தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2371

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 13 நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலிருந்து (கால் நடைகள் மற்றும்) பிராணிகளுக்கு நீர் புகட்டுவதும்.

2371. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.

அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். (இவ்விதம் நல்ல நோக்கங்களுக்காக வளர்க்கப்படும்.) இந்த குதிரை அவருக்கு (மறுமையில்) நற்பலன் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும்,

இன்னொருவர், தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக்கட்டி, வை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது சுமத்தும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு அந்த (அவருடைய) குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகி விடுகிறது.

நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; ‘எவன் அணுவளவும் நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்’ (திருக்குர்ஆன் 96: 7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர’ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 42


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

الخَيْلُ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ: فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ بِهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ المَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهُ انْقَطَعَ طِيَلُهَا، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ آثَارُهَا، وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ، فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَ كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، فَهِيَ لِذَلِكَ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا ثُمَّ لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي رِقَابِهَا وَلاَ ظُهُورِهَا، فَهِيَ لِذَلِكَ سِتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً وَنِوَاءً لِأَهْلِ الإِسْلاَمِ، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ

وَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحُمُرِ، فَقَالَ: ” مَا أُنْزِلَ عَلَيَّ فِيهَا شَيْءٌ إِلَّا هَذِهِ الآيَةُ الجَامِعَةُ الفَاذَّةُ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8]


Bukhari-Tamil-2371.
Bukhari-TamilMisc-2371.
Bukhari-Shamila-2371.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-2209.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ

3 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்

4 . ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா

5 . அபூஸாலிஹ்-தக்வான்-அஸ்ஸியாத்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்


 

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துல்லாஹ் பின் யூஸுஃப்-அல்கலாயீ

عبد الله بن يوسف التنيسي

இறப்பு: ஹிஜ்ரி 218, எகிப்து

தரம்: பலமானவர், முவத்தா ஹதீஸ்களில் மிக உறுதியானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் யூஸுஃப்

தந்தை பெயர்: யூஸுஃப்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: திமிஷ்க்

பயணித்த ஊர்கள்: திமிஷ்க், எகிப்து, துனீஸ்

இறப்பு: ஹிஜ்ரி 218, எகிப்து

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அல்கலாயீ ரஹ் அவர்கள் அபூ முஹம்மத் என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் திமிஷ்க் நகரைச் சேர்ந்தவர். பின்னர் துனீஸ் மற்றும் எகிப்தில் வசித்தார்.

இவர் பலமானவர் என்பதுடன், முவத்தா ஹதீஸ்களில் மிக உறுதியானவர் என்று யஹ்யா பின் மயீன் போன்ற இமாம்களால் பாராட்டப்பட்டவர். ஹிஜ்ரி 218 ஆம் ஆண்டு எகிப்தில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸயீத் பின் அப்துல் அஸீஸ் அத்தனூக்கீ, மாலிக் இமாம், யஹ்யா பின் ஹம்ஸா பின் வக்ஃத், அல்லைஸ் பின் ஸஃத், அப்துல்லாஹ் பின் ஸல்ம் அல்அஷ்அரீ, அப்துர்ரஹ்மான் பின் அபூ ரிஜால், ஈஸா பின் யூனுஸ் பின் அபூ இஸ்ஹாக், அல்ஹைஸம் பின் ஹுமைத் அல்கஸானீ, ஸல்மது பின் அல்அய்யார், அல்வலீத் பின் முஸ்லிம் அல்குரஷீ, அப்துல்லாஹ் பின் வஹ்ப, ஸயீத் பின் பஷீர்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஹம்மத் பின் இஸ்ஹாக் அஸ்ஸஃகானீ, இப்ராஹீம் பின் யஃகூப், அம்ர் பின் மன்ஸூர் அன்நஸாயீ, முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹீம், முஹம்மத் பின் முஹம்மத் பின் முஸ்அப், அர்ரபீஉ பின் ஸுலைமான், யஹ்யா பின் மயீன், ஹர்ம்லது பின் யஹ்யா, அல்ஹஸன் பின் அப்துல் அஸீஸ் அல்ஜர்வா, அபூ ஹாதிம் அர்ராஸீ, யஃகூப் பின் ஸுஃப்யான்

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் யூஸுஃப், அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அத்தனீஸீ, அப்துல்லாஹ் பின் யூஸுஃப் அத்தன்ஸீ


ஆதாரம்: muslimscholars.info (30355) · Should verify

மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

مالك بن أنس الأصبحي

இறப்பு: ஹி-179 (வயது 86)

தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர்.


இயற்பெயர்: மாலிக்.

தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது.

பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார்.

இறப்பு: ஹிஜ்ரீ 178 அல்லது 179 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று மரணித்தார். மரணிக்கும் போது இவருடைய வயது 86 ஆகும்.

(93 இல் பிறந்து 179 ல் மரணித்தார் என்பதின்படி இவர் வயது 86. வாகிதீ என்பவர் 90 வயதை அடைந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்)

கால கட்டம்: 7.


வளர்ப்பு: ஸவ்ன், ரிஃபாஹியா ஆகிய ஊர்களில் வளர்ந்தார்.

கல்வி: பத்து வயதை அடைந்திருக்கும் போதே கல்வி கற்க ஆரம்பித்தார். ஹிஜாஸ்வாசிகளில் உள்ள அறிஞர்களில் மாபெரும் அறிஞராகத் திகழ்ந்தார். ஹதீஸ் துறையில் முத்திரை பதித்தவர்களில் இவரும் ஒருவர். சட்டத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விக்காகப் பயணித்த ஊர்கள்: இமாம் மாலிக் அவர்கள் அதிகமான விஷயங்களை அறிந்திருந்தமையால் பல ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. தன்னிடத்தில் உள்ள ஞானமே போதும் என்று கருதினார். பல ஊர்களுக்குச் சென்று இவர் பயிலாவிட்டாலும் மார்க்கச் சட்டங்களைக் கூறுவதில் தலைமைத்துவத்தைப் பெற்றார். இவர் 21 வது வயதை அடைந்த போதே பிறருக்கு தான் படித்ததைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.

1 . நாஃபிஃ,

2 . ஹிஷாம் பின் உர்வா,

3 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

4 . அப்துல்லாஹ் பின் தீனார்,

5 . ஸைத் பின் அஸ்லம்,

6 . முஹம்மத் பின் முஸ்லிம்,

7 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர்,

8 . ஸயீத் பின் அபூஸயீத்

ஆகியோர் இவருடைய முக்கிய ஆசிரியர்கள்.

1 . முஹம்மத் பின் முஸ்லிம்,

2 . யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ,

3 . நாஃபிஃ பின் மாலிக்

4 . யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்,

ஆகிய இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து கற்றுள்ளார்கள்.

4 . இமாம் அபூஹனீஃபா, ...

5 . ஸுஃப்யான் ஸவ்ரீ,

6 . அல்லைஸ் பின் சஃத்,

7 . ஷுஅபா,

8 . அப்துல் மலிக்,

9 . மஃமர் பின் ராஷித்,

10 . இப்னுல் முபாரக்,

11 . வகீஃ பின் ஜர்ராஹ்

12 . இமாம் ஷாஃபிஈ

ஆகியோர் இவருடைய முக்கிய மாணவர்கள்.

புகாரி மற்றும் முஸ்லிம் தொகுக்கப்படுவதற்கு முன்பு இவர் எழுதிய அல்முஅத்தா என்ற ஹதீஸ்களின் தொகுப்பு நூல் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. பல அறிஞர்கள் இந்த நூலையே சார்ந்திருந்தார்கள்.

1 . ரிஸாலத்துன் ஃபில் கத்ர்,

2 . ரிசாலத்துன் ஃபின்னஜ்ம்,

3 . ரிசாலத்துன் ஃபில் அக்ளியா,

4 . ரிசாலத்துன் இலா அபீ ஹஸ்ஸான்,

5 . ரிசாலத்துன் இலல் லைஸ்,

6 . ஜுஸ்உன் ஃபித் தஃப்சீர்,

7 . கிதாபுஸ் ஸிர்,

8 . ரிஸாலத்துன் இலர் ரஷீத் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார்.

ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா

ஸைத் பின் அஸ்லம்-அல்மதனீ (ரஹ்) – Zayd bin Aslam

இறப்பு: ஹிஜ்ரி 136, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸைத் பின் அஸ்லம்

தந்தை பெயர்: அஸ்லம்

வம்சம்: உமர் (ரலி) அவர்களின் அடிமை

புனைப்பெயர்: அபூ உஸாமா, அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 136, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸைத் பின் அஸ்லம் ரஹ் அவர்கள் உமர் ரலி அவர்களின் அடிமையாக இருந்த அஸ்லம் என்பவரின் மகன் ஆவார். இவர் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்த ஒரு ஃபகீஹ் (சட்ட வல்லுநர்) மற்றும் தஃப்ஸீர் (குர்ஆன் விரிவுரையாளர்) ஆவார்.

நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதில் இவருக்கு ஒரு கல்வி வட்டம் இருந்தது. இவர் ஹிஜ்ரி 136 இல் மதீனாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அஸ்லம், இப்னு உமர், அபூ ஹுரைரா, ஆயிஷா (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ், அனஸ் பின் மாலிக், அலீ பின் அல்ஹுஸைன் பின் அலீ, அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ், தக்வான் அபூ ஸாலிஹ் அஸ்ஸம்மான், பிஷ்ர் பின் ஸயீத், அப்துர்ரஹ்மான் பின் அபீ ஸயீத் அல்குத்ரீ, உம்முத் தர்தா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): உஸாமா பின் ஸைத் பின் அஸ்லம், அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அஸ்லம், அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம், மாலிக் இமாம், முஹம்மத் பின் அஜ்லான், இப்னு ஜுரைஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் பின் பிலால், ஹஃப்ஸ் பின் மைஸரா, அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத்தாராவர்தீ

வேறு பெயர்கள்: அபூ உஸாமா, அபூ அப்துல்லாஹ், ஸைத் பின் அஸ்லம் அல்குரஷீ, ஸைத் பின் அஸ்லம் அல்அதவீ, ஸைத் பின் அஸ்லம் அல்மதனீ


ஆதாரம்: muslimscholars.info (11163) · Should verify

அபூஸாலிஹ்-தக்வான்-அஸ்ஸியாத்

ذكوان أبو صالح السمان الزيات

இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: தக்வான்

வம்சம்: மவ்லா ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ்

புனைப்பெயர்: அபூஸாலிஹ், அபூஸுஹைல்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 101, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் அஸ்ஸியாத் ரஹ் அவர்கள் ஜுவைரிய்யா பின்த் அல்அஹ்மஸ் அவர்களின் மவ்லா ஆவார். இவர் கூஃபாவிற்கு நெய் மற்றும் எண்ணெயை கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். இவர் உஸ்மான் ரலி அவர்களின் காலத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார்.

இவர் ஹிஜ்ரி 101 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார். இவர் மிகப் பலமானவர் ஆவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூஹுரைரா, அபூதர்தா, அபூஸயீத் அல்குத்ரீ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், இப்னு உமர், இப்னு அப்பாஸ், முஆவியா பின் அபூஸுஃப்யான், ஆயிஷா பின்த் அபூபக்ர், உம்மு ஹபீபா பின்த் அபூஸுஃப்யான், உம்மு ஸலமா, அகீல் பின் அபூதாலிப், ஸஃத் பின் அபூவக்காஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஹைல் பின் அபூஸாலிஹ், ஸாலிஹ் பின் அபூஸாலிஹ், அப்துல்லாஹ் பின் அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், அதா பின் அபூ ரபாஹ், அப்துல்லாஹ் பின் தீனார், ரஜா பின் ஹய்வா, ஸைத் பின் அஸ்லம், ஸுலைமான் அல்அஃமஷ், அபூஹாஸிம் ஸல்மா பின் தீனார், ஸமீ மவ்லா அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான், அல்கம் பின் உதைபா, ஆஸிம் பின் அபூ அன்நஜூத்

வேறு பெயர்கள்: அபூஸாலிஹ் அஸ்ஸம்மான், தக்வான், அபூஸாலிஹ்


ஆதாரம்: muslimscholars.info (11161) · Should verify

அபூஹுரைரா-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.