Author: Farook

Bukhari-2425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 கடன்காரர் கடனாளியிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்பது…

2425. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்.

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், ‘நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்’ என்று கூறினான். நான், ‘முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்’ என்று கூறினேன்.

அதற்கு அவன், ‘அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்’ என்று கூறினான்.

அப்போதுதான், ‘எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் ‘பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்’ என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி

كُنْتُ قَيْنًا فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ لِي عَلَى العَاصِ بْنِ وَائِلٍ دَرَاهِمُ، فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ، فَقَالَ: لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ، فَقُلْتُ: «لاَ، وَاللَّهِ لاَ أَكْفُرُ بِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى يُمِيتَكَ اللَّهُ، ثُمَّ يَبْعَثَكَ»، قَالَ: فَدَعْنِي حَتَّى أَمُوتَ، ثُمَّ أُبْعَثَ فَأُوتَى مَالًا وَوَلَدًا، ثُمَّ أَقْضِيَكَ فَنَزَلَتْ: {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ: لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا} [مريم: 77] الآيَةَ


Bukhari-2424

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 கடனாளியிடமிருந்து கடனை வசூல் செய்வதற்காக கடன்காரர் அவரை விடாமல் பிடித்துக் கொள்வதும் பின் தொடர்ந்து சென்று நச்சரிப்பதும்.

2424. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பாதையில்) சந்தித்தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நச்சரிக்கலானேன்). நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன.

நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, ‘கஅபே!’ என்றழைத்து, ‘பாதியை (வாங்கிக் கொள்)’ என்று கூறுவது போல் தம் கையால் சைகை செய்தார்கள். எனவே, நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து)விட்டுவிட்டேன்.
Book : 44


أَنَّهُ كَانَ لَهُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ أَبِي حَدْرَدٍ الأَسْلَمِيِّ دَيْنٌ، فَلَقِيَهُ، فَلَزِمَهُ فَتَكَلَّمَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا، فَمَرَّ بِهِمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا كَعْبُ» وَأَشَارَ بِيَدِهِ، كَأَنَّهُ يَقُولُ: النِّصْفَ، فَأَخَذَ نِصْفَ مَا عَلَيْهِ وَتَرَكَ نِصْفًا


Bukhari-2423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 ஹரமில் (குற்றவாளிகளைக்) கட்டி வைப்பதும் சிறைப்படுத்துவதும்

நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், மக்கா நகரில் குற்றவாளிகளைச் சிறைப்படுத்துவதற்காக ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களிடமிருந்து ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார்கள். அப்போது,உமர் (ரலி) அவர்கள் ஒப்புதல் கொடுத்து விட்டால் தாம் வாங்கியது உறுதிப்பட்டு விடும் என்றும் உமர் (ரலி) அவர்கள் ஒப்புதல் கொடுக்கா விட்டால் அவருக்கு நானூறு திர்ஹம்கள் தரப்படும் என்றும் நிபந்தனையிட்டிருந்தார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களும் மக்காவில் (குற்ற வாளிகளைக்) கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

2423. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்து மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா இப்னு உஸால் என்று அழைக்கப்படுபவரைக் கொண்டு வந்தார்கள். (மக்கள்) அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தார்கள்.
Book : 44


بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ، يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ


Bukhari-2422

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 எவர் தீங்கிழைப்பவர் (அல்லது துஷ்டத் தனம் செய்பவர்) என்று அச்சம் உள்ளதோ அவரைக் கட்டி வைக்கலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் சுன்னத்து (நபிவழி)களையும் பாகப் பிரிவினைச் சட்டத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும் இக்ரிமா (ரஹ்) அவர்களை (சங்கிலியால்) பிணைத்து வைத்தார்கள்.

2422. நபி(ஸல்) அவர்கள் ‘நஜ்து’ மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான ‘சுமாமா இப்னு உஸால்’ எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள்.

அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் சுட்டி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, ‘சுமாமாவே, உங்களிடம் என்ன (செய்தி) உள்ளது?’ என்று கேட்டார்கள். அவர், ‘முஹம்மதே! என்னிடம் நல்ல செய்திதான் உள்ளது’ என்று கூறினார். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், ‘சுமாமாவை அவிழ்த்துவிட்டு விடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 44


بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ اليَمَامَةِ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ»، قَالَ: عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ، فَذَكَرَ الحَدِيثَ، قَالَ: «أَطْلِقُوا ثُمَامَةَ»


Bukhari-2421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

மரண சாசனம் யாருக்குச் செய்யப்பட்டதோ அவர் மரண சாசனம் செய்த (இறந்த)வருக்காக வாதிடுவது செல்லும்.

2421. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அப்து இப்னு ஸம்ஆ (ரலி) அவர்களும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனின் விஷயத்தில் (தமக்குள் ஏற்பட்ட தகராறைத் தீர்த்துக் கொள்ள) நபி (ஸல்) அவர்களிடம் வழக்கொன்றைக் கொண்டு வந்தனர். ஸஅத் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர், ‘நீ (மக்காவுக்குத் திரும்பிச்) சென்றால், ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைக் கண்டு (அழைத்து வந்து) பராமரி. ஏனென்றால், அவன் என்னுடைய மகன்’ என்று என்னிடம் (மரணப் படுக்கையில் தன் இறுதி விருப்பமாகக்) கூறியிருந்தார்’ என்றார்கள்.

அப்து இப்னு ஸம்ஆ (ரலி), ‘அவர் என் சகோதரர்; என் தந்தையின் அடிமைப் பெண்ணின் மகன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் அவன் இருந்தபோது பிறந்தவர்’ என்று கூறினார். அந்த அடிமைப் பெண்ணின் மகனிடம் (ஸஅதுடைய சகோதரர்) உத்பாவின் சாயலைத் தெளிவாகக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘அப்து இப்னு ஸம்ஆவே! அவன் (சட்டப்படி) உனக்கு உரியவனே. (ஏனெனில், ஒரு பெண், யாருடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை சொந்தமாகும். விபச்சாரம் செய்வதவருக்கு இழப்புதான் உரியது’ என்று

أَنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ، وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، اخْتَصَمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ أَنْ أَنْظُرَ ابْنَ أَمَةِ زَمْعَةَ، فَأَقْبِضَهُ، فَإِنَّهُ ابْنِي، وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: أَخِي وَابْنُ أَمَةِ أَبِي، وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي، فَرَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ، فَقَالَ: «هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ»


Bukhari-2420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 விபரம் தெரிந்து கொண்ட பிறகு, பாவம் புரிவோரையும், வழக்காடுவோரையும் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றலாம்.

உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் சகோதரி (அபூபக்ரின் மரணத்திற்காக) ஒப்பாரி வைத்த போது அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.

2420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையை (நிலைநிறுத்தும்படி) கட்டளையிட்டுவிட்டு தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது (கூட்டுத்) தொழுகைக்கு வருகை தராத மக்களின் வீடுகளுக்குச் சென்று அவற்றை எரித்து விடலாம் என்று நான் நினைத்ததுண்டு. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 44


«لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلاَةِ فَتُقَامَ، ثُمَّ أُخَالِفَ إِلَى مَنَازِلِ قَوْمٍ لاَ يَشْهَدُونَ الصَّلاَةَ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ»


Bukhari-2419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2419. உமர் (ரலி) அறிவித்தார்:

ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம் (ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள். நான், உடனேயே ஹிஷாம் (ரலி), அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன். பிறகு (சற்று யோசித்து) அவர்கள் தொழுகையை முடிக்கும் வரை அவர்களுக்கு அவகாசம் அளித்(துக் காத்திருந்)தேன்.

(அவர்கள் தொழுது முடித்த) பிறகு, அவர்களின் போர்வை (போன்ற அங்கி)யை அவர்களின் கழுத்தில் போட்டு இழுத்து, அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, ‘(நபி (ஸல்) அவர்களே!) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை கேட்டேன்’ என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டு விடு’ என்று கூறினார்கள். பிறகு என்னை நோக்கி, ‘நீங்கள் ஓதுங்கள்’ என்று கூறினார்கள். நான் ஓதினேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘இப்படித்தான் (இந்த அத்தியாயம்) இறங்கிற்று. நிச்சயமாக, குர்ஆன், (ஓதுவதற்கான) ஏழு முறைகளின் படி இறக்கியருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 44


سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا، وَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ، ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ، ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا،

فَقَالَ لِي: «أَرْسِلْهُ»، ثُمَّ قَالَ لَهُ: «اقْرَأْ»، فَقَرَأَ، قَالَ: «هَكَذَا أُنْزِلَتْ»، ثُمَّ قَالَ لِي: «اقْرَأْ»، فَقَرَأْتُ، فَقَالَ: «هَكَذَا أُنْزِلَتْ إِنَّ القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مِنْهُ مَا تَيَسَّرَ»


Bukhari-2418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2418. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரிடையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்கி) இருவரின் குரலும் உயர்ந்துவிட்டது. எந்த அளவுக்கென்றால் இறைத்தூதர்(ஸல்) தம் வீட்டிலிருக்க, அவர்களும் எங்கள் குரலைச் செவியுற்று, தம் அறையின் திரையை நீக்கி எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டு வந்து, ‘கஅபே!’ என்று அழைத்தார்கள். நான், ‘இதோ வந்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னேன்.

நபி(ஸல்) அவர்கள், ‘இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து குறைத்துக் கொள்’ என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (விரலால்) சைகை காட்டினார்கள். ‘அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் (இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களை நோக்கி,) ‘எழுந்து சென்று கடனை அடைப்பீராக!’ என்று கூறினார்கள்.
Book :44


أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي المَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى: «يَا كَعْبُ»، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا»، فَأَوْمَأَ إِلَيْهِ – أَيِ الشَّطْرَ – قَالَ: لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُمْ فَاقْضِهِ»


Bukhari-2416 & 2417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல்.

2416. & 2417. ‘ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்:

2417. அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), ‘உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, ‘(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று) சத்தியம் செய்’ என்று கூறினார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!’ என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்)

«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، وَهُوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»

قَالَ: فَقَالَ الأَشْعَثُ: فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ اليَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَكَ بَيِّنَةٌ»، قُلْتُ: لاَ، قَالَ: فَقَالَ لِلْيَهُودِيِّ: «احْلِفْ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ الآيَةِ


Bukhari-2415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2415. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஓர் அடிமையை விடுதலை செய்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் அந்த அடிமையை விடுதலை செய்ததை ரத்துச் செய்தார்கள்.

(அவருக்காக அவ்வடிமையை ஏலம்விட்டபோது) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அந்த அடிமையை நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) வாங்கினார்கள். (பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் விலையை அடிமையின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டார்கள்.)
Book :44


أَنَّ: «رَجُلًا أَعْتَقَ عَبْدًا لَهُ، لَيْسَ لَهُ مَالٌ غَيْرُهُ، فَرَدَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَابْتَاعَهُ مِنْهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ»


Next Page » « Previous Page