பாடம்: 5
அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுதல்
2445. பராஉ பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
- நோயாளிகளை நலம் விசாரிப்பது.
- ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
- தும்மியவருக்கு அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (‘அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’ என்று) சொன்னால், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
- ஸலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
- அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
- விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
- சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
அத்தியாயம்: 46
أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ، وَنَهَانَا عَنْ سَبْعٍ فَذَكَرَ: عِيَادَةَ المَرِيضِ، وَاتِّبَاعَ الجَنَائِزِ، وَتَشْمِيتَ العَاطِسِ، وَرَدَّ السَّلاَمِ، وَنَصْرَ المَظْلُومِ، وَإِجَابَةَ الدَّاعِي، وَإِبْرَارَ المُقْسِمِ
சமீப விமர்சனங்கள்