Author: Farook

Bukhari-2728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 மக்களிடம் விதிக்கப்படும் வாய்மொழி நிபந்தனைகள்.

2728. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

உபை இப்னு கஅப்(ரலி), ‘மூஸா, அல்லாஹ்வின் தூதரவார்.’.. என்று தொடங்கி, நபி(ஸல்) அவர்கள் (மூஸா (அலை) தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் கூறத் தொடங்கினார்கள்: களிரு(அலை) அவர்கள், ‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?’ என்று (மூஸா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் களிரு (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சேபித்து) முதல் முறையாகக் கேட்டது மறதியால் கேட்டதாகவும், நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகவும், மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகவும் இருந்தது.

(இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:)
‘நான் மறந்து போனதற்காக என்னைத் (திரும்பிப் போகச் சொல்லித் தண்டித்து விடாதீர்கள்.) என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
‘பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிறு) அவனைக் கொன்றுவிட்டார்.

‘மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். அங்கே அவர்கள் இருவரும் கீழே விழ இருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அவர் (களிரு), அதைச் செப்பனிட்டு

مُوسَى رَسُولُ اللَّهِ – فَذَكَرَ الحَدِيثَ – {قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا} [الكهف: 72]، كَانَتِ الأُولَى نِسْيَانًا، وَالوُسْطَى شَرْطًا، وَالثَّالِثَةُ عَمْدًا، {قَالَ: لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا} [الكهف: 73]، {لَقِيَا غُلاَمًا فَقَتَلَهُ} [الكهف: 74]، فَانْطَلَقَا، فَوَجَدَا {جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ، فَأَقَامَهُ} [الكهف: 77] ” قَرَأَهَا ابْنُ عَبَّاسٍ أَمَامَهُمْ مَلِكٌ


Bukhari-2727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 விவாகரத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.

சயீத் பின் முஸய்யப் (ரஹ்), ஹஸன் பஸரீ (ரஹ்), அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) ஆகியோர், (ஒருவன் தன் மனைவியிடம் நீ தலாக்; இப்படிச் செய்வாயானால் என்று) தலாக் என்னும் சொல்லை முந்திச் சொன்னாலும், அல்லது (இப்படிச் செய்வாயானால் நீ தலாக் என்று) அதைப் பிந்திச் சொன்னாலும், அவன் விதித்த நிபந்தனைக்கு அவன் உரியவனாவான் என்று கூறுகின்றனர்.

2727. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர் கொண்டு சரக்குகளை வாங்குவதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்துவிடும்படி நிபந்தனையிடுவதையும், தன் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, தானும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றி விடுவதையும், (ஆடு மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

முஆத்(ரஹ்) அவர்களும் அப்துஸ்ஸமத்(ரஹ்) அவர்களும் ஷுஅபா(ரஹ்) அவர்களிடமிருந்து இவ்வாறே அறிவித்தார்கள்.
Book : 54


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبْتَاعَ المُهَاجِرُ لِلْأَعْرَابِيِّ، وَأَنْ تَشْتَرِطَ المَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا، وَأَنْ يَسْتَامَ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَنَهَى عَنِ النَّجْشِ، وَعَنِ التَّصْرِيَةِ» تَابَعَهُ مُعَاذٌ، وَعَبْدُ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ، وَقَالَ غُنْدَرٌ، وَعَبْدُ الرَّحْمَنِ: نُهِيَ، وَقَالَ آدَمُ: نُهِينَا، وَقَالَ النَّضْرُ، وَحَجَّاجُ بْنُ مِنْهَالٍ: نَهَى


Bukhari-2726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 தன்னை விடுதலை செய்வதற்காகத் தன்னை விற்பதற்குச் சம்மதிக்கின்ற முகாத்தப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) தொடர்பான நிபந்தனைகளில் செல்லத் தக்கவை.

2726. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! என் எஜமானார்கள் என்னை விற்கப் போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்யுங்கள்’ என்று கூறினார். நான், ‘சரி (அப்படியே செய்வோம்)’ என்று கூறினேன்.

அவர், ‘என் எஜமானர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடாமல் என்னை விற்க மாட்டார்கள்’ என்றார். அதற்கு நான், ‘அப்படியென்றால் உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை’ என்று கூறினேன். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்ற போது… அல்லது இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டிய போது… அவர்கள், ‘பரீராவின் விஷயம் என்ன?’ என்று கேட்டுவிட்டு, ‘அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும்.

நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு’ என்று கூறினார்கள். எனவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்து விட்டேன். அவரின் எஜமானார்கள், ‘அவரின் வாரிசுரிமை எங்களுக்கே உரியது’ என்று நிபந்தனை விதித்தார்கள்.

دَخَلَتْ عَلَيَّ بَرِيرَةُ وَهِيَ مُكَاتَبَةٌ، فَقَالَتْ: يَا أُمَّ المُؤْمِنِينَ اشْتَرِينِي، فَإِنَّ أَهْلِي يَبِيعُونِي، فَأَعْتِقِينِي قَالَتْ: نَعَمْ، قَالَتْ: إِنَّ أَهْلِي لاَ يَبِيعُونِي حَتَّى يَشْتَرِطُوا وَلاَئِي، قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيكِ، فَسَمِعَ ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ بَلَغَهُ – فَقَالَ: «مَا شَأْنُ بَرِيرَةَ؟»، فَقَالَ: «اشْتَرِيهَا، فَأَعْتِقِيهَا وَلْيَشْتَرِطُوا مَا شَاءُوا»، قَالَتْ: فَاشْتَرَيْتُهَا، فَأَعْتَقْتُهَا وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَإِنِ اشْتَرَطُوا مِائَةَ شَرْطٍ»


Bukhari-2724 & 2725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 குற்றவியல் தண்டனைகளில் விதிக்கப் படக் கூடாத நிபந்தனைகள்.

2724 & 2725. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்’ என்று கூறினார்.

‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்’ என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்’ என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன்.

பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து

إِنَّ رَجُلًا مِنَ الأَعْرَابِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنْشُدُكَ اللَّهَ إِلَّا قَضَيْتَ لِي بِكِتَابِ اللَّهِ، فَقَالَ الخَصْمُ الآخَرُ: وَهُوَ أَفْقَهُ مِنْهُ، نَعَمْ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَأْذَنْ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قُلْ، قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، وَإِنِّي أُخْبِرْتُ أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ، وَوَلِيدَةٍ، فَسَأَلْتُ أَهْلَ العِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، الوَلِيدَةُ وَالغَنَمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، اغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا»، قَالَ: فَغَدَا عَلَيْهَا، فَاعْتَرَفَتْ، فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَتْ


Bukhari-2723

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 திருமணத்தில் விதிக்கப்படக் கூடாத நிபந்தனைகள்.

2723. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம், வாங்கும் எண்ணமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்கு கேட்க வேண்டாம். (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது.)

தன் சகோதரர் (ஒருவர்) வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தான் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம். தன் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம். ஒரு பெண், தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்வதற்காக தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்து விடுமாறு (தன் கணவனிடம்) கேட்க வேண்டாம். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 54


«لاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَزِيدَنَّ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ يَخْطُبَنَّ عَلَى خِطْبَتِهِ، وَلاَ تَسْأَلِ المَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَسْتَكْفِئَ إِنَاءَهَا»


Bukhari-2722

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 நிலக் குத்தகையில் விதிக்கப்படும் நிபந்தனைகள்

2722. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். எனவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டு வந்தோம். சில வேளைகளில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. எனவே, அவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹம்களுக்குப் பகரமாக குத்தகைக்கு விடவேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.
Book : 54


كُنَّا أَكْثَرَ الأَنْصَارِ حَقْلًا، فَكُنَّا نُكْرِي الأَرْضَ، فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ، وَلَمْ تُخْرِجْ ذِهِ، فَنُهِينَا عَنْ ذَلِكَ وَلَمْ نُنْهَ عَنِ الوَرِقِ


Bukhari-2721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 திருமண ஒப்பந்தத்தின் போது மஹ்ரை நிர்ணயிப்பதில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.

நிபந்தனைகள் விதிக்கப்படும் போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதை நிபந்தனையிட்டாயோ அது உனக்குண்டு என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது மருமகன் ஒருவரை (அபுல்ஆஸ் (ரலி) அவர்களை) நினைவு கூர்ந்து, ( அவரது மாமனாரான) தன்(னுடன் அவர் வைத்திருந்த) உறவு முறையில் நல்லவிதமாக நடந்து கொண்டதாக மிகவும் புகழ்ந்துரைத்தார்கள். அவர் என்னிடம் பேசிய போது உண்மையே பேசினார். எனக்கு வாக்களித்த போது, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார் என்று கூறினார்கள்.

2721. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான். என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
Book : 54


«أَحَقُّ الشُّرُوطِ أَنْ تُوفُوا بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الفُرُوجَ»


Bukhari-2720

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2720. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரதேசத்து நிலங்களை (அங்கிருந்த) யூதர்களுக்கு, ‘அதில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும்’ என்றும், ‘அதிலிருந்து வரும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது’ என்றும் நிபந்தனையிட்டுக் கொடுத்து விட்டார்கள்.
Book :54


«أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا»


Bukhari-2719

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 கொடுக்கல் வாங்கலில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.

2719. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம், ‘(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே பங்கிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என்று கூறவே, அன்சாரிகள், ‘நீங்கள் எங்களுக்கு பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்’ என்று (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். முஹாஜிர்கள் ‘செவியேற்றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந்தனையை  ஏற்றுக் கொண்டோம்) என்றார்கள்.
Book : 54


قَالَتِ الأَنْصَارُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَانِنَا النَّخِيلَ، قَالَ: «لاَ»، فَقَالَ: «تَكْفُونَا المَئُونَةَ وَنُشْرِكْكُمْ فِي الثَّمَرَةِ»، قَالُوا: سَمِعْنَا وَأَطَعْنَا


Bukhari-2718

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 வாகனத்தை விற்பவர் அதில் குறிப்பிட்ட தூரம் வரை சவாரி செய்து கொள்ள அனுமதி கேட்டு நிபந்தனையிட்டால் அது செல்லும்.

2718. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்துவிட்ட என்னுடைய ஒட்டகம் ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே, அது இதற்கு முன் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்னும் அளவிற்கு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘இதை எனக்கு ஓர் ஊக்கியாவுக்கு நீங்கள் விற்று விடுங்கள்’ என்று கேட்டார்கள். அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை அதில் நான் சவாரி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன்.

(அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.) நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்தபோது அந்த ஒட்டகத்தை நபி(ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்கக்) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), ‘உன் உட்டகத்தை நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. உன்னுடைய அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக்

أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ قَدْ أَعْيَا، فَمَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَضَرَبَهُ فَدَعَا لَهُ ، فَسَارَ بِسَيْرٍ لَيْسَ يَسِيرُ مِثْلَهُ، ثُمَّ قَالَ: «بِعْنِيهِ بِوَقِيَّةٍ»، قُلْتُ: لاَ، ثُمَّ قَالَ: «بِعْنِيهِ بِوَقِيَّةٍ»، فَبِعْتُهُ، فَاسْتَثْنَيْتُ حُمْلاَنَهُ إِلَى أَهْلِي، فَلَمَّا قَدِمْنَا أَتَيْتُهُ بِالْجَمَلِ وَنَقَدَنِي ثَمَنَهُ، ثُمَّ انْصَرَفْتُ، فَأَرْسَلَ عَلَى إِثْرِي، قَالَ: «مَا كُنْتُ لِآخُذَ جَمَلَكَ، فَخُذْ جَمَلَكَ ذَلِكَ، فَهُوَ مَالُكَ»،

قَالَ شُعْبَةُ: عَنْ مُغِيرَةَ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرٍ: أَفْقَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَهْرَهُ إِلَى المَدِينَةِ،

وَقَالَ إِسْحَاقُ: عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ: فَبِعْتُهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ، حَتَّى أَبْلُغَ المَدِينَةَ، وَقَالَ عَطَاءٌ، وَغَيْرُهُ: «لَكَ ظَهْرُهُ إِلَى المَدِينَةِ»

وَقَالَ مُحَمَّدُ بْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ: شَرَطَ ظَهْرَهُ إِلَى المَدِينَةِ،

وَقَالَ زَيْدُ بْنُ أَسْلَمَ: عَنْ جَابِرٍ: وَلَكَ ظَهْرُهُ حَتَّى تَرْجِعَ،

وَقَالَ أَبُو الزُّبَيْرِ: عَنْ جَابِرٍ: أَفْقَرْنَاكَ ظَهْرَهُ إِلَى المَدِينَةِ،

وَقَالَ الأَعْمَشُ: عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ: تَبَلَّغْ عَلَيْهِ إِلَى أَهْلِكَ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ، وَابْنُ إِسْحَاقَ: عَنْ وَهْبٍ، عَنْ جَابِرٍ: اشْتَرَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَقِيَّةٍ. وَتَابَعَهُ زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ جَابِرٍ،

قَالَ ابْنُ جُرَيْجٍ: عَنْ عَطَاءٍ، وَغَيْرِهِ، عَنْ جَابِرٍ: أَخَذْتُهُ بِأَرْبَعَةِ دَنَانِيرَ، «وَهَذَا يَكُونُ وَقِيَّةً عَلَى حِسَابِ الدِّينَارِ بِعَشَرَةِ دَرَاهِمَ وَلَمْ يُبَيِّنِ الثَّمَنَ»، مُغِيرَةُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرٍ، وَابْنُ المُنْكَدِرِ، وَأَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، وَقَالَ الأَعْمَشُ، عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ: وَقِيَّةُ ذَهَبٍ،

وَقَالَ أَبُو إِسْحَاقَ: عَنْ سَالِمٍ، عَنْ جَابِرٍ: بِمِائَتَيْ دِرْهَمٍ، وَقَالَ دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرٍ: اشْتَرَاهُ بِطَرِيقِ تَبُوكَ، أَحْسِبُهُ قَالَ: بِأَرْبَعِ أَوَاقٍ،

وَقَالَ أَبُو نَضْرَةَ: عَنْ جَابِرٍ: اشْتَرَاهُ بِعِشْرِينَ دِينَارًا ” وَقَوْلُ الشَّعْبِيِّ: بِوَقِيَّةٍ أَكْثَرُ الِاشْتِرَاطُ أَكْثَرُ وَأَصَحُّ عِنْدِي ” قَالَهُ أَبُو عَبْدِ اللَّهِ


Next Page » « Previous Page