Author: Farook

Bukhari-1950

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 ரமளானில் (தொழுது) வணங்குவதன் சிறப்பு.

1950. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
Book : 30


«كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلَّا فِي شَعْبَانَ»

قَالَ يَحْيَى: الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-1949

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (ஒரு நோன்பிற்கு பதிலாக) ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்!என்ற (2:184ஆவது) இறைவசனத்தை,

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியின் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமானது அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது! ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்க வேண்டும்! எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்! அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறானே தவிர, உங்களுக்குச் சிரமத்தை(த்தர) அவன் விரும்பவில்லை! (விடுபட்டுப்போன நோன்பு நாட்களின்) எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி, நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இப்படிக் கட்டளையிடுகிறான்!)

என்ற (2:185ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டது! என இப்னு உமர் (ரலி), சலமா பின் அக்வஉ(ரலி) ஆகியோர் கூறுகின்றனர்.

(ரமளான் நோன்பு பற்றிய வசனம் அருளப்பெற்றதும் அது நபித்தோழர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவளிப்பவர் நோன்பிருக்க சக்தியிருந்தும்

قَرَأَ: (فِدْيَةُ طَعَامِ مَسَاكِينَ) قَالَ: «هِيَ مَنْسُوخَةٌ»


Bukhari-1948

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 மக்கள் காணும் வகையில் பயணத்தில் நோன்பை முறித்தல்.

1948. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது!

‘நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர்விட்டு விடவும் செய்யலாம்!’
Book : 30


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ المَدِينَةِ إِلَى مَكَّةَ، فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ، ثُمَّ دَعَا بِمَاءٍ فَرَفَعَهُ إِلَى يَدَيْهِ لِيُرِيَهُ النَّاسَ، فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ، وَذَلِكَ فِي رَمَضَانَ،

فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: «قَدْ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَفْطَرَ، فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ»


Bukhari-1947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 பயணத்தில் நோன்பு நோற்பதையும் நோன்பை விடுவதையும் நபித்தோழர்கள் குறை கூறியதில்லை.

1947. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.
Book : 30


«كُنَّا نُسَافِرُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَعِبِ الصَّائِمُ عَلَى المُفْطِرِ، وَلاَ المُفْطِرُ عَلَى الصَّائِمِ»


Bukhari-1946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 வெப்பம் கடுமையாகி, நிழலில் தங்கவைக்கப்பட்ட ஒருவரிடம், பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

1946. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!’ என்று கூறினார்கள்.
Book : 30


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَرَأَى زِحَامًا وَرَجُلًا قَدْ ظُلِّلَ عَلَيْهِ، فَقَالَ: «مَا هَذَا؟»، فَقَالُوا: صَائِمٌ، فَقَالَ: «لَيْسَ مِنَ البِرِّ الصَّوْمُ فِي السَّفَرِ»


Bukhari-1945

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35

1945. அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!’
Book : 30


«خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فِي يَوْمٍ حَارٍّ حَتَّى يَضَعَ الرَّجُلُ يَدَهُ عَلَى رَأْسِهِ مِنْ شِدَّةِ الحَرِّ، وَمَا فِينَا صَائِمٌ إِلَّا مَا كَانَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَابْنِ رَوَاحَةَ»


Bukhari-1944

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 ரமளானில் சில நாட்கள் நோன்பு நோற்றுவிட்டுப் பின்னர் பயணம் செய்தால்…?

1944. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!’

‘கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்!’ என்று அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.
Book : 30


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَرَجَ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ الكَدِيدَ، أَفْطَرَ»، فَأَفْطَرَ النَّاسُ


Bukhari-1943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1943. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு’ என்றார்கள்.

அத்தியாயம்: 30


أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَأَصُومُ فِي السَّفَرِ؟ –  وَكَانَ كَثِيرَ الصِّيَامِ -، فَقَالَ: «إِنْ شِئْتَ فَصُمْ، وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ»


Bukhari-1942

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1942. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் காலமெல்லாம் நோன்பு நோற்கிறேன்’ என்று கூறினார்.
Book :30


«يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْرُدُ الصَّوْمَ»


Bukhari-1941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 பயணத்தில் நோன்பு நோற்பதும் நோன்பை விடுவதும்.

1941. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற் கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!’ என்று கூறினார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!’ என்றார்.

மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!’ என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!’ என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள்

பிறகு, ‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.
Book : 30


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَالَ لِرَجُلٍ: «انْزِلْ فَاجْدَحْ لِي»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، الشَّمْسُ؟ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لِي»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ الشَّمْسُ؟ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لِي»، فَنَزَلَ فَجَدَحَ لَهُ فَشَرِبَ، ثُمَّ رَمَى بِيَدِهِ هَا هُنَا، ثُمَّ قَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ أَقْبَلَ مِنْ هَا هُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ»


Next Page » « Previous Page