Author: Farook

Bukhari-2002

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2002. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
Book :30


«كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ»


Bukhari-2001

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2001. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டு விட்டனர்!’
Book :30


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ»


Bukhari-2000

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69

ஆஷூரா (முஹர்ரம் 10ஆம்) நாளில் நோன்பு நோற்றல்.

2000. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!’ இதை இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
Book : 30


«يَوْمَ عَاشُورَاءَ إِنْ شَاءَ صَامَ»


Bukhari-1999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1999. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘தமத்துஉ’ எனும் முறையில் இஹ்ராம் அணிந்தவரே அரஃபா நாள் வரை நோன்பு நோற்கலாம்! பலியிடும் பிராணியும் கிடைக்கவில்லை. நோன்பும் நோற்கவில்லையென்றால் மினாவில் தங்கும் நாள்களில் நோன்பு நோற்கலாம்!’

ஆயிஷா(ரலி) அவர்களும் இவ்வாறு கூறினார்கள் என உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
Book :30


«الصِّيَامُ لِمَنْ تَمَتَّعَ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ إِلَى يَوْمِ عَرَفَةَ، فَإِنْ لَمْ يَجِدْ هَدْيًا وَلَمْ يَصُمْ، صَامَ أَيَّامَ مِنًى»،

وَعَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ مِثْلَهُ


Bukhari-1997

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1997. & 1998. ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:

குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!
Book :30


«لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ التَّشْرِيقِ أَنْ يُصَمْنَ، إِلَّا لِمَنْ لَمْ يَجِدِ الهَدْيَ»


Bukhari-1996

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய அய்யாமுத்) தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்றல்.

1996. யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தங்கக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்!” என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.
Book : 30


كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «تَصُومُ أَيَّامَ التَّشْرِيقِ بِمِنًى، وَكَانَ أَبُوهَا يَصُومُهَا»


Bukhari-1995

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை:

“ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது!

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது!

சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது!

(அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!”
Book :30


لاَ تُسَافِرِ المَرْأَةُ مَسِيرَةَ يَوْمَيْنِ إِلَّا وَمَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ: الفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ بَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى، وَمَسْجِدِي هَذَا


Bukhari-1994

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1994. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று கூறினார். அந்த மனிதர் “(அவர்) திஙகட்கிழமையன்று -(நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)” என்று கூறியதாக நான் நினைக்கிறேன்-

அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் “நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!” என்று கூறினார்கள்.
Book :30


جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ: رَجُلٌ نَذَرَ أَنْ يَصُومَ يَوْمًا، – قَالَ: أَظُنُّهُ قَالَ: الِاثْنَيْنِ -، فَوَافَقَ ذَلِكَ يَوْمَ عِيدٍ، فَقَالَ ابْنُ عُمَرَ: «أَمَرَ اللَّهُ بِوَفَاءِ النَّذْرِ وَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ هَذَا اليَوْمِ»


Bukhari-1993

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1993. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள் தினத்திலும், ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
Book :30


يُنْهَى عَنْ صِيَامَيْنِ، وَبَيْعَتَيْنِ: الفِطْرِ وَالنَّحْرِ، وَالمُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ


Bukhari-1991

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1991. & 1992. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

‘நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்பதையும், இரண்டு புஜங்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக் கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக் கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும்,

1992. ஸுப்ஹுக்குப் பிறகும், அஸர் தொழுகைக்குப் பிறகும் தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்!’
Book :30


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الفِطْرِ وَالنَّحْرِ، وَعَنِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ

1992 – وَعَنْ صَلاَةٍ بَعْدَ الصُّبْحِ وَالعَصْرِ»


Next Page » « Previous Page