Author: Farook

Bukhari-2203

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2203. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

‘மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்குச் சேரும் என்பது) பற்றிப் பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே உரியவையாகும்! அடிமையும் பயன்படுத்தப்பட்ட நிலமும் கூட இவ்வாறே ஆகும்!’
Book :34


«أَيُّمَا نَخْلٍ بِيعَتْ، قَدْ أُبِّرَتْ لَمْ يُذْكَرِ الثَّمَرُ، فَالثَّمَرُ لِلَّذِي أَبَّرَهَا، وَكَذَلِكَ العَبْدُ، وَالحَرْثُ»، سَمَّى لَهُ نَافِعٌ هَؤُلاَءِ الثَّلاَثَ


Bukhari-2201 & 2202

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 89 மட்டமான பேரீச்சம் பழத்தை அதைவிடச் சிறந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது.

2201. & 2202. அபூ ஸயீத்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?’ என்று கேட்டார்கள்.

அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்’ எனக் கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!’ எனக் கூறினார்கள்.
Book : 34


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرَ، فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا؟»، قَالَ: لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ، وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَفْعَلْ، بِعْ الجَمْعَ بِالدَّرَاهِمِ، ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا»


Bukhari-2200

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2200. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்.
Book :34


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ، فَرَهَنَهُ دِرْعَهُ»


Bukhari-2198 & 2199

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 87 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பழங்களை விற்று, அதற்கேதும் ஆபத்து ஏற்பட்டால் விற்றவரே அதற்கு பொறுப்பாளி ஆவார்.

2198. & 2199. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவது வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ‘பக்குவமடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘சிவக்கும்வரை’ என்று விடையளித்துவிட்டு, ‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்…? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?’ எனக் கேட்டார்கள்.

ஒருவர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் வாங்கி அதற்கேதேனும் தீங்கு ஏற்பட்டால் மரத்தின் உரிமையாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார் என்று இப்னு ஷிஹாப் கூறுகிறார்.

‘பலன் உறுதிப்படும் நிலை அடையும்வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 34


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ، فَقِيلَ لَهُ: وَمَا تُزْهِي؟ قَالَ: حَتَّى تَحْمَرَّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ، بِمَ يَأْخُذُ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ»

2199. أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ تَتَبَايَعُوا الثَّمَرَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَلاَ تَبِيعُوا الثَّمَرَ بِالتَّمْرِ»


Bukhari-2197

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 86 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பேரீச்ச மரத்தை விற்பது.

2197. ஹுமைத் அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள்.‘மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை செய்தார்கள்’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

அவரிடம், ‘பக்குவம் அடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ்(ரலி), ‘சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது’ என்று விடையளித்தார்.

Book : 34


«أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَعَنِ النَّخْلِ حَتَّى يَزْهُوَ»، قِيلَ: وَمَا يَزْهُو؟ قَالَ: «يَحْمَارُّ أَوْ يَصْفَارُّ»


Bukhari-2196

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2196. ஸயீத் இப்னு மீனா அறிவித்தார்.

‘மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ என்று ஜாபிர்(ரலி) கூறினார்.

அவரிடம் ‘பக்குவமாகுதல் என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கவர், ‘உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது’ என விடையளித்தார்:
Book :34


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُبَاعَ الثَّمَرَةُ حَتَّى تُشَقِّحَ» فَقِيلَ: وَمَا تُشَقِّحُ؟ قَالَ: «تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا»


Bukhari-2195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2195. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்பதற்கு ஏற்றவாறு சிவக்கும் வரை விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
Book :34


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى أَنْ تُبَاعَ ثَمَرَةُ النَّخْلِ حَتَّى تَزْهُوَ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «يَعْنِي حَتَّى تَحْمَرَّ»


Bukhari-2194

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2194. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும்.
Book :34


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، نَهَى البَائِعَ وَالمُبْتَاعَ»


Bukhari-2193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85 பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்றல்.

2193. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், ‘இது அழுகிவிட்டது; இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது; இது செங்காயாக இருக்கிறது; இன்னும் பல குறைகள் இருக்கின்றன’ எனக் கூறி சச்சரவு செய்வார்.

நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது ‘மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்!’ என்று ஆலோசனை போல் கூறினார்கள்.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா எனும் நட்சத்திரம் (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும் வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.

‘அப்பருவத்தில் செங்காய் எது? பழுத்தது எது? என்று அடையாளம் தெரியும்’ என அவரின் மகன் காரிஜா கூறுகிறார்.
Book : 34


كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَبَايَعُونَ الثِّمَارَ، فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ، قَالَ المُبْتَاعُ: إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ، أَصَابَهُ مُرَاضٌ، أَصَابَهُ قُشَامٌ، عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الخُصُومَةُ فِي ذَلِكَ: «فَإِمَّا لاَ، فَلاَ تَتَبَايَعُوا حَتَّى يَبْدُوَ صَلاَحُ الثَّمَرِ» كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا لِكَثْرَةِ خُصُومَتِهِمْ وَأَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ: لَمْ يَكُنْ يَبِيعُ ثِمَارَ أَرْضِهِ حَتَّى تَطْلُعَ الثُّرَيَّا، فَيَتَبَيَّنَ الأَصْفَرُ مِنَ الأَحْمَرِ


Bukhari-2192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84 அராயாவின் விளக்கம்.

ஒரு மனிதர் மற்றொருவருக்குப் பேரீச்ச மரத்தின் ஒருபோக விளைச்சலை (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டு, பெற்றவர்கள் பறிக்க வரும் போது சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். எனவே உலர்ந்த பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு மரத்திலுள்ள கனிகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அராயா என்பது ரொக்கமாக உலர்ந்த பேரீச்சம் பழத்தை முகத்தலளவையில் கொடுப்பதில் மட்டுமே ஆகும். குத்துமதிப்பாகக் கொடுப்பதில் ஆகாது என்று இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஐந்து வஸக் என்ற சஹ்ல் பின் அபீஹஸ்மாவின் அறிவிப்பு இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்களுடைய கூற்றை உறுதிப்படுத்துகிறது.

அராயா என்பது ஒருவர் மற்றவருக்கு ஒன்று அல்லது இரண்டு மரங்களை அன்பளிப்பாக வழங்குவதாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

அராயா என்பது ஏழைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பேரீச்சம் மரங்களாகும். ஏழைகள் (கனியும் வரை) காத்திருக்க சக்தி பெற மாட்டார்கள். எனவே, அவர்கள் உலர்ந்த கனிகளுக்காகத் தாம் விரும்பியவாறு விற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது என்று சுஃப்யான் பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ فِي العَرَايَا أَنْ تُبَاعَ بِخَرْصِهَا كَيْلًا»

قالَ مُوسَى بْنُ عُقْبَةَ وَالعَرَايَا: «نَخَلاَتٌ مَعْلُومَاتٌ تَأْتِيهَا فَتَشْتَرِيهَا»


Next Page » « Previous Page