தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2370

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள வேறெவருக்கும் அனுமதி இல்லை.

 நபி(ஸல்) அவர்கள், ‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் அனுமதி இல்லை’ என்று கூறினார்கள். இதை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) சிறிது தொலைவிலுள்ள) ‘நகீஉ’ என்னுமிடத்தைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந்தார்கள். உமர்(ரலி), ‘ ‘ஷரஃப்’ மற்றும் ‘ரபதா’ என்னுமிடங்களைப் பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக வைத்திருந்தார்கள் என்று நமக்குச் செய்தி கிட்டியுள்ளது’ என்று இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்.
Book : 42

(புகாரி: 2370)

بَابٌ: لاَ حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ الصَّعْبَ بْنَ جَثَّامَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لاَ حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ» وَقَالَ: بَلَغَنَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمَى النَّقِيعَ»، وَأَنَّ عُمَرَ «حَمَى السَّرَفَ وَالرَّبَذَةَ»





மேலும் பார்க்க: புகாரி-3012 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.