Author: Farook

Bukhari-2465

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 வீட்டு முற்றத்தில் அமர்வதும், பாதைகளில் அமர்வதும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் வீட்டின் முற்றத்தில் தொழும் இடத்தை அமைத்துக் கொண்டு, அதில் தொழுது கொண்டும் குர்ஆன் ஓதிக் கொண்டும் இருந்தார்கள். இணைவைப்பவர்களின் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சுற்றிலும் நெரிசலாகத் திரண்டு, அவர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டபடி நின்று கொண்டிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது மக்கா நகரில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.

2465. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

‘நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும் போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம்

«إِيَّاكُمْ وَالجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ»، فَقَالُوا: مَا لَنَا بُدٌّ، إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا، قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا المَجَالِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا»، قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ؟ قَالَ: «غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلاَمِ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ، وَنَهْيٌ عَنِ المُنْكَرِ»


Bukhari-2464

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 சாலையில் மதுவை ஊற்றுவது.

2464. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ தல்ஹா(ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, ‘(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது’ என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அபூ தல்ஹா(ரலி) என்னிடம், ‘வெளியே சென்று இதை ஊற்றிவிடு’ என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், ‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)’ என்று கேட்டார்கள்.

அப்போதுதான், ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்களின் மீது குற்றமில்லை’ (திருக்குர்ஆன் 05:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.
Book : 46


كُنْتُ سَاقِيَ القَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، وَكَانَ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الفَضِيخَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا يُنَادِي: «أَلاَ إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ» قَالَ: فَقَالَ لِي أَبُو طَلْحَةَ: اخْرُجْ، فَأَهْرِقْهَا، فَخَرَجْتُ فَهَرَقْتُهَا، فَجَرَتْ فِي سِكَكِ المَدِينَةِ، فَقَالَ بَعْضُ القَوْمِ: قَدْ قُتِلَ قَوْمٌ وَهِيَ فِي بُطُونِهِمْ، فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} [المائدة: 93] الآيَةَ


Bukhari-2463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில் தனது அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டையைப் பதிப்பதைத் தடுக்கலாகாது.

2463. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர் முஸ்அல் அஃரஜ்(ரஹ்) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்’ என்று கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) சொல்லிவிட்டு,

‘என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்’ என்று கூறுவார்கள்.
Book : 46


«لاَ يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَهُ فِي جِدَارِهِ»، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: «مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ، وَاللَّهِ لَأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ»


Bukhari-2462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 சாவடிகள்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பனூ சாயிதா குலத்தாரின் சாவடியில் அமர்ந்தார்கள்.

2462. உமர்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை மரணிக்கச் செய்தபோது, அன்சாரிகள் பனூசாயிதா சாவடியில் ஒன்றுகூடிவிட்டார்கள். நான் அபூ பக்ரு(ரலி) அவர்களை, ‘எங்களுடன் வாருங்கள்’ என்று அழைத்தேன். நாங்கள் அன்சாரிகளிடம் பனூ சாயிதா (குலத்தாரின் பஞ்சாயத்துச்) சாவடிக்குச் சென்றோம்.
Book : 46


إِنَّ الأَنْصَارَ اجْتَمَعُوا فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَقُلْتُ لِأَبِي بَكْرٍ: انْطَلِقْ بِنَا فَجِئْنَاهُمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ


Bukhari-2461

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2461. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.
Book :46


قُلْنَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكَ تَبْعَثُنَا، فَنَنْزِلُ بِقَوْمٍ لاَ يَقْرُونَا، فَمَا تَرَى فِيهِ؟ فَقَالَ لَنَا: «إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ ، فَأُمِرَ لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا، فَإِنْ لَمْ يَفْعَلُوا، فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ»


Bukhari-2460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 18

அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைத்தால், பொருளை இழந்தவன், தான் இழந்த பொருளுக்குப் பதிலாக அதை எடுத்துக் கொள்ளல்.

மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால் உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள். (16:126) எனும் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிவிட்டு இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள், இந்த வசனத்தில் ஆகிபூ என்னும் சொல் பதிலாக எடுத்துக் கொள்வதைக் குறிக்கின்றது என்று கூறினார்கள்.

2460. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூசுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தை குட்டிகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 46


جَاءَتْ هِنْدُ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا؟ فَقَالَ: «لاَ حَرَجَ عَلَيْكِ أَنْ تُطْعِمِيهِمْ بِالْمَعْرُوفِ»


Bukhari-2459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 வழக்காடினால் அவமதிப்பான்

2459. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 46


أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا – أَوْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ أَرْبَعَةٍ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ – حَتَّى يَدَعَهَا: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ


Bukhari-2458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 16

அறிந்து கொண்டே தவறுக்காக வழக்காடுபவனின் பாவம்.

2458. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, ‘நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம்.

அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 46


أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ، وَإِنَّهُ يَأْتِينِي الخَصْمُ، فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ، فَأَحْسِبُ أَنَّهُ صَدَقَ، فَأَقْضِيَ لَهُ بِذَلِكَ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ، فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنَ النَّارِ، فَلْيَأْخُذْهَا أَوْ فَلْيَتْرُكْهَا»


Bukhari-2457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 அல்லாஹ் கூறுகிறான்: அவன் மிகவும் சச்சரவு செய்யும் (சண்டை பிடிக்கும்) வழக்கமுடையவனாக இருக்கிறான். (2:204)

2457. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 46


«إِنَّ أَبْغَضَ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الخَصِمُ»


Bukhari-2456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2456. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘அபூ ஷுஐப்’ என்றழைக்கப்பட்ட அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சிக் கடை வைத்திருந்த ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூ ஷுஐப்(ரலி), ‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய். நான் ஐந்தாவதாக நபி(ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்’ என்று கூறினார்.

அவர்கள் நபி(ஸல்) அவர்களின் திருமுகத்தில் பசியின் அடையாள(மாக வாட்ட)த்தைப் பார்த்திருந்தார்கள். எனவே, அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களுடன் வந்திருந்தவர்களுடனும் விருந்துக்கு அழைக்கப்படாத ஒருவர் சேர்ந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அபூ ஷுஐப்(ரலி) அவர்களிடம்), ‘இவர் எங்களைப் பின் தொடர்ந்து வந்துவிட்டார். இவருக்கு (இந்த விருந்தில் கலந்து கொள்ள) நீங்கள் அனுமதியளிக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘ஆம் (அனுமதியளிக்கிறேன்)’ என்று பதில் கூறினார்கள்.
Book :46


أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو شُعَيْبٍ، كَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ، فَقَالَ لَهُ أَبُو شُعَيْبٍ: اصْنَعْ لِي طَعَامَ خَمْسَةٍ لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَامِسَ خَمْسَةٍ، وَأَبْصَرَ فِي وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الجُوعَ، فَدَعَاهُ فَتَبِعَهُمْ رَجُلٌ لَمْ يُدْعَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا قَدِ اتَّبَعَنَا، أَتَأْذَنُ لَهُ؟»، قَالَ: نَعَمْ


Next Page » « Previous Page