Author: Farook

Bukhari-2404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


«أَنَّهُ ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ، سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى»، فَذَكَرَ الحَدِيثَ


Bukhari-2403

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 கடன் கொடுத்தவரிடம், நாளை வாருங்கள், நாளை வாருங்கள் என்று தவணை சொல்லித் தாமதப்படுத்துவதும், அதை இழுத்தடிப்பதாகக் கருதாமல் இருப்பதும்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்காரர்கள், தங்களிடம் என் தந்தை வாங்கிய கடன் தொடர்பான தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக (என்னிடம் கெடுபிடியாக நடந்து) கடுமை காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தோட்டத்தின் பேரீச்சங் கனிகளை (தங்கள் கடனுக்குப் பகரமாக)ப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கும் படி அவர்களிடம் (எனக்காகக்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் என் தோட்டத்தை (அவர்களே கனிகள் பறித்துக் கொள்ளும்படி) கொடுக்கவுமில்லை; தாமே கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, நாளை உங்களிடம் வருகிறேன் என்று (எங்களிடம்) கூறி விட்டு மறுநாள் காலை எங்களிடம் வந்தார்கள். அப்போது என் தோட்டத்துக் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்)திற்காக துஆ செய்தார்கள். ஆகவே, (பிறகு) நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களுக்குத் தரவேண்டிய கடனைத் தீர்த்தேன்.

பாடம் : 16 திவாலாகி விட்டவனுடைய பொருளை விற்றுக் கடன்காரர்களிடையே அதைப் பங்கிட்டு விடுவது; அல்லது ஓர் ஏழையின் பொருளை விற்று (அந்த ஏழை)

أَعْتَقَ رَجُلٌ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي؟»، فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، فَأَخَذَ ثَمَنَهُ، فَدَفَعَهُ إِلَيْهِ


Bukhari-2402

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 திவாலாகி விட்டவரிடம்-ஏற்கனவே ஒரு பொருளைக் கடனுக்கு விற்றவர் அப்பொருளைக் கண்டாலோ,அதே போல கடன் கொடுத்தவர் அந்தக் கடன் தொகையைக் கண்டாலோ அல்லது அடைக்கலப் பொருளைக் கொடுத்தவர் அப்பொருளைக் கண்டாலோ அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன் காரர்களை விட அவருக்கே அதிக உரிமையுண்டு.

ருவர் திவாலாகி அது (நீதி மன்றத்தில்) நிரூபணமாகியும் விட்டால் அவர் ஓர் அடிமையை விடுதலை செய்தாலும் அது செல்லுபடியாகாது. அவர் எதையும் விற்றாலும் வாங்கினாலும் செல்லுபடியாகாது ; என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் திவாலாவதற்கு முன்பே அவரிடமிருந்து தனக்குரிய பொருளை யார் திருப்பி வாங்கிக் கொண்டாரோ, அவருக்கே அப்பொருள் சொந்தமாகும். மேலும், திவாலாகிப் போனவரிடம் தன்னுடைய பொருளை அப்படியே ஒருவர் காண்பாராயின் அதை எடுத்துக் கொள்ள (மற்ற கடன்காரர்களை விட) அவரே அதிக உரிமையுடையவர் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். இதை சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே

«مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ – أَوْ إِنْسَانٍ – قَدْ أَفْلَسَ فَهُوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ»


Bukhari-2401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு.

மேலும், வசதியுள்ளவர் (கடனைத் தீர்க்காமல்) இழுத்தடித்துக் கொண்டே சென்றால் அதற்காக அவருக்கு தண்டனை அளிப்பதும் அவரது மானத்தை வாங்குவதும் செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

(பலர் முன்னிலையில்,) நீ எனக்குத் தரவேண்டிய கடனை அடைக்காமல் இழுத்தடிக்கின்றாய் என்று கூறுவதே கடனாளியின் மானத்தை வாங்குவதாகும்; அவனைச் சிறையில் தள்ளுவதே அவனுக்குத் தரும் தண்டனையாகும் என்று சுஃப்யான் சவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

2401. நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு’ என்று கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ يَتَقَاضَاهُ، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ: «دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الحَقِّ مَقَالًا»


Bukhari-2400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 வசதியிருந்தும் கடனை (உடனடியாக) அடைக்காமல் (தவணை சொல்லி) இழுத்தடிப்பது அநியாயமாகும்.

2400. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43


«مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ»


Bukhari-2399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2399. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

……..

 

 

ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தன்னைத் தவிர வேறு திக்கற்ற) தன் மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும்.      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  مَا مِنْ مُؤْمِنٍ إِلَّا وَأَنَا أَوْلَى بِهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اقْرَءُوا إِنْ شِئْتُمْ: {النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ} [الأحزاب: 6]

فَأَيُّمَا مُؤْمِنٍ مَاتَ وَتَرَكَ مَالًا فَلْيَرِثْهُ عَصَبَتُهُ مَنْ كَانُوا، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا، فَلْيَأْتِنِي فَأَنَا مَوْلاَهُ


Bukhari-2398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழுதல்.

2398. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தன்னைத் தவிர வேறு திக்கற்ற) தன் மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும்.      என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 43


«مَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلًّا فَإِلَيْنَا»


Bukhari-2397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்.

2397. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, ‘இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறுவார்கள்.

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 43


كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ»، فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ المَغْرَمِ؟ قَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»


Bukhari-2396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

கடனை அடைக்கும் போது (கடனாகப் பெற்ற) பேரீச்சம் பழத்திற்கோ வேறொரு தானியத்திற்கோ அதே அளவு பேரீச்சம் பழத்தை அளந்து (அல்லது எடை போட்டுக்) கொடுத்தால் அல்லது (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும் பட்சத்தில்) குத்து மதிப்பாகக் கணக்கிட்டுக் கொடுத்தால் அது செல்லும்.

2396. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

என் தந்தையார் (உஹுதுப் போரில் ஷஹீதாக) மரணித்துவிட்டார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய (கடனாக) முப்பது வஸக்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள். அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதரிடம் நான் கேட்டுக் கொண்டேன்.

இறைத்தூதர்(ஸல்), அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்த யூதர் (அவ்வாறு எடுத்துக் கொள்ள) மறுத்துவிட்டார்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள்.

பிறகு என்னிடம், ‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு’ என்று கூறினார்கள்.

أَنَّ أَبَاهُ تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ اليَهُودِ، فَاسْتَنْظَرَهُ جَابِرٌ، فَأَبَى أَنْ يُنْظِرَهُ، فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَلَّمَ اليَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ، فَأَبَى، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّخْلَ، فَمَشَى فِيهَا، ثُمَّ قَالَ لِجَابِرٍ: «جُدَّ لَهُ، فَأَوْفِ لَهُ الَّذِي لَهُ» فَجَدَّهُ بَعْدَمَا رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَوْفَاهُ ثَلاَثِينَ وَسْقًا، وَفَضَلَتْ لَهُ سَبْعَةَ عَشَرَ وَسْقًا، فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ، فَوَجَدَهُ يُصَلِّي العَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُ بِالفَضْلِ، فَقَالَ: «أَخْبِرْ ذَلِكَ ابْنَ الخَطَّابِ»، فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ، فَقَالَ لَهُ عُمَرُ: لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُبَارَكَنَّ فِيهَا


Bukhari-2395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும் பட்சத்தில்) கடனாளி தன் கடனை சற்றுக் குறைத்துச் செலுத்தினால் அல்லது கடன் கொடுத்தவர் முழுவதுமாக மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விட்டால் அது செல்லும்.

2395. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவரின் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள்.

(அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி(ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்’ என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக்

أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَعَلَيْهِ دَيْنٌ، فَاشْتَدَّ الغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي، فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي، وَقَالَ: «سَنَغْدُو عَلَيْكَ»، فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا، فَقَضَيْتُهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا


Next Page » « Previous Page