Author: Farook

Bukhari-2529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செயல்கள் (அனைத்துமே) எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந்தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும், அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாராயின் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமைந்திருக்கும்.

அவரின் ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக்காகவோ, அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.
என உமர் பின் கத்தாப் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 49


«الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Bukhari-2528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

அடிமையை விடுதலை செய்தல், விவாகரத்து செய்தல் போன்றவற்றில் நேரும் தவறும் மறதியும்; மேலும், அல்லாஹ்வின் திருப்திக்காகவே தவிர அடிமையை விடுதலை செய்வது கூடாது என்பதும்.

ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், (ஒன்றை) மறந்து விட்டவனுக்கும், தவறுதலாகச் செய்து விட்டவனுக்கும் நிய்யத் (எண்ணம்) என்பதே கிடையாது.

2528. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 49


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ»


Bukhari-2527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2527. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமையில் (தனக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறவரிடம் (போதிய) செல்வம் இருக்குமாயின் அவரின் செல்வத்திலிருந்து அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும்.

(அவரிடம் போதிய செல்வம்) இல்லையெனில், அவ்வடிமையின் (நியாயமான விலை மதிப்பிடப்பட்டு மீதிப் பங்குகளின் விலையைத் தருவதற்காக) உழைத்து (சம்பாதித்து)க் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரக்கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :49


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَعْتَقَ نَصِيبًا – أَوْ شَقِيصًا – فِي مَمْلُوكٍ، فَخَلاَصُهُ عَلَيْهِ فِي مَالِهِ، إِنْ كَانَ لَهُ مَالٌ، وَإِلَّا قُوِّمَ عَلَيْهِ، فَاسْتُسْعِيَ بِهِ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ»


Bukhari-2526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 (பலருக்கும்) கூட்டான ஓர் அடிமையில் தனது பங்கை மட்டும் விடுதலை செய்த ஒருவரிடம் (அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்யப் போதுமான) செல்வம் இல்லையென்றால் விடுதலைப் பத்திரத்தில் எழுதியுள்ளபடி அந்த அடிமை (தன்னை முழுமையாக விடுதலை செய்து கொள்ளத் தேவையான செல்வத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்காக) உழைக்க அனுமதிக்கப்பட வேண்டும்; அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரக் கூடாது.

2526. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமையிலிருந்து (தன்னுடைய) பங்கை விடுதலை செய்தவர்.. (தன்னிடம் போதிய) செல்வம் இருக்குமாயின் அந்த அடிமை(யின் மற்ற பங்குகள்) முழுவதையும் விடுதலை செய்யட்டும். இல்லையெனில் அவ்வடிமை, (மீதிப் பங்குகளுக்கான விலையைத் தந்து முழு விடுதலை பெற்றுக் கொள்வதற்காக) உழைத்து(ச் சம்பாதித்து)க் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அவன் மீது அதிகச் சிரமத்தை சுமத்தக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 49


«مَنْ أَعْتَقَ شَقِيصًا مِنْ عَبْدٍ»


Bukhari-2525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2525. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான (சொத்தாக இருக்கும்) ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தன்னுடைய பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்யும் விஷயத்தில் இப்னு உமர்(ரலி) மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தார்கள்.

அத்தீர்ப்பில், ‘(தன்னுடைய பங்கை) விடுதலை செய்தவர் மீது அவ்வடிமையை ஒத்த (மற்றோர் அடிமையின்) விலை மதிப்பிடப்பட்டு அந்த அளவிற்குச் செல்வம் அவரிடம் இருக்குமாயின் அவ்வடிமையை முழுவதுமாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும்.

(அவரின் மற்ற) கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்கு (களுக்கான விலை)கள் கொடுக்கப்பட்டு விடவேண்டும். விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று சொல்லி வந்தார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர்(ரலி) அறிவித்து வந்தார்கள்.
Book :49


أَنَّهُ كَانَ يُفْتِي فِي العَبْدِ أَوِ الأَمَةِ يَكُونُ بَيْنَ شُرَكَاءَ، فَيُعْتِقُ أَحَدُهُمْ نَصِيبَهُ مِنْهُ يَقُولُ: قَدْ وَجَبَ عَلَيْهِ عِتْقُهُ كُلِّهِ إِذَا كَانَ لِلَّذِي أَعْتَقَ مِنَ المَالِ مَا يَبْلُغُ يُقَوَّمُ مِنْ مَالِهِ قِيمَةَ العَدْلِ، وَيُدْفَعُ إِلَى الشُّرَكَاءِ أَنْصِبَاؤُهُمْ، وَيُخَلَّى سَبِيلُ المُعْتَقِ


Bukhari-2524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2524. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்தவரிடம் அவ்வடிமையையொத்த மற்றோர் அடிமையின் விலையை எட்டுகிற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்பட வேண்டும்.

மேலும், ‘அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால் அவர் விடுதலை செய்த (அந்தப் பங்கின்) அளவிற்கே அந்த அடிமையை விடுதலை செய்தவராவார்’ என்று நாஃபிஉ(ரஹ்) கூறினார்’ என்று சொல்லிவிட்டு,

‘இந்தக் கடைசி வாசகத்தை நாஃபிஉ(ரஹ்) கூறினார்களா அல்லது அது ஹதீஸின ஒரு பகுதியா என்று எனக்குத் தெரியாது’ என்று அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்) சொன்னார்கள்.
Book :49


«مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ فِي مَمْلُوكٍ أَوْ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، وَكَانَ لَهُ مِنَ المَالِ مَا يَبْلُغُ قِيمَتَهُ بِقِيمَةِ العَدْلِ، فَهُوَ عَتِيقٌ» قَالَ نَافِعٌ: وَإِلَّا فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ، قَالَ أَيُّوبُ: لاَ أَدْرِي أَشَيْءٌ قَالَهُ نَافِعٌ، أَوْ شَيْءٌ فِي الحَدِيثِ


Bukhari-2523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2523. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமையின் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவர் தன்னிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்து விட வேண்டும்.

அந்த அடிமைக்கு ஒத்த (மற்றோர் அடிமையின்) விலையை மதிப்பிட்ட பின் (அவனுடைய மற்றப் பங்குகளையும்) விடுதலை செய்யும் அளவிற்கு அவரிடம் செல்வம் இல்லையென்றால் அவர் விடுதலை செய்த அந்த (அவரின் பங்கின்) அளவிற்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :49


«مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي مَمْلُوكٍ، فَعَلَيْهِ عِتْقُهُ كُلُّهُ إِنْ كَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَهُ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَالٌ يُقَوَّمُ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ، فَأُعْتِقَ مِنْهُ مَا أَعْتَقَ»


Bukhari-2522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2522. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும்.

இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :49


«مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ العَبْدِ قُوِّمَ العَبْدُ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ، وَعَتَقَ عَلَيْهِ العَبْدُ، وَإِلَّا فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ»


Bukhari-2521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்.

2521. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால் அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு (மீதி விலையும் செலுத்தப்பட வேண்டும்;) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 49


«مَنْ أَعْتَقَ عَبْدًا بَيْنَ اثْنَيْنِ، فَإِنْ كَانَ مُوسِرًا قُوِّمَ عَلَيْهِ ثُمَّ يُعْتَقُ»


Bukhari-2520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2520. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம்.
Book :49


«كُنَّا نُؤْمَرُ عِنْدَ الخُسُوفِ بِالعَتَاقَةِ»


Next Page » « Previous Page