Author: Farook

Tirmidhi-2004

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2004. மக்களை அதிகம் சொர்க்கத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இறையச்சமும், நற்குணமும்” என்று பதிலளித்தார்கள்.

மக்களை அதிகம் நரகத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “வாயும், மர்ம உறுப்பும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الجَنَّةَ، فَقَالَ: «تَقْوَى اللَّهِ وَحُسْنُ الخُلُقِ»،

وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: «الفَمُ وَالفَرْجُ»


Bukhari-2385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَيْفَ تَرَى بَعِيرَكَ أَتَبِيعُنِيهِ؟» قُلْتُ: نَعَمْ، فَبِعْتُهُ إِيَّاهُ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ، غَدَوْتُ إِلَيْهِ بِالْبَعِيرِ، فَأَعْطَانِي ثَمَنَهُ


Bukhari-2383 & 2384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2383 & 2384. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) மற்றும் ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) இருவரும் அறிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற்பதைத் தடை செய்தார்கள்); அராயாக்காரர்களைத் தவிர. நபி(ஸல்) அவர்கள், அராயாக்காரர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட (முஸாபனா) வியாபாரம் செய்து கொள்ள அனுமதியளித்தார்கள்.

அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்:

‘புஷைர்(ரஹ்) இதைப் போன்றதை (ஹதீஸை) எனக்கு அறிவித்தார்கள்’ என்று இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
Book :42


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ المُزَابَنَةِ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ، إِلَّا أَصْحَابَ العَرَايَا، فَإِنَّهُ أَذِنَ لَهُمْ»


Bukhari-2382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2382. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அராயா’ வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு பதிலாக ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் இப்னு ஹுஸைன்(ரஹ்), ‘ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவா? ஐந்து வஸக்குகளுக்கா’ என்று சந்தேகப்படுகிறார்கள்.
Book :42


«رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْعِ العَرَايَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ، فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ، أَوْ فِي خَمْسَةِ أَوْسُقٍ» شَكَّ دَاوُدُ فِي ذَلِكَ


Bukhari-2381

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2381. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முகாபராவையும் பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள் மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித்தார்கள்.
Book :42


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المُخَابَرَةِ، وَالمُحَاقَلَةِ، وَعَنِ المُزَابَنَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَأَنْ لاَ تُبَاعَ إِلَّا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ، إِلَّا العَرَايَا»


Bukhari-2380

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2380. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, ‘அராயா’ மரத்திலுள்ள கனிகளை (ஐந்து) வஸக்குகளுக்கும் குறைவான அளவில்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதியளித்தார்கள்.
Book :42


«رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُبَاعَ العَرَايَا بِخَرْصِهَا تَمْرًا»


Bukhari-2379

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதிலுள்ள தனக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும், மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின் பேரீச்ச மரங்களை ஒருவர் விற்றால் அவற்றின் விளைச்சல் கனிகள் அவருக்கே (விற்றவருக்கே) உரியன. (பேரீச்சந் தோப்பை) விற்றவருக்கு, போக்குவரத்துப் பாதை(யாக அதைப் பயன்படுத்தும் உரிமை)யும் உண்டு; (தான் விவசாயம் செய்த மரங்களுக்கு) நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு; விளைச்சலை அறுவடை செய்யும் வரை (அதாவது கனிகளைப் பறித்துக் கொள்ளும் வரை). இவ்வாறே அராயா வியாபாரம் செய் பவருக்கும் உரிமையுண்டு.

2379. ‘மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின்னர் பேரீச்ச மரங்களை வாங்கியவர் (அந்த விளைச்சல் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியதாகும். செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்கியவர், (அந்த அடிமையின் செல்வம் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே உரியதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 42


«مَنِ ابْتَاعَ نَخْلًا بَعْدَ أَنْ تُؤَبَّرَ، فَثَمَرَتُهَا لِلْبَائِعِ إِلَّا أَنْ يَشْتَرِطَ المُبْتَاعُ، وَمَنِ ابْتَاعَ عَبْدًا وَلَهُ مَالٌ، فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ، إِلَّا أَنْ يَشْتَرِطَ المُبْتَاعُ»

وَعَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ فِي العَبْدِ


Bukhari-2378

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 நீர் நிலையருகே ஒட்டகத்தின் பாலைக் கறத்தல்.

2378. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண் ஒட்டகத்தின் உரிமைகளில் நீர் நிலையருகே அதன் பாலைக் கறப்பதும் ஒன்றாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 42


«مِنْ حَقِّ الإِبِلِ أَنْ تُحْلَبَ عَلَى المَاءِ»


Bukhari-2377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 வருவாய் மானியமாக வழங்கப்படும் நிலங்களை (பட்டயமாக) எழுதிப் பதிவு செய்து கொள்வது செல்லும்.

2377. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந்தால் எங்களுடைய குறைஷிச் சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.

ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகிற அளவுக்கு) மானிய நிலங்கள் (அல்லது நிலவரி மூலமாகக் கிடைக்கும் நிதிகள்) நபி(ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே, ஆட்சியதிகாரத்தில்) உங்களை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 42


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْصَارَ لِيُقْطِعَ لَهُمْ بِالْبَحْرَيْنِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنْ فَعَلْتَ فَاكْتُبْ لِإِخْوَانِنَا مِنْ قُرَيْشٍ بِمِثْلِهَا، فَلَمْ يَكُنْ ذَلِكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي»


Bukhari-2376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 தகுதியுடைய தனிநபர்கள் சிலருக்கு தலைவர் தரிசு நிலத் துண்டுகளை வருவாய் மானியமாகத் தரலாம்.

2376. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார்கள். அதற்கு அன்சாரிகள், ‘(இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம்)’ என்று கூறினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கடைப் பிடியுங்கள்’ என்றார்கள்.
Book : 42


أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْطِعَ مِنَ البَحْرَيْنِ، فَقَالَتِ الأَنْصَارُ: حَتَّى تُقْطِعَ لِإِخْوَانِنَا مِنَ المُهَاجِرِينَ مِثْلَ الَّذِي تُقْطِعُ لَنَا، قَالَ: «سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي»


Next Page » « Previous Page