பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவனின் பொருளாதார நட வடிக்கைகளை ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவனது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே!
ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது:
நபி (ஸல்) அவர்கள் (ஏழை) ஒருவர் தர்மம் செய்த போது அந்த தர்மத்தை ரத்து செய்தார்கள். பிறகு தான், அந்த (ஏழை) மனிதர் தர்மம் செய்வதைத் தடைசெய்து ஆணை பிறப்பித்தார்கள்.
ஒரு மனிதர் கடனாளியாக இருந்து, அவரிடம் ஓர் அடிமையைத் தவிர வேறு செல்வம் ஏதும் இல்லாமலிருந்து அந்த அடிமையை அவர் விடுதலை செய்தால் அது செல்லுபடியாகாது என்று இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
பாடம் : 3 ஒருவர் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவருக்காக அவரது பொருளை விற்று, அதை அவரிடமே கொடுத்து இதை சரியான முறையில் பயன்படுத்தி நன்கு பராமரித்து வைத்துக் கொள்ளும்படி கூற, அவர் அதைக் கெடுத்து(ப் பழுதாக்கி) விட முயன்றால் (விற்றுக் கொடுத்தவரோ, நீதிபதியோ) அவரை அதைக் கையாள விடாமல் தடுத்து விடலாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பொருளை வீணாக்குவதைத் தடை செய்துள்ளார்கள். மேலும், வியாபாரத்தின் போது அடிக்கடி ஏமாற்றப்பட்டு வந்த ஒரு மனிதரிடம், நீ வியாபாரம் செய்யும் كَانَ رَجُلٌ يُخْدَعُ فِي البَيْعِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ» فَكَانَ يَقُولُهُ
சமீப விமர்சனங்கள்