Author: Farook

Bukhari-2455

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 இருவருக்கு (கூட்டு) உரிமையுள்ள ஒரு விசயத்தில் ஒருவர் மற்றவருக்கு சற்று அதிகமாகப் பயன் பெற்றுக் கொள்ள அனுமதியளித்தால் அது செல்லும்.

2455. ஜபலா இப்னு ஸூஹைம்(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள்.

அப்போது, ‘இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரிடம் அனுமதி பெற்றாலே தவிர’ என்று கூறுவார்கள்.
Book : 46


كُنَّا بِالْمَدِينَةِ فِي بَعْضِ أَهْلِ العِرَاقِ فَأَصَابَنَا سَنَةٌ، فَكَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ فَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَمُرُّ بِنَا فَيَقُولُ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  نَهَى عَنِ الإِقْرَانِ، إِلَّا أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ»


Bukhari-2454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2454. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :46


«مَنْ أَخَذَ مِنَ الْأَرْضِ شَيْئًا بِغَيْرِ حَقِّهِ خُسِفَ بِهِ يَوْمَ القِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ»


Bukhari-2453

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2453. அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்.

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன்.

அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்’ என்று கூறினார்கள்.
Book :46


كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فَذَكَرَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: يَا أَبَا سَلَمَةَ اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Bukhari-2452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

(பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவனின் பாவம்.

2452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)

Book : 46


«مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Bukhari-2451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 ஒருவர் தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மன்னித்து விட்டார். ஆனால் மன்னிக்கும் போது, தனது அந்த உரிமை எவ்வளவு என்று குறிப்பிடவில்லை என்றால்…… (செல்லுமா?)

2451. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலப்பக்கம் ஒரு சிறுவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்த பானத்தை) இவர்களிடம் (வயது முதிர்ந்தவர்களிடம்) கொடுக்க நீ எனக்கு அனுமதி தருவாயா?’ என்று கேட்டார்கள்.

அந்தச் சிறுவர், ‘மாட்டேன், இறைவன் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று கூறினார். எனவே, இறைத்தூதர் அச்சிறுவரின் கரத்தில் அந்த பானத்தை வைத்தார்கள்.
Book : 46


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِشَرَابٍ، فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ وَعَنْ يَسَارِهِ الأَشْيَاخُ، فَقَالَ لِلْغُلاَمِ: «أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلاَءِ؟»،

فَقَالَ الغُلاَمُ: لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا، قَالَ: فَتَلَّهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِ


Bukhari-2450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அல்லது தனது உரிமையை மன்னித்து விட்ட பிறகு மன்னிப்பைத் திரும்பப் பெறக் கூடாது.

2450. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

ஒரு பெண் தன் கணவன் தன்னிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, (தன்னைப்) புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை’ என்கிற திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 04:128 ஆம்) வசனத்தைப் பற்றி ஆயிஷா(ரலி) கூறும்போது,

‘ஒருவர் தன் மனைவியிடம் (தாம்பத்திய) உறவை நாடி அதிகமாக வந்து செல்லாமல் தன் மனைவியைப் பிரிந்து (எவனுடைய நாளில் வேறொரு மனைவியிடம் சென்று) விட வேண்டும் என்று விரும்புகிற நிலையில் அவரின் மனைவி ‘என் (தாம்பத்திய உரிமைகள்) விஷயத்தில் (நான்விட்டுக் கொடுத்து) உம்மை மன்னித்து விடுகிறேன்’ என்று கூறினார். அப்போதுதான் இந்த இறைவசனம் அருளப்பட்டது’ என்று குறிப்பிட்டார்கள்.
Book : 46


فِي هَذِهِ الآيَةِ: {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} [النساء: 128] قَالَتْ: ” الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ المَرْأَةُ، لَيْسَ بِمُسْتَكْثِرٍ مِنْهَا، يُرِيدُ أَنْ يُفَارِقَهَا، فَتَقُولُ: أَجْعَلُكَ مِنْ شَأْنِي فِي حِلٍّ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ


Bukhari-2449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 ஒருவர் ஒரு மனிதருக்கு அநீதியிழைத்திருந்து அதை அவர் மன்னிக்க முன் வந்தால் (அப்படி மன்னிக்கும் போது அநீதியிழைத்தவர்) தான் செய்த அநீதியை இன்னதென்று தெளிவாகக் கூற வேண்டுமா?

2449. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும்.

தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 46


«مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ، فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ اليَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ  دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ»


Bukhari-2448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

அநீதியிழைக்கப்பட்டவரின் முறையீட்டு(சாப)ப் பிரார்த்தனைக்கு அஞ்சுவதும் அதைத் தவிர்ப்பதும்.

2448. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள்.

ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

அத்தியாயம்: 46


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى اليَمَنِ، فَقَالَ: «اتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ»


Bukhari-2447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அக்கிரமக்காரனைப் பழிவாங்குதல்.

அல்லாஹ் கூறுகிறான்:

அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறு வோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (4:148)

மேலும், அவர்கள் (நம்பிக்கையாளர்கள்) தங்கள் மீது அநீதியிழைக்கப்படும் போது அதை எதிர்த்துப் போராடுகின்றார்கள். (42:39)

வர்கள் இழிவுபடுத்தப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தனர். அவர்கள் பழிவாங்கும் சக்தியுடையவர்களாக மாறும் போது மன்னித்து விடுவார்கள் என்று இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் (இந்த வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.

பாடம் : 7 அக்கிரமக்காரனை மன்னித்தல்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஆனால், நீங்கள் வெளிப்படையாக வும் மறைவாகவும் நற்செயலைச் செய்த வண்ணம் இருந்தால், அல்லது குறைந்த பட்சம் அக்கிரமக்காரர்களின் தீங்கை மன்னித்து விட்டால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கிறான். (என்றாலும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். (4:149)

தீமையின் பலன் அதே போன்ற தீமையே ஆகும். இனி, எவர் மன்னித்து விடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம்

«الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-2446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2446. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது.

(இப்படிக் கூறும்போது) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :46


«المُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ


Next Page » « Previous Page