Author: Farook

Bukhari-2674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 பிரமாண வாக்குமூலம் தர வேண்டிய ஒரு சமுதாயத்தார் அதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டால்…. (குலுக்கல் முறை கையாளப்படும்.)

2674. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
Book : 52


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ اليَمِينَ، فَأَسْرَعُوا فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي اليَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ»


Bukhari-2673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 பிரதிவாதியின் மீது சத்தியம் செய்வது கட்டாயமாகி விடும் இடத்தில் அவன் சத்தியம் செய்வான். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அவனைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.

(ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் மிம்பரின் மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள், நான் என்னிடத்தில் இருந்தபடியே சத்தியம் செய்வேன் என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்து விட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள், உனது இரு சாட்சிகளும், அவரது சத்தியமும் என்று தான் கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு (இன்ன இடத்தில் செய்யும் சத்தியம் என்று) கூறவில்லை.

2673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிரமாண வாக்குமூலத்தின் போது) ஒரு செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற

«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ لِيَقْتَطِعَ بِهَا مَالًا، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»


Bukhari-2672

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது.

2672. ‘மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது.

ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் உள்ள (தன் உபயோகத்திற்குப் போக, தேவைக்கு மேலுள்ள) மீதமான தண்ணீரை வழிப் போக்கர்களுக்குத் (தராமல்) தடுத்துக் கொள்ளும் மனிதராவார்.

மற்றொருவர், உலக லாபங்களுக்காக மட்டும் ஓர் ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவராவார். அவர் தனக்கு, தான் விரும்புவதைக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்து கொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.

இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 52


ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِطَرِيقٍ، يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ رَجُلًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ وَإِلَّا لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلًا بِسِلْعَةٍ بَعْدَ العَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أَعْطَى بِهَا كَذَا وَكَذَا فَأَخَذَهَا


Bukhari-2671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2671. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்’ என்று மீண்டும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அறிவித்து விட்டு இப்னு அப்பாஸ்(ரலி) ‘லிஆன்’ தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்.
Book :52


أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرِيكِ ابْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البَيِّنَةُ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلًا، يَنْطَلِقُ يَلْتَمِسُ البَيِّنَةَ؟ فَجَعَلَ يَقُولُ: «البَيِّنَةَ وَإِلَّا حَدٌّ فِي ظَهْرِكَ» فَذَكَرَ حَدِيثَ اللِّعَانِ


Bukhari-2669 & 2670

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2669 & 2670. அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

‘ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை (மறுமையில் அவர் சந்திப்பார்)’ (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், ‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்.மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது’ என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:

பிறகு அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?’ என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதைத் தெரிவித்தோம். அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் அருளப்பட்டது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், ‘உன்னுடைய இரண்டு சாட்சிகள்

مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالًا لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ، ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ} [آل عمران: 77] إِلَى {عَذَابٌ أَلِيمٌ} [آل عمران: 77]، ثُمَّ إِنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ خَرَجَ إِلَيْنَا، فَقَالَ مَا يُحَدِّثُكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فَحَدَّثْنَاهُ بِمَا قَالَ: فَقَالَ صَدَقَ، لَفِيَّ أُنْزِلَتْ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ خُصُومَةٌ فِي شَيْءٍ، فَاخْتَصَمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «شَاهِدَاكَ أَوْ يَمِينُهُ» فَقُلْتُ لَهُ: إِنَّهُ إِذًا يَحْلِفُ وَلَا يُبَالِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَسْتَحِقُّ بِهَا مَالًا، وَهُوَ فِيهَا فَاجِرٌ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ ثُمَّ اقْتَرَأَ هَذِهِ الآيَةَ


Bukhari-2668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2668. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

பிரதிவாதி தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ்(ரலி) எனக்கு (கடிதம்) எழுதினார்கள்.
Book :52


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِاليَمِينِ عَلَى المُدَّعَى عَلَيْهِ»


Bukhari-2667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில்-கிரிமினல்) விவகாரங்களில், (தான் நிரபராதி என்று) சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதே கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உனது இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (ஆகியன இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன) என்று சொன்னார்கள்.

மேலும், இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரேயொருவரின் சாட்சியம் மற்றும் வாதியின் சத்தியம் குறித்து, அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கருத்துக் கேட்ட போது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்.

அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவதற்காக. (2:282)

ஒரு சாட்சியுடன் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் (துணையாக மற்றொரு சாட்சி) தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்? என்று (புகாரீயாகிய) நான் கேட்கிறேன்.

2667. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِاليَمِينِ عَلَى المُدَّعَى عَلَيْهِ»


Bukhari-2666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம், உனக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பது.

2666. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சொல்லி சத்தியம் செய்கிறவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை மறுமையில் சந்திப்பார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (வந்து), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி(ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று என்னைக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். எனவே, அந்த யூதரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்’ என்று கூறினார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியென்றால், அவன் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தை எடுத்துச் சென்று விடுவானே’ என்று கூறினேன். அப்போதுதான்,

‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும்

«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهُوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»،

قَالَ: فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ: فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ اليَهُودِ أَرْضٌ، فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ بَيِّنَةٌ»، قَالَ: قُلْتُ: لاَ، قَالَ: فَقَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي،

قَالَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ الآيَةِ


Bukhari-2665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2665. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ’ நாளில் குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :52


«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


Bukhari-2664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 குழந்தைகள் பருவமடைவதும், அவர்களுடைய சாட்சியமும்.

அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கேட்கிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59)

நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்த போது பருவமடைந்தேன் என்று சட்ட நிபுணர் முகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் பருவ வயதை அடைவது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதாகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப் போவதில்லை என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களைக் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், (தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாத விலக்கு வரவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இது தான் .)

மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகின்றது. (65:4)

ஹஸன் பின் சாலிஹ் (ரஹ்) கூறினார்கள்: எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி 21 வயதிலெல்லாம் பாட்டியாகி விட்டதை நான் கண்டேன்.

2664. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَهُ يَوْمَ أُحُدٍ، وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي ثُمَّ عَرَضَنِي يَوْمَ الخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي»، قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ وَهُوَ خَلِيفَةٌ، فَحَدَّثْتُهُ هَذَا الحَدِيثَ فَقَالَ: «إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالكَبِيرِ، وَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ بَلَغَ خَمْسَ عَشْرَةَ»


Next Page » « Previous Page