Author: Farook

Bukhari-2739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2739. அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோவிட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
Book :55


«مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا، إِلَّا بَغْلَتَهُ  البَيْضَاءَ، وَسِلاَحَهُ وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً»


Bukhari-2738

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

Bukhari-2737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 19

வக்ஃபு செய்யும் போது விதிக்கும் நிபந்தனைகள்

2737. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் கைபரில் (‘ஸம்ஃக்’ எனும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்களும் ‘அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது; வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது’ என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள்.

அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில்

أَنْ عُمَرَ بْنَ الخَطَّابِ أَصَابَ أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْمِرُهُ فِيهَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَصَبْتُ أَرْضًا بِخَيْبَرَ لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ بِهِ؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَسْتَ أَصْلَهَا، وَتَصَدَّقْتَ بِهَا» قَالَ: فَتَصَدَّقَ بِهَا عُمَرُ، أَنَّهُ لاَ يُبَاعُ وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ، وَتَصَدَّقَ بِهَا فِي الفُقَرَاءِ، وَفِي القُرْبَى وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ، وَابْنِ السَّبِيلِ، وَالضَّيْفِ لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ غَيْرَ مُتَمَوِّلٍ
قَالَ: فَحَدَّثْتُ بِهِ ابْنَ سِيرِينَ، فَقَالَ: غَيْرَ مُتَأَثِّلٍ مَالًا


Bukhari-2736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 18

நிபந்தனை விதிக்கும்போதும், ஒப்புதல் வாக்குமூலம் தரும் போதும் விதிவிலக்குத் தருவது; மக்களுக்கிடையே வழக்கிலுள்ள நிபந்தனைகள்.

ஒருவர் நூறில் ஒன்று அல்லது இரண்டு போக என்று கூறினால்….?

இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் வாகனத்தை வாடகைக்கு விடுபவரிடம், உன் வாகனத்தை (தொழுவத்தில்) கட்டி வை. நான் உன்னுடன் இன்ன நாளில் பயணம் செய்யவில்லையென்றால் உனக்கு நூறு திர்ஹம்கள் தந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு, பிறகு குறித்த நாளில் வரவில்லையென்றால் (அவர் நூறு திர்ஹம்களை வாடகைக்கு விடுபவருக்குத் தந்து விட வேண்டும்).

இது குறித்து நீதிபதி ஷுரைஹ் (ரஹ்)அவர்கள், எவர் தானாக முன்வந்து எவரது நிர்பந்தமுமின்றி ஒன்றைத் தன் மீது நிபந்தனையிட்டுக் கொண்டாரோ அதை அவர் நிறைவேற்றியாக வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும், இப்னு ஸீரின் (ரஹ்) கூறியதாவது:

ஒருவர் ஓர் உணவுப் பொருளை விற்றார். அப்போது அதை வாங்குபவர், நான் புதன்கிழமையன்று உன்னிடம் வர வில்லையென்றால் உனக்கும் எனக்குமிடையே (நடக்கும் இந்த) வியாபாரம் ரத்தாகி விடும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு புதன்கிழமையன்று வரவில்லை.

«إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الجَنَّةَ»


Bukhari-2735

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 முகாத்தப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) மற்றும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முரணான, அனுமதிக்கப்படாத நிபந்தனைகள்.

ஜாபிர் (ரலி) அவர்கள், முகாத்தபின் விஷயத்தில் அவர்களுடைய (முகாத்தப் மற்றும் அவனது எஜமானர்களின்) நிபந்தனைகள் அவர்களுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டபடியே இருக்கும் என்று கூறினார்கள்.

இறைச் சட்டத்திற்கு மாற்றமான நிபந்தனைகள் அனைத்தும் செல்லாத வையாகும்; நூறுமுறை நிபந்தனைகள் விதித்தாலும் சரியே என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லது உமர் (ரலி) அவர்கள் (இருவரில் எவரோ ஒருவர்) கூறினார்கள்.

2735. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பரீரா, தன்னுடைய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்த (உதவி தேடி) என்னிடம் வந்தார். நான், ‘நீ விரும்பினால் உன் எஜமானர்களுக்கு (முழுத் தொகையையும்) நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே உரியதாகி விட வேண்டும்’ என்று கூறினேன்.

இறைத்தூதர் வந்தபோது நான் இதை அவர்களிடம் கூறினேன். அவர்கள், ‘அவரை வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியது’ என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடையின் மீது நின்று (உரை நிகழ்த்தலானார்கள்;) ‘மக்கள் சிலருக்கு என்ன

أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ: إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الوَلاَءُ لِي، فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَّرْتُهُ ذَلِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْتَاعِيهَا، فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المِنْبَرِ، فَقَالَ: «مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ»


Bukhari-2734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 கடன் விஷயத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.

2734. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இஸ்ரவேலர்களில் ஒருவரிடம் தனக்கு ஆயிரம் தீனார்கள் கடன் தரும்படி கேட்டதாகவும் அந்த இஸ்ரவேலரும் காலக் கெடுவைக் குறிப்பிட்டு (அதற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டுமென்று நிபந்தனையிட்டு) அதை அவருக்குக் கொடுத்ததாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கூறினார்கள்.

இப்னு உமர்(ரலி) மற்றும் அதாஉ(ரஹ்) ஆகிய இருவரும், ‘கடன் கொடுப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்த காலக் கெடுவைக் குறிப்பிட்டால் அது செல்லும்’ என்று கூறுகிறார்கள்.
Book : 54


«أَنَّهُ ذَكَرَ رَجُلًا سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ، أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى»

وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَعَطَاءٌ: «إِذَا أَجَّلَهُ فِي القَرْضِ جَازَ»


Bukhari-2733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2733. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாமா) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சோதித்து வந்தார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமார்களில் யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களுக்காக, அவர்களின் கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைகளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடும்படியும், நிராகரிக்கும் பெண்களுடன் திருமணம் பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் (குர்ஆனில் சட்டம் அருளி) முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டபோது, உமர்(ரலி), அபூ உமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல் குஸாயீயின் மகளையும் (அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால்) தலாக் செய்துவிட்டார்கள்.

எனவே, கரீபாவை முஆவியா இப்னு அபீ சுஃப்யானும் மற்றொருத்தியை (ஜர்வலின் மகளை) அபூ ஜஹ்மும் மணந்தார்கள். முஸ்லிம்கள் தங்கள் மனைவிமார்களுக்குச் செலவிட்டவற்றை (மஹ்ர் தொகையை) திருப்பிச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ள நிராகரிப்பவர்கள் மறுத்தபோது, ‘இறைநிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்(கள் நிராகரிப்பாளர்களிடம் சென்று அவர்களின் மனைவிகளாகி விட்டிருக்கும் பட்சத்தில் அவர்)களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரில் சிறிதளவு அந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து உங்களுக்குக்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَمْتَحِنُهُنَّ وَبَلَغْنَا أَنَّهُ لَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى: أَنْ يَرُدُّوا إِلَى المُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ، وَحَكَمَ عَلَى المُسْلِمِينَ أَنْ لاَ يُمَسِّكُوا بِعِصَمِ الكَوَافِرِ، أَنَّ عُمَرَ طَلَّقَ امْرَأَتَيْنِ، قَرِيبَةَ بِنْتَ أَبِي أُمَيَّةَ، وَابْنَةَ جَرْوَلٍ الخُزَاعِيِّ، فَتَزَوَّجَ قَرِيبَةَ مُعَاوِيَةُ، وَتَزَوَّجَ الأُخْرَى أَبُو جَهْمٍ، فَلَمَّا أَبَى الكُفَّارُ أَنْ يُقِرُّوا بِأَدَاءِ مَا أَنْفَقَ المُسْلِمُونَ عَلَى أَزْوَاجِهِمْ، أَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الكُفَّارِ فَعَاقَبْتُمْ} [الممتحنة: 11] وَالعَقْبُ مَا يُؤَدِّي المُسْلِمُونَ إِلَى مَنْ هَاجَرَتِ امْرَأَتُهُ مِنَ الكُفَّارِ، فَأَمَرَ أَنْ يُعْطَى مَنْ ذَهَبَ لَهُ زَوْجٌ مِنَ المُسْلِمِينَ مَا أَنْفَقَ مِنْ صَدَاقِ نِسَاءِ الكُفَّارِ اللَّائِي هَاجَرْنَ، وَمَا نَعْلَمُ أَنَّ أَحَدًا مِنَ الْمُهَاجِرَاتِ ارْتَدَّتْ بَعْدَ إِيمَانِهَا، وَبَلَغَنَا أَنَّ أَبَا بَصِيرِ بْنَ أَسِيدٍ  الثَّقَفِيَّ قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤْمِنًا مُهَاجِرًا فِي المُدَّةِ، فَكَتَبَ الأَخْنَسُ بْنُ شَرِيقٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ أَبَا بَصِيرٍ، فَذَكَرَ الحَدِيثَ


Bukhari-2731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2731. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகிய இருவரும் ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு லி கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘காலித் பின் அல்வலீத், குறைஷியரின் குதிரைப் படையுடன் ‘அல்ஃகமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர்கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் அல்வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்றுவிடலாம்)” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம்கள் வருவதை காலித் அறியவில்லை. (குறைஷி குதிரைப் படையினர் முஸ்லிம்களின்) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய கரும் புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் அல்வலீத், குறைஷியரை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

இறுதியில், (‘அல்மிரார்’ எனும்) மலைப் பாதைக்கு வந்தார்கள். அங்கிருந்துதான் குறைஷியரைப் போய்ச் சேர முடியும். அங்கு நபியவர்களின் ஊர்தி ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துகொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الحُدَيْبِيَةِ حَتَّى إِذَا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ خَالِدَ بْنَ الوَلِيدِ بِالْغَمِيمِ فِي خَيْلٍ لِقُرَيْشٍ طَلِيعَةٌ، فَخُذُوا ذَاتَ اليَمِينِ» فَوَاللَّهِ مَا شَعَرَ بِهِمْ خَالِدٌ حَتَّى إِذَا هُمْ بِقَتَرَةِ الجَيْشِ، فَانْطَلَقَ يَرْكُضُ نَذِيرًا لِقُرَيْشٍ، وَسَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِالثَّنِيَّةِ الَّتِي يُهْبَطُ عَلَيْهِمْ مِنْهَا بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ، فَقَالَ النَّاسُ: حَلْ حَلْ فَأَلَحَّتْ، فَقَالُوا: خَلَأَتْ القَصْوَاءُ، خَلَأَتْ القَصْوَاءُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا خَلَأَتْ القَصْوَاءُ، وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ، وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الفِيلِ»، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا»، ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ، قَالَ: فَعَدَلَ عَنْهُمْ حَتَّى نَزَلَ بِأَقْصَى الحُدَيْبِيَةِ عَلَى ثَمَدٍ قَلِيلِ المَاءِ، يَتَبَرَّضُهُ النَّاسُ تَبَرُّضًا، فَلَمْ يُلَبِّثْهُ النَّاسُ حَتَّى نَزَحُوهُ وَشُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَطَشُ، فَانْتَزَعَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهُ فِيهِ، فَوَاللَّهِ مَا زَالَ يَجِيشُ لَهُمْ بِالرِّيِّ حَتَّى صَدَرُوا عَنْهُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ جَاءَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ الخُزَاعِيُّ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ مِنْ خُزَاعَةَ، وَكَانُوا عَيْبَةَ نُصْحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ تِهَامَةَ، فَقَالَ: إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَيٍّ، وَعَامِرَ بْنَ لُؤَيٍّ نَزَلُوا أَعْدَادَ مِيَاهِ الحُدَيْبِيَةِ، وَمَعَهُمُ العُوذُ [ص:194] المَطَافِيلُ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ البَيْتِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّا لَمْ نَجِئْ لِقِتَالِ أَحَدٍ، وَلَكِنَّا جِئْنَا مُعْتَمِرِينَ، وَإِنَّ قُرَيْشًا قَدْ نَهِكَتْهُمُ الحَرْبُ، وَأَضَرَّتْ بِهِمْ، فَإِنْ شَاءُوا مَادَدْتُهُمْ مُدَّةً، وَيُخَلُّوا بَيْنِي وَبَيْنَ النَّاسِ، فَإِنْ أَظْهَرْ: فَإِنْ شَاءُوا أَنْ يَدْخُلُوا فِيمَا دَخَلَ فِيهِ النَّاسُ فَعَلُوا، وَإِلَّا فَقَدْ جَمُّوا، وَإِنْ هُمْ أَبَوْا، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأُقَاتِلَنَّهُمْ عَلَى أَمْرِي هَذَا حَتَّى تَنْفَرِدَ سَالِفَتِي، وَلَيُنْفِذَنَّ اللَّهُ أَمْرَهُ “، فَقَالَ بُدَيْلٌ: سَأُبَلِّغُهُمْ مَا تَقُولُ، قَالَ: فَانْطَلَقَ حَتَّى أَتَى قُرَيْشًا، قَالَ: إِنَّا قَدْ جِئْنَاكُمْ مِنْ هَذَا الرَّجُلِ وَسَمِعْنَاهُ يَقُولُ قَوْلًا، فَإِنْ شِئْتُمْ أَنْ نَعْرِضَهُ عَلَيْكُمْ فَعَلْنَا، فَقَالَ سُفَهَاؤُهُمْ: لاَ حَاجَةَ لَنَا أَنْ تُخْبِرَنَا عَنْهُ بِشَيْءٍ، وَقَالَ ذَوُو الرَّأْيِ مِنْهُمْ: هَاتِ مَا سَمِعْتَهُ يَقُولُ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ كَذَا وَكَذَا، فَحَدَّثَهُمْ بِمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ عُرْوَةُ بْنُ مَسْعُودٍ فَقَالَ: أَيْ قَوْمِ، أَلَسْتُمْ بِالوَالِدِ؟ قَالُوا: بَلَى، قَالَ: أَوَلَسْتُ بِالوَلَدِ؟ قَالُوا: بَلَى، قَالَ: فَهَلْ تَتَّهِمُونِي؟ قَالُوا:


Bukhari-2730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 நிலக் குத்தகையின் போது நில உரிமையாளர், நான் விரும்பும் போது உன் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று நிபந்தனையிட்டால்… (செல்லும்.)

2730. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கைபர் வாசிகள் என் கைமூட்டுகளைப் பிசகச் செய்துவிட்டபோது என் தந்தை உமர்(ரலி) எழுந்து நின்று உரையாற்றினார்கள். அவ்வுரையில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரசேத்து யூதர்களிடம் அவர்களின் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தார்கள். அப்போது, ‘அல்லாஹ் உங்களை இங்கு வசிக்கச் செய்யும் வரை நாம் உங்களை வசிக்க விடுவோம்’ என்று கூறினார்கள். (என்னுடைய மகன்) அப்துல்லாஹ் இப்னு உமர் அங்கேயிருந்த தன்னுடைய சொத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர் அன்றிரவு தாக்கப்பட்டார். அதனால் அவரின் இருகைகளின் மூட்டுகளும் இருகால்களின் மூட்டுகளும் பிசகிவிட்டன.

அங்கு அவர்களைத் தவிர வேறு பகைவர்கள் எவரும் இல்லை. அவர்கள் நம்முடைய பகைவர்களும் நம் சந்தேகத்திற்குரியவர்களும் ஆவர். அவர்களை நாடு கடத்தி விடுவதே பொறுத்தமென்று கருதுகிறேன்’ என்று கூறினார்கள். உமர்(ரலி) (யூதர்களை) நாடு கடத்துவதென்று இறுதி முடிவெடுத்துவிட்டபோது, (யூதர்களின் தலைவனான) அபுல் ஹுகைக் உடைய மகன்களில் ஒருவன் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களை முஹம்மத்(ஸல்)

لَمَّا فَدَعَ أَهْلُ خَيْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَامَ عُمَرُ خَطِيبًا، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَامَلَ يَهُودَ خَيْبَرَ عَلَى أَمْوَالِهِمْ، وَقَالَ: «نُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ» وَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ خَرَجَ إِلَى مَالِهِ هُنَاكَ، فَعُدِيَ عَلَيْهِ مِنَ اللَّيْلِ، فَفُدِعَتْ يَدَاهُ وَرِجْلاَهُ، وَلَيْسَ لَنَا هُنَاكَ عَدُوٌّ غَيْرَهُمْ، هُمْ عَدُوُّنَا وَتُهْمَتُنَا وَقَدْ رَأَيْتُ إِجْلاَءَهُمْ، فَلَمَّا أَجْمَعَ عُمَرُ عَلَى ذَلِكَ أَتَاهُ أَحَدُ بَنِي أَبِي الحُقَيْقِ، فَقَالَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، أَتُخْرِجُنَا وَقَدْ أَقَرَّنَا مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَامَلَنَا عَلَى الأَمْوَالِ وَشَرَطَ ذَلِكَ لَنَا، فَقَالَ عُمَرُ: أَظَنَنْتَ أَنِّي نَسِيتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكَ إِذَا أُخْرِجْتَ مِنْ خَيْبَرَ تَعْدُو بِكَ قَلُوصُكَ لَيْلَةً بَعْدَ لَيْلَةٍ» فَقَالَ: كَانَتْ هَذِهِ هُزَيْلَةً مِنْ أَبِي القَاسِمِ، قَالَ: كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ، فَأَجْلاَهُمْ عُمَرُ، وَأَعْطَاهُمْ قِيمَةَ مَا كَانَ لَهُمْ مِنَ الثَّمَرِ، مَالًا وَإِبِلًا، وَعُرُوضًا مِنْ أَقْتَابٍ وَحِبَالٍ وَغَيْرِ ذَلِكَ

رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَحْسِبُهُ عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَصَرَهُ


Bukhari-2729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

(அடிமையின்) வாரிசுரிமையில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.

2729. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீரா என்னிடம் வந்து, ‘நான் என் எஜமானர்களிடம் ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஊகியா வீதம் ஒன்பது ஊகியாக்கள் தருவதாகக் கூறி விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். எனவே, எனக்கு உதவுங்கள்’ என்று கூறினார். அதற்கு நான், ‘அவர்கள் விரும்பினால் நான் ஒன்பது ஊக்கியாக்களையும் (எண்ணிக்) கொடுத்து விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே சேர வேண்டும்’ என்று கூறினேன்.

பரீரா, அவரின் எஜமானர்களிடம் சென்று அவர்களிடம் இதைக் கூறினார். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து (திரும்பி) வந்து, ‘நான் நீங்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன்; அவர்கள், ‘வாரிசுரிமை தங்களுக்கே உரியது’ என்று கூறி உங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார்கள்’ என்று கூறினார்.

அப்போது அங்கே அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை செவிமடுத்துக் கொண்டிருந்ததால், நான் நபி (ஸல்) அவர்களுக்கு விபரத்தைக் கூறினேன். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘பரீராவை நீ வாங்கிக் கொண்டு, அவரின் வாரிசுரிமை உனக்கே சேர வேண்டும் என்று நிபந்தனையிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்’

جَاءَتْنِي بَرِيرَةُ فَقَالَتْ: كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ، أُوقِيَّةٌ، فَأَعِينِينِي، فَقَالَتْ: إِنْ أَحَبُّوا أَنْ أَعُدَّهَا لَهُمْ وَيَكُونَ وَلاَؤُكِ لِي، فَعَلْتُ، فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَقَالَتْ لَهُمْ: فَأَبَوْا عَلَيْهَا، فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَقَالَتْ: إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكِ عَلَيْهِمْ، فَأَبَوْا إِلَّا أَنْ يَكُونَ الوَلاَءُ لَهُمْ، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الوَلاَءَ، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»، فَفَعَلَتْ عَائِشَةُ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَهُوَ بَاطِلٌ وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ قَضَاءُ اللَّهِ أَحَقُّ وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، وَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»


Next Page » « Previous Page