Author: Farook

Bukhari-2685

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 29

இணைவைப்போர் சாட்சியம், முதலான காரியங்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

பிற சமுதாயங்களிடையே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர், மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக சாட்சியம் கூறினால் அது செல்லுபடியாகாது; ஏனெனில், அல்லாஹு தஆலா, நாம் அவர்களுக்கிடையே மறுமை நாள் வரை விரோதத்தையும், பொறாமையையும் விதைத்து விட்டோம் (5:14) என்று கூறுகிறான் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வேதக்காரர்களை உண்மைப்படுத்தவும் வேண்டாம்; பொய்ப்பிக்கவும் வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வையும், அவனால் அருளப் பெற்ற வேதங்களையும் நம்புகிறோம் என்று மட்டும் கூறுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


2685. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் கருத்துகள்) கலக்கப்படாத நிலையில் ஓதிக் கொண்டிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங்களின் விபரங்களைக்) கேட்கிறீர்கள்?

வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள். தங்கள் கைகளால் இறைவேதத்தை

يَا مَعْشَرَ المُسْلِمِينَ، كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الكِتَابِ، وَكِتَابُكُمُ الَّذِي أُنْزِلَ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثُ الأَخْبَارِ بِاللَّهِ، تَقْرَءُونَهُ لَمْ يُشَبْ، وَقَدْ حَدَّثَكُمُ اللَّهُ أَنَّ أَهْلَ الكِتَابِ بَدَّلُوا مَا كَتَبَ اللَّهُ وَغَيَّرُوا بِأَيْدِيهِمُ الكِتَابَ، فَقَالُوا: هُوَ مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا، أَفَلاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ العِلْمِ عَنْ مُسَاءَلَتِهِمْ، وَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلًا قَطُّ يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ


Bukhari-2684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2684. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

என்னிடம் ‘ஹீரா’வாசியான யூதர் ஒருவர், ‘மூஸா(அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்’ என்று கேட்டார். நான், ‘எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம் சென்று அவரிடம் கேட்கும் வரை (காத்திரு)’ என்று கூறினேன்.

அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள், ‘அவ்விரண்டில் அதிகமானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (எவராயிருப்பினும் அவர்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்’ என்று கூறினார்கள்.
Book :52


سَأَلَنِي يَهُودِيٌّ مِنْ أَهْلِ الحِيرَةِ أَيَّ الأَجَلَيْنِ قَضَى مُوسَى، قُلْتُ: لاَ أَدْرِي، حَتَّى أَقْدَمَ عَلَى حَبْرِ العَرَبِ فَأَسْأَلَهُ، فَقَدِمْتُ، فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ، فَقَالَ: «قَضَى أَكْثَرَهُمَا، وَأَطْيَبَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ فَعَلَ»


Bukhari-2683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2683. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), ‘யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)’ என்று கூறினார்கள்.

(இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், ‘எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்’ என்று கூறினேன். – ‘இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்’ என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் – அபூ பக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.
Book :52


لَمَّا مَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَ أَبَا بَكْرٍ مَالٌ مِنْ قِبَلِ العَلاَءِ بْنِ الحَضْرَمِيِّ، فَقَالَ أَبُو بَكْرٍ: «مَنْ كَانَ لَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَيْنٌ أَوْ كَانَتْ لَهُ قِبَلَهُ عِدَةٌ، فَلْيَأْتِنَا»، قَالَ جَابِرٌ: فَقُلْتُ: وَعَدَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْطِيَنِي هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا، فَبَسَطَ يَدَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ، قَالَ جَابِرٌ: فَعَدَّ فِي يَدِي خَمْسَ مِائَةٍ، ثُمَّ خَمْسَ مِائَةٍ، ثُمَّ خَمْسَ مِائَةٍ


Bukhari-2682

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2682. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :52


آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ


Bukhari-2681

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள்.

( அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54)

(கூஃபா நகர நீதிபதியான) இப்னு அஷ்வஃ (ரஹ்) அவர்கள், வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து (கேட்டுக்) கூறினார்.

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் ரபீஉ (ரலி) என்பாரை) நினைவு கூர்ந்து, அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார் என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

நான், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஃ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

2681. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்:

(ரோம

أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ: سَأَلْتُكَ مَاذَا يَأْمُرُكُمْ؟ فَزَعَمْتَ: «أَنَّهُ أَمَرَكُمْ بِالصَّلاَةِ، وَالصِّدْقِ، وَالعَفَافِ، وَالوَفَاءِ بِالعَهْدِ، وَأَدَاءِ الأَمَانَةِ»، قَالَ: وَهَذِهِ صِفَةُ نَبِيٍّ


Bukhari-2680

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 பிரதிவாதி சத்தியம் செய்த பிறகு வாதி ஆதாரம் கொண்டு வந்தால் (ஏற்கப்படுமா?)

நபி (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் மற்ற சிலரை விட தன் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுர்யம் அதிகமுள்ளவராக இருக்கலாம் என்று கூறினார்கள்.

நீதியான ஆதாரம், பொய்யான சத்தியத்தைக் காட்டிலும் (ஏற்றுக் கொள்ள) முன்னுரிமை பெற்றதாகும்என்று தாவூஸ் (ரஹ்), இப்ராஹீம் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்) ஆகியோர் கூறு கின்றார்கள்.

2680. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். எனவே, எவருடைய (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரின் சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். எனவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
Book : 52


إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا، بِقَوْلِهِ: فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْهَا


Bukhari-2679

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2679. ‘சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :52


«مَنْ كَانَ حَالِفًا، فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ»


Bukhari-2678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

சத்தியம் செய்வது எப்படி?

அல்லாஹ் கூறுகின்றான்:

அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிடுகின்றார்கள். (9:62,74)

பிறகு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும் இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை என்று சத்தியம் செய்து கொண்டு (நபியே!) உங்களிடம் வருவார்கள். (4:62)

சத்தியம் செய்யும் போது, பில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி இவற்றில் ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும். (இவையனைத்துமே அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற பொருளைத் தான் கொண்டுள்ளன.)

நபி (ஸல்) அவர்கள், அஸர் தொழுகைக்குப் பிறகு பொய் கூறியவனாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த ஒரு மனிதன் என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யக் கூடாது.

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) கூறினார்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)’ என்று பதில் கூறினார்கள். அவர், ‘இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?’ என்று கேட்க, ‘இல்லை;

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا هُوَ يَسْأَلُهُ عَنِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَمْسُ صَلَوَاتٍ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ»، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَّوَّعَ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ»، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَّوَّعَ»، قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ تَطَّوَّعَ»، فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا، وَلاَ أَنْقُصُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ إِنْ صَدَقَ»


Bukhari-2676 & 2677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2676 & 2677. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.

‘ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ்(ரலி) என்னைச் சந்தித்து, ‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?’ என்று கேட்க, நான். ‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்’ என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது’ என்று கூறினார்கள்.
Book :52


مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبًا لِيَقْتَطِعَ مَالَ رَجُلٍ – أَوْ قَالَ: أَخِيهِ – لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ” وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَ ذَلِكَ فِي القُرْآنِ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]- الآيَةَ إِلَى قَوْلِهِ: – {عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]،

فَلَقِيَنِي الأَشْعَثُ، فَقَالَ: مَا حَدَّثَكُمْ عَبْدُ اللَّهِ اليَوْمَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: فِيَّ أُنْزِلَتْ


Bukhari-2675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 அல்லாஹ் கூறுகிறான்:

எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது. (3:77)

2675. அபூ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (கடைத் தெருவில்) தம் சரக்கை (மக்கள் முன்) வைத்து, அல்லாஹ்வின் பெயரால் சத்தியமிட்டு, அதற்கு அவர் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அப்போது மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) இறைவசனம் அருளப்பட்டது.
Book : 52


«أَقَامَ رَجُلٌ سِلْعَتَهُ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا مَا لَمْ يُعْطِهَا»، فَنَزَلَتْ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77]

وَقَالَ ابْنُ أَبِي أَوْفَى: «النَّاجِشُ آكِلُ رِبًا خَائِنٌ»


Next Page » « Previous Page