Author: Farook

Bukhari-1990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 நோன்புப் பெரு நாள் (-ஈதுல் ஃபித்ர்) தினத்தில் நோன்பு நோற்றல்.

1990. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.

இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும்.
Book : 30


شَهِدْتُ العِيدَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: ” هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا: يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَاليَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ


Bukhari-1989

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1989. மைமூனா(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி(ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள்.
Book :30


أَنَّ النَّاسَ شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ «فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلاَبٍ وَهُوَ وَاقِفٌ فِي المَوْقِفِ فَشَرِبَ مِنْهُ» وَالنَّاسُ يَنْظُرُونَ


Bukhari-1988

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65 அரஃபா நாளில் நோன்பு நோற்றல்.

1988. உம்முல் ஃபழ்லு பின்த் ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் நோன்பு வைத்திருக்கிறார்களா?’ என்று என்னிடம் சிலர் சர்ச்சை செய்தனர். சிலர் ‘அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். மற்றும் சிலர் ‘நோன்பு வைத்திருக்கவில்லை’ என்றார்கள்.

அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி(ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் குடித்தார்கள்.
Book : 30


أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ، «فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ، فَشَرِبَهُ»


Bukhari-1987

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64 சில நாட்களை மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றில் நோன்பு நோற்கலாமா?

1987. அல்கமா(ரஹ்)அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாள்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்?’ என்று கூறினார்கள்.
Book : 30


قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْتَصُّ مِنَ الأَيَّامِ شَيْئًا؟ قَالَتْ: ” لاَ، كَانَ عَمَلُهُ دِيمَةً، وَأَيُّكُمْ يُطِيقُ مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُطِيقُ


Bukhari-1986

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1986. ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். ‘நேற்று நோன்பு வைத்தாயா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றேன். ‘நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கும் ‘இல்லை!’ என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியானால் நோன்பை முறித்து விடு!’ என்றார்கள்.

‘நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்’ என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.
Book :30


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهَا يَوْمَ الجُمُعَةِ وَهِيَ صَائِمَةٌ، فَقَالَ: «أَصُمْتِ أَمْسِ؟»، قَالَتْ: لاَ، قَالَ: «تُرِيدِينَ أَنْ تَصُومِي غَدًا؟» قَالَتْ: لاَ، قَالَ: «فَأَفْطِرِي»،

وَقَالَ حَمَّادُ بْنُ الجَعْدِ: سَمِعَ قَتَادَةَ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، أَنَّ جُوَيْرِيَةَ، حَدَّثَتْهُ: فَأَمَرَهَا فَأَفْطَرَتْ


Bukhari-1985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :30


«لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ»


Bukhari-1984

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 வெள்ளிக் கிழமை நோன்பு நோற்றல்.

வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.

1984. முஹம்மத் இப்னு அப்பாத் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘ஆம்’ என்றார்.

மற்றோர் அறிவிப்பில் வெள்ளிக் கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.
Book : 30


سَأَلْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الجُمُعَةِ؟ قَالَ: «نَعَمْ»،

زَادَ غَيْرُ أَبِي عَاصِمٍ، يَعْنِي: أَنْ يَنْفَرِدَ بِصَوْمٍ


Bukhari-1983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62

மாதக் கடைசியில் நோன்பு நோற்றல்.

1983. முதர்ரிஃப் (ரஹ்) அறிவித்தார்.

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் ‘இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘இல்லை! இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘நீர் நோன்பைவிட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!’ என்று கூறினார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. ‘இம்மாதம்’ என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!’ என்று அபுந் நுஃமான் கூறுகிறார்.

‘நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு ‘இம்மாதம்’ என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!’ என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘ஸல்த்’ என்பவர் கூறவில்லை.

‘ஷஅபானின் கடைசி’ என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
Book : 30


أَنَّهُ سَأَلَهُ – أَوْ سَأَلَ رَجُلًا وَعِمْرَانُ يَسْمَعُ -، فَقَالَ: «يَا أَبَا فُلاَنٍ، أَمَا صُمْتَ سَرَرَ هَذَا الشَّهْرِ؟» قَالَ: – أَظُنُّهُ قَالَ: يَعْنِي رَمَضَانَ -، قَالَ الرَّجُلُ: لاَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ»،

لَمْ يَقُلِ الصَّلْتُ: أَظُنُّهُ يَعْنِي رَمَضَانَ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ : وَقَالَ ثَابِتٌ: عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ سَرَرِ شَعْبَانَ»


Bukhari-1982

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61 ஒரு கூட்டத்தாரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்.

1982. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!’ என்றார்கள்.

பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள். உம்மு ஸுலைம்(ரலி) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது’! என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அது என்ன?’ என்று கேட்டார்கள் ‘உங்கள் ஊழியர் அனஸ்தான்!’ என்று உம்மு ஸுலைம்(ரலி) கூறினார்.

இம்மை மறுமையின் எந்த நன்மையையும்விட்டு விடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு. எனக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். ‘இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்கு! இவருக்கு பரக்கத் செய்!’ என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸார்களிலேயே அதிகச்

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى أُمِّ سُلَيْمٍ، فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ، قَالَ: «أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ، وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ، فَإِنِّي صَائِمٌ» ثُمَّ قَامَ إِلَى نَاحِيَةٍ مِنَ البَيْتِ، فَصَلَّى غَيْرَ المَكْتُوبَةِ، فَدَعَا لِأُمِّ سُلَيْمٍ وَأَهْلِ بَيْتِهَا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي خُوَيْصَّةً، قَالَ: «مَا هِيَ؟»، قَالَتْ: خَادِمُكَ أَنَسٌ، فَمَا تَرَكَ خَيْرَ آخِرَةٍ وَلاَ دُنْيَا إِلَّا دَعَا لِي بِهِ، قَالَ: «اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا، وَبَارِكْ لَهُ فِيهِ»، فَإِنِّي لَمِنْ أَكْثَرِ الأَنْصَارِ مَالًا،

وَحَدَّثَتْنِي ابْنَتِي أُمَيْنَةُ: أَنَّهُ دُفِنَ لِصُلْبِي مَقْدَمَ حَجَّاجٍ البَصْرَةَ بِضْعٌ وَعِشْرُونَ وَمِائَةٌ


Bukhari-1981

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 60

மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் (-அய்யாமுல் பீள்) நோன்பு நோற்றல்.

1981. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’

அத்தியாயம்: 30


أَوْصَانِي خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَلاَثٍ: «صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيِ الضُّحَى، وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَنَامَ»


Next Page » « Previous Page