சகோதரர் இவனை அழைத்து வரும்படி என்னிடம் உறுதி மொழி வாங்கியுள்ளார்’ என்று கூறினார்.

ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) எழுந்து, ‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன். அவரின் படுக்கையில் (அவரின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்’ என்று கூறினார். இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டு) சென்றனர். ஸஅத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன் மகன். அவர் இவனை அழைத்து வரும்படி என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்’ என்று கூற அப்து இப்னு ஸம்ஆ(ரலி), ‘இவன் என் சகோதரன். என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்’ என்று கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே!

كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ مِنِّي، فَاقْبِضْهُ إِلَيْكَ، فَلَمَّا كَانَ عَامُ الفَتْحِ، أَخَذَهُ سَعْدٌ، فَقَالَ: ابْنُ أَخِي قَدْ كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَامَ عَبْدُ بْنُ زَمْعَةَ فَقَالَ: أَخِي، وَابْنُ أَمَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِهِ، فَتَسَاوَقَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، ابْنُ أَخِي كَانَ عَهِدَ إِلَيَّ فِيهِ، فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وَابْنُ وَلِيدَةِ أَبِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الحَجَرُ» ثُمَّ قَالَ لِسَوْدَةَ بِنْتِ زَمْعَةَ: «احْتَجِبِي مِنْهُ» لِمَا رَأَى مِنْ شَبَهِهِ بِعُتْبَةَ، فَمَا رَآهَا حَتَّى لَقِيَ اللَّهَ


Bukhari-2744

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2744. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

(இறுதி ஹஜ்ஜின்போது மக்காவில்) நான் நோயுற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் கால்சுவடுகளின் வழியே என்னைத் திருப்பியனுப்பி விடாமல் (பழைய மார்க்கத்திற்கே திரும்பிச் செல்லும்படி செய்து விடாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்’ என்று கூறினார்கள். ‘நான் மரண சாசனம் செய்ய விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள் தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பாதி அதிகம் தான்’ என்று கூறினார்கள். நான் ‘அப்படியென்றால் மூன்றிலொரு பங்கு?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்– அல்லது பெரியது தான்’ என்று கூறினார்கள்.
எனவே, மக்கள் மூன்றிலொரு பங்கை மரண சாசனம் செய்தார்கள். அது செல்லும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
Book :55


مَرِضْتُ، فَعَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ لاَ يَرُدَّنِي عَلَى عَقِبِي، قَالَ: «لَعَلَّ اللَّهَ يَرْفَعُكَ وَيَنْفَعُ بِكَ نَاسًا»، قُلْتُ: أُرِيدُ أَنْ أُوصِيَ، وَإِنَّمَا لِي ابْنَةٌ، قُلْتُ: أُوصِي بِالنِّصْفِ؟ قَالَ: «النِّصْفُ كَثِيرٌ»، قُلْتُ: فَالثُّلُثِ؟ قَالَ: «الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»، قَالَ: فَأَوْصَى النَّاسُ بِالثُّلُثِ، وَجَازَ ذَلِكَ لَهُمْ


Bukhari-2743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 மூன்றிலொரு பங்கு மரண சாசனம் செய்தல்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதாரும் மூன்றிலொரு பங்குக்கு மேல் மரண சாசனம் செய்யக் கூடாது என்று கூறினார். ஏனெனில், (நபியே!)அவர்களிடையே நீங்கள் அல்லாஹ் அருளிய (சட்டத்)தைக் கொண்டே தீர்ப்பளியுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 5:49)

2743. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மக்கள் (தம் மரண சாசனங்களை) நான்கிலொரு பாகமாகக் குறைத்துக் கொண்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம் தான்’ என்று கூறினார்கள்.
Book : 55


لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ، لِأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ»


Bukhari-2742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஒருவர் தன் வாரிசுகளைத் தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதைவிட நல்லதாகும்.

2742. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) ‘அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறினார்கள்.

நான், ‘அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கும், ‘வேண்டாம்’ என்றே பதிலளித்தார்கள். நான், ‘மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)’ என்று கேட்டேன். அவர்கள், ‘மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும்.

நீங்கள் செய்த

جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا، قَالَ: «يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ؟ قَالَ: «لاَ»، قُلْتُ: فَالشَّطْرُ، قَالَ: «لاَ»، قُلْتُ: الثُّلُثُ، قَالَ: «فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ، وَإِنَّكَ مَهْمَا أَنْفَقْتَ مِنْ نَفَقَةٍ، فَإِنَّهَا صَدَقَةٌ، حَتَّى اللُّقْمَةُ الَّتِي تَرْفَعُهَا إِلَى فِي امْرَأَتِكَ، وَعَسَى اللَّهُ أَنْ يَرْفَعَكَ، فَيَنْتَفِعَ بِكَ نَاسٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ»، وَلَمْ يَكُنْ لَهُ يَوْمَئِذٍ إِلَّا ابْنَةٌ


Bukhari-2741

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2741. அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)’ என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி(ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?’ என்று கேட்டார்கள்.
Book :55


ذَكَرُوا عِنْدَ عَائِشَةَ أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانَ وَصِيًّا، فَقَالَتْ: ” مَتَى أَوْصَى إِلَيْهِ، وَقَدْ كُنْتُ مُسْنِدَتَهُ إِلَى صَدْرِي؟ – أَوْ قَالَتْ: حَجْرِي – فَدَعَا بِالطَّسْتِ، فَلَقَدْ انْخَنَثَ فِي حَجْرِي، فَمَا شَعَرْتُ أَنَّهُ قَدْ مَاتَ، فَمَتَى أَوْصَى إِلَيْهِ


Bukhari-2740

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2740. தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :55


سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا هَلْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَى؟ فَقَالَ: «لاَ»، فَقُلْتُ: كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الوَصِيَّةُ أَوْ أُمِرُوا بِالوَصِيَّةِ؟ قَالَ: «أَوْصَى بِكِتَابِ اللَّهِ»


Next Page » « Previous Page