Author: Farook

Bukhari-2289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும்.

2289. சலமா பின் அக்வஃ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் ‘நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். ‘ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று நபி(ஸல்) கேட்டபோது ‘இல்லை’ என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் ‘இவர் கடனாளியா?’ என்று கேட்டபோது ‘ஆம்’ எனக் கூறப்பட்டது. ‘இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது ஆம் மூன்று தங்க காசுகள் என்று நபித்தேழர்கள் கூறினர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மூன்றாவதாக ஒரு  ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் ‘இவர் ஏதேனும்விட்டுச்

كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ أُتِيَ بِجَنَازَةٍ، فَقَالُوا: صَلِّ عَلَيْهَا، فَقَالَ: «هَلْ عَلَيْهِ دَيْنٌ؟»، قَالُوا: لاَ، قَالَ: «فَهَلْ تَرَكَ شَيْئًا؟»، قَالُوا: لاَ، فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، صَلِّ عَلَيْهَا، قَالَ: «هَلْ عَلَيْهِ دَيْنٌ؟» قِيلَ: نَعَمْ، قَالَ: «فَهَلْ تَرَكَ شَيْئًا؟»، قَالُوا: ثَلاَثَةَ دَنَانِيرَ، فَصَلَّى عَلَيْهَا، ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ، فَقَالُوا: صَلِّ عَلَيْهَا، قَالَ: «هَلْ تَرَكَ شَيْئًا؟»، قَالُوا: لاَ، قَالَ: «فَهَلْ عَلَيْهِ  دَيْنٌ؟»، قَالُوا: ثَلاَثَةُ دَنَانِيرَ، قَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ»، قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ وَعَلَيَّ دَيْنُهُ، فَصَلَّى عَلَيْهِ


Bukhari-2288

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஒருவருக்கு வரவேண்டிய கடன் ஒரு பணக்காரர் மீது மாற்றப்பட்டால் அதை அவர் மறுக்கக் கூடாது.

2288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 38


«مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ، وَمَنْ أُتْبِعَ عَلَى مَلِيٍّ فَلْيَتَّبِعْ»


Bukhari-2287

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)

பாடம் : 1 ஹவாலாவை ஏற்றுக் கொண்டவர் பிறகு மாறலாமா?

கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகி விட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும்! என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

இரண்டு பங்காளிகளுக்கிடையிலோ வாரிசுகளுக்கிடையிலோ சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டபின், இவரது இருப்புக்கோ அவரது கடனுக்கோ இழப்பு ஏற்பட்டால் அதற்கு அவரவரே பொறுப்பு! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2287. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 38


«مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ»


Bukhari-2286

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2286. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

‘விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’.

‘முடிவில் கைபரிலிருந்து யூதர்களை உமர்(ரலி) வெளியேற்றினார்கள். என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book :37


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ المَزَارِعِ»،

وَقَالَ عُبَيْدُ اللَّهِ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ»


Bukhari-2285

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 ஒருவர் ஒரு நிலத்தை வாடகைக்கு வாங்கிய பின், வாடகைக்கு விட்டவரோ பெற்றவரோ இறந்து விட்டால்…?

தவணை முடியும்வரை வாடகைக்குப் பெற்றவரை வெளியேற்றும் உரிமை வாடகைக்கு விட்(டு விட்டு,இறந்து விட்)டவரின் குடும்பத்தினருக்கு இல்லை! என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

வாடகை ஒப்பந்தம் அதற்குரிய தவணை முடியும் வரை செல்லும்! என்று ஹகம் (ரஹ்), ஹஸன் அல்பஸரீ(ரஹ்), இயாஸ் பின் முஆவியா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

கைபரில் உற்பத்தியாகும் பயிர்களில் பாதி, உழைப்பவருக்கும் பாதி இஸ்லாமிய அரசுக்கும் சேர வேண்டும் என்ற அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை (யூதர்களுக்குக்) கொடுத்தார்கள். இந்த ஒப்பந்தம் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்திலும் உமர் (ரலி) அவர்களுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலும் நடைமுறையில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அபூபக்ர் (ரலி) அவர்களோ, உமர் (ரலி) அவர்களோ வாடகை ஒப்பந்தத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படவில்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியள்ளார்கள்.

2285. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘விளைச்சலில் பாதி  என்ற அடிப்படையில் கைபருடைய நிலங்களை, உழைத்துப் பயிரிட்டுக் கொள்வதற்காக,

أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ: أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا، وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا “، وَأَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُ: «أَنَّ المَزَارِعَ كَانَتْ تُكْرَى عَلَى شَيْءٍ»، سَمَّاهُ نَافِعٌ لاَ أَحْفَظُهُ


Bukhari-2284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு கட்டணம் பெறுதல்.

2284. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு (பொலிப் பிராணியைக் கொண்டு பெண் விலங்குகளுக்கு சினையூட்டுவதற்கு) கட்டணம் பெறுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
Book : 37


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَسْبِ الفَحْلِ»


Bukhari-2283

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2283. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அடிமைப் பெண்கள் (விபச்சாரத்தின் மூலம்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
Book :37


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَسْبِ الإِمَاءِ»


Bukhari-2282

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 விபசாரிகள் மற்றும் (விபசாரம் செய்யும்) அடிமைப் பெண்களின் வருமானம்.

ஒப்பாரி வைப்பவளுக்கும் பாடகிகளுக்கும் கூலி கொடுப்பதை இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) வெறுத்தார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, -அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக- விபசாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள்! அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னரும், (அவர்களை) அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (24:33)

2282. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனுக்குரிய தட்சணை ஆகியவற்றை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!’
Book : 37


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَمَهْرِ البَغِيِّ، وَحُلْوَانِ الكَاهِنِ»


Bukhari-2281

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 அடிமைகளின் எஜமானர்களிடம் பேசி, அடிமைகள் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தல்.

2281. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுக்கும் ஓர் இளைஞரை அழைத்துவரச் செய்து இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்கள். அவருக்காக ஒரு ஸாவு அல்லது இரண்டு ஸாவு, ஒரு ‘முத்து’ அல்லது இரண்டு ‘முத்து’ (அளவிற்கு உணவு) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவர் சம்பந்தமாகப் பேசி அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத்தார்கள்!’
Book : 37


«دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلاَمًا حَجَّامًا، فَحَجَمَهُ، وَأَمَرَ لَهُ بِصَاعٍ – أَوْ صَاعَيْنِ، أَوْ مُدٍّ أَوْ مُدَّيْنِ – وَكَلَّمَ فِيهِ، فَخُفِّفَ مِنْ ضَرِيبَتِهِ»


Bukhari-2280

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2280. அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி(ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!’
Book :37


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِمُ وَلَمْ يَكُنْ يَظْلِمُ أَحَدًا أَجْرَهُ»


Next Page » « Previous Page