Author: Farook

Bukhari-2213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96 இருவருக்குச் சொந்தமான சொத்தை இருவரில் ஒருவர் மற்றவருக்கு விற்றல்.

2213. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலை இல்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விதித்தார்கள்.
Book : 34


«جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشُّفْعَةَ فِي كُلِّ مَالٍ لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الحُدُودُ، وَصُرِّفَتِ الطُّرُقُ، فَلاَ شُفْعَةَ»


Bukhari-2212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2212. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!’ என்ற (திருக்குர்ஆன் 04:06) இறை வசனம்,

அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.
Book :34


{وَمَنْ كَانَ غَنِيًّا، فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا، فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ} [النساء: 6]، أُنْزِلَتْ فِي وَالِي اليَتِيمِ الَّذِي يُقِيمُ عَلَيْهِ وَيُصْلِحُ فِي مَالِهِ، إِنْ كَانَ فَقِيرًا أَكَلَ مِنْهُ بِالْمَعْرُوفِ


Bukhari-2211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2211. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களின் அன்னை ஹின்த் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சரான மனிதராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என்மீது அது குற்றமாகுமா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, ‘‘உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் (வழக்கத்திலுள்ள அளவு) நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக்கொள்ளுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 34


قَالَتْ هِنْدٌ أُمُّ مُعَاوِيَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ أَنْ آخُذَ مِنْ مَالِهِ سِرًّا؟ قَالَ: «خُذِي أَنْتِ وَبَنُوكِ مَا يَكْفِيكِ بِالْمَعْرُوفِ»


Bukhari-2210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 95

வியாபாரம், வாடகை, அளவை, நிறுவை ஆகியவற்றில் மக்களுடைய வட்டார வழக்கப்படியும் அவர்களின் எண்ணப்படியும் நடைமுறைப்படுத்துதல்.

  • உங்கள் வழக்கப்படி உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்! என்று நெசவாளர்களிடம் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
  • பத்துக்கு வாங்கியதை பதினொன்றுக்கு விற்பதில் தவறில்லை; செலவிட்டதற்காக இலாபத்தை அடைந்து கொள்ளலாம்! என்று முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
  • நபி (ஸல்) அவர்கள் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் (ரலி) அவர்களிடம், உனக்கும் உன் குழந்தைகளுக்கும் போதுமானதை நியாயமான முறையில் உன் கணவரிடமிருந்து எடுத்துக் கொள்!என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகிறான்: அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்! (அல்குர்ஆன்: 4:6)
  • ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மிர்தாஸிடமிருந்து, ஒரு கழுதையை வாடகைக்கு வாங்கினார்கள்; கழுதைக்குரிய வாடகை என்ன? என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கேட்ட போது, அப்துல்லாஹ் பின் மிர்தாஸ் ஒரு திர்ஹத்தில் மூன்றில் ஒரு பங்கு! என்றார். ஹஸன் (ரஹ்) அவர்கள் (ஒப்புக் கொண்டு) வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். பிறகு மற்றொரு முறை ஹசன் (ரஹ்) அவர்கள் வந்து, கழுதை வாடகைக்கு வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது

    «حَجَمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبُو طَيْبَةَ، فَأَمَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَاعٍ مِنْ تَمْرٍ، وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ»


Bukhari-2209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 94 பேரீச்சம் பாளைக் குருத்தை விற்பதும் உண்பதும்.

2209. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பேரீச்சங் குருத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களின் அருகில் நான் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மரங்களில் ஒரு மரமிருக்கிறது; அது முஃமினுக்கு (இறை நம்பிக்கையுடையவனுக்கு) உவமையாகும்!’ என்றார்கள்.

நான் ‘அது பேரீச்ச மரம் தான்!’ என்று சொல்ல நினைத்தேன். அப்போது, நான் அங்கிருந்தவர்களிலேயே வயதில் சிறியவனாக இருந்தேன்! (அதனால் நான் எதுவும் கூறவில்லை.) நபி(ஸல்) அவர்கள் ‘அது பேரீச்சமரம்!’ என்று கூறினார்கள்.
Book : 34


كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَأْكُلُ جُمَّارًا، فَقَالَ: «مِنَ الشَّجَرِ شَجَرَةٌ كَالرَّجُلِ المُؤْمِنِ»، فَأَرَدْتُ أَنْ أَقُولَ هِيَ النَّخْلَةُ، فَإِذَا أَنَا أَحْدَثُهُمْ، قَالَ: «هِيَ النَّخْلَةُ»


Bukhari-2208

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2208. ஹுமைத்(ரஹ்) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்!’ என அனஸ்(ரலி) கூறினார். நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘பக்குவமடைதல் என்றால் என்ன?’ என்று கேட்டோம். அதற்கவர்கள், ‘சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்!’ என்று பதிலளித்தார்கள்.

மேலும், ‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் ‘உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்?’ என்றும் கேட்டார்கள்.
Book :34


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ التَّمْرِ حَتَّى يَزْهُوَ»، فَقُلْنَا لِأَنَسٍ: مَا زَهْوُهَا؟ قَالَ: «تَحْمَرُّ وَتَصْفَرُّ،

أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ»


Bukhari-2207

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 93 முகாளரா வியாபாரம். (-பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன்பே, கனிகளையும், காய்கறிகளையும் விற்பது).

2207. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

முஹாகலா, முஃகாளரா, முலாமஸா முனாபதா, முஸாபனா ஆகிய வியாபாரங்களை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.
Book : 34


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المُحَاقَلَةِ، وَالمُخَاضَرَةِ، وَالمُلاَمَسَةِ، وَالمُنَابَذَةِ، وَالمُزَابَنَةِ»


Bukhari-2206

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 92 பேரீச்ச மரத்தை வேரோடு விற்பது.

2206. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்வதருக்கே மரத்தின் கனி சேரும்.. வாங்கியவர் (அதன் கனி தமக்குச் சேர வேண்டும் என்று நிபந்தனையிட்டிருந்தால் தவிர!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 34


«أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلًا ثُمَّ بَاعَ أَصْلَهَا، فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ، إِلَّا أَنْ يَشْتَرِطَهُ المُبْتَاعُ»


Bukhari-2204

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34


«مَنْ بَاعَ نَخْلًا قَدْ أُبِّرَتْ فَثَمَرُهَا لِلْبَائِعِ، إِلَّا أَنْ يَشْتَرِطَ المُبْتَاعُ»


Next Page » « Previous Page