Author: Farook

Bukhari-2375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2375. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். ‘இத்கிர்’ புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன்.

அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள்.

அவள், ‘ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்’ என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின்

أَصَبْتُ شَارِفًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَغْنَمٍ يَوْمَ بَدْرٍ، قَالَ: «وَأَعْطَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَارِفًا أُخْرَى»، فَأَنَخْتُهُمَا يَوْمًا عِنْدَ بَابِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ، وَأَنَا أُرِيدُ أَنْ أَحْمِلَ عَلَيْهِمَا إِذْخِرًا لِأَبِيعَهُ، وَمَعِي صَائِغٌ مِنْ بَنِي قَيْنُقَاعَ، فَأَسْتَعِينَ بِهِ عَلَى وَلِيمَةِ فَاطِمَةَ، وَحَمْزَةُ بْنُ عَبْدِ المُطَّلِبِ يَشْرَبُ فِي ذَلِكَ البَيْتِ مَعَهُ قَيْنَةٌ، فَقَالَتْ:
[البحر الوافر]
أَلاَ يَا حَمْزُ لِلشُّرُفِ النِّوَاءِ
فَثَارَ إِلَيْهِمَا حَمْزَةُ بِالسَّيْفِ فَجَبَّ أَسْنِمَتَهُمَا، وَبَقَرَ خَوَاصِرَهُمَا، ثُمَّ أَخَذَ مِنْ أَكْبَادِهِمَا، – قُلْتُ لِابْنِ شِهَابٍ وَمِنَ السَّنَامِ؟ قَالَ: قَدْ جَبَّ أَسْنِمَتَهُمَا، فَذَهَبَ بِهَا، قَالَ ابْنُ شِهَابٍ: – قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: فَنَظَرْتُ إِلَى مَنْظَرٍ أَفْظَعَنِي، فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ زَيْدُ بْنُ حَارِثَةَ، فَأَخْبَرْتُهُ الخَبَرَ، فَخَرَجَ وَمَعَهُ زَيْدٌ، فَانْطَلَقْتُ مَعَهُ، فَدَخَلَ عَلَى حَمْزَةَ، فَتَغَيَّظَ عَلَيْهِ، فَرَفَعَ حَمْزَةُ بَصَرَهُ، وَقَالَ: هَلْ أَنْتُمْ إِلَّا عَبِيدٌ لِآبَائِي، فَرَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَهْقِرُ حَتَّى خَرَجَ عَنْهُمْ، وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِ الخَمْرِ


Bukhari-2374

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் விறகு (சேகரித்து அதன்) கட்டு ஒன்றை முதுகில் சுமந்து (விற்கச்) செல்வது அவர் ஒருவரிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். ஏனெனில், (அப்படிக் கேட்கும் போது) அவர் இவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :42


«لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ»


Bukhari-2373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 விறகையும் புல் பூண்டையும் விற்பது செல்லும்.

2373. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்த விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரின் முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்று வதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம். என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
Book : 42


«لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلًا، فَيَأْخُذَ حُزْمَةً مِنْ حَطَبٍ، فَيَبِيعَ، فَيَكُفَّ اللَّهُ بِهِ وَجْهَهُ، خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ، أُعْطِيَ أَمْ مُنِعَ»


Bukhari-2372

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2372. ஸைத் இப்னு காலித்(ரலி) கூறினார்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர், ‘(பிறரின்) தொலைந்து போன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்…)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அது உனக்குச் சொந்தமானது; அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது; அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு அவர், ‘தொலைந்து போன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. (எனவே, அதன் போக்கில் அதைவிட்டுவிடு)’ என்று கூறினார்கள்.
Book :42


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ اللُّقَطَةِ، فَقَالَ: «اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلَّا فَشَأْنَكَ بِهَا» قَالَ: فَضَالَّةُ الغَنَمِ؟ قَالَ: «هِيَ لَكَ أَوْ لِأَخِيكَ أَوْ لِلذِّئْبِ»، قَالَ: فَضَالَّةُ الإِبِلِ؟ قَالَ: «مَا لَكَ وَلَهَا، مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ المَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَلْقَاهَا رَبُّهَا»


Bukhari-2371

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலிருந்து (கால் நடைகள் மற்றும்) பிராணிகளுக்கு நீர் புகட்டுவதும்.

2371. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த

الخَيْلُ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ: فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ بِهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ المَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهُ انْقَطَعَ طِيَلُهَا، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا، وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ، فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، فَهِيَ لِذَلِكَ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا ثُمَّ لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا، فَهِيَ لِذَلِكَ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً وَنِوَاءً لِأَهْلِ الإِسْلاَمِ، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ

وَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحُمُرِ، فَقَالَ: ” مَا أُنْزِلَ عَلَيَّ فِيهَا شَيْءٌ إِلَّا هَذِهِ الآيَةُ الجَامِعَةُ الفَاذَّةُ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8]


Bukhari-2370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள வேறெவருக்கும் அனுமதி இல்லை.

2370. நபி(ஸல்) அவர்கள், ‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் அனுமதி இல்லை’ என்று கூறினார்கள். இதை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) சிறிது தொலைவிலுள்ள) ‘நகீஉ’ என்னுமிடத்தைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந்தார்கள். உமர்(ரலி), ‘ ‘ஷரஃப்’ மற்றும் ‘ரபதா’ என்னுமிடங்களைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந்தார்கள் என்று நமக்குச் செய்தி கிட்டியுள்ளது’ என்று இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்.
Book : 42


«لاَ حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ» وَقَالَ: بَلَغَنَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمَى النَّقِيعَ»، وَأَنَّ عُمَرَ «حَمَى السَّرَفَ وَالرَّبَذَةَ»


Bukhari-2369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2369. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் (அவர்கள் வருமாறு:)

(ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான்.

மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்தவன் ஆவான்.

இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, ‘உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்’ என்று அல்லாஹ் கூறுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :42


ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ: رَجُلٌ حَلَفَ عَلَى سِلْعَةٍ لَقَدْ أَعْطَى بِهَا أَكْثَرَ مِمَّا أَعْطَى وَهُوَ كَاذِبٌ، وَرَجُلٌ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ بَعْدَ العَصْرِ، لِيَقْتَطِعَ بِهَا  مَالَ رَجُلٍ مُسْلِمٍ، وَرَجُلٌ مَنَعَ فَضْلَ مَاءٍ فَيَقُولُ اللَّهُ: اليَوْمَ أَمْنَعُكَ فَضْلِي كَمَا مَنَعْتَ فَضْلَ مَا لَمْ تَعْمَلْ يَدَاكَ


Bukhari-2368

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2368. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜர் அவர்களுக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்)விட்டு விட்டிருந்தால் – (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) – தண்ணீரைக் கையால் அள்ளிக் குடிக்காமல் இருந்திருந்தால் – அது (நிற்காமல்) ஓடுகிற நீரோடையாக இருந்திருக்கும்.

(பிறகு) பனூ ஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, ‘உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?’ என்று (ஹாஜர் அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘சரி, (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத் தண்ணீரில் உங்களுக்கு எந்த பாக்கியதையும் இருக்காது’ என்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார். ‘சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)’ என்று கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :42


يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ، لَوْ تَرَكَتْ زَمْزَمَ – أَوْ قَالَ: لَوْ لَمْ تَغْرِفْ مِنَ المَاءِ – لَكَانَتْ عَيْنًا مَعِينًا “، وَأَقْبَلَ جُرْهُمُ فَقَالُوا: أَتَأْذَنِينَ أَنْ نَنْزِلَ عِنْدَكِ؟ قَالَتْ: نَعَمْ، وَلاَ حَقَّ لَكُمْ فِي المَاءِ، قَالُوا: نَعَمْ


Bukhari-2367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2367. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :42


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَذُودَنَّ رِجَالًا عَنْ حَوْضِي، كَمَا تُذَادُ الغَرِيبَةُ مِنَ الإِبِلِ عَنِ الحَوْضِ»


Bukhari-2366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 தடாகத்தின் (குளம் அல்லது நீர்த் தொட்டியின்) உரிமையாளரும் தோல் பையின் உரிமையாளரும் தமது தண்ணீரைப் பயன்படுத்த (பிறரை விட) அதிக உரிமை பெற்றுள்ளனர்.

2366. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பால் நிரம்பிய) பாத்திரம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது, அவர்களின் வலப்பக்கம், மக்களில் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவர் அமர்ந்திருந்தார். இடப் பக்கம் முதியவர்கள் அமர்ந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘சிறுவரே! முதியவர்களுக்கு நான் (இதைத்) தருவதற்கு நீர் அனுமதியளிக்கிறீரா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தச் சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! உங்களிடமிருந்து எனக்கு (நற்பேறாகக்) கிடைக்கக் கூடிய என்னுடைய பங்கை நான் யாருக்கும்விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை’ என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவருக்கே அதைக் கொடுத்துவிட்டார்கள்.
Book : 42


أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ، فَشَرِبَ، وَعَنْ يَمِينِهِ غُلاَمٌ هُوَ أَحْدَثُ القَوْمِ وَالأَشْيَاخُ عَنْ يَسَارِهِ، قَالَ: «يَا غُلاَمُ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ الأَشْيَاخَ»، فَقَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ، فَأَعْطَاهُ إِيَّاهُ


Next Page » « Previous Page