Author: Farook

Bukhari-1940

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1940. ஸாபித் அல் புனானீ அறிவித்தார்.

‘நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!’ என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில்’ என்னும் வாக்கியம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
Book :30


سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَكُنْتُمْ تَكْرَهُونَ الحِجَامَةَ لِلصَّائِمِ؟ قَالَ: «لاَ، إِلَّا مِنْ أَجْلِ الضَّعْفِ»،

وَزَادَ شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-1939

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1939. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்.
Book :30


«احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ صَائِمٌ»


Bukhari-1938

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

நோன்பாளி (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வது, மற்றும் வாந்தி எடுப்பது.

ஒருவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறியாது; ஏனெனில் அவர் (உணவை) வெளியேற்றிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அவரது நோன்பு முறிந்து விடும்! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கூற்றே சரியானதாகும்.

(உணவுப்பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால்தான் நோன்பு முறியும்;வெளியேறுவதால் முறியாது! என இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைத்துக் கொண்டு குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதை விட்டுவிட்டு இரவில் குருதிஉறிஞ்சி எடுக்கலானார்கள்.

அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்வார்கள். உம்மு சலமா (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), சஅத் (ரலி) ஆகியோர் நோன்பு நோற்றிருக்கும் போது குருதிஉறிஞ்சி எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்னிலையில் குருதிஉறிஞ்சி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ، وَاحْتَجَمَ وَهُوَ صَائِمٌ»


Bukhari-1937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 ரமளானில் தாம்பத்தியஉறவு கொண்டவர் அதற்குரிய பரிகாரத்தை ஏழைகளாக உள்ள தம் குடும்பத்தாருக்கே வழங்கிவிடலாமா?

1937. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இயலாது!’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. ‘இதை உம் சார்பாக வழங்குவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கவர் ‘எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!’ என்று கூறினார். ‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 30


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ الآخَرَ وَقَعَ عَلَى امْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَقَالَ: «أَتَجِدُ مَا تُحَرِّرُ رَقَبَةً؟» قَالَ: لاَ، قَالَ: «فَتَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟»، قَالَ: لاَ، قَالَ: «أَفَتَجِدُ مَا تُطْعِمُ بِهِ سِتِّينَ مِسْكِينًا؟» قَالَ: لاَ، قَالَ: فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، – وَهُوَ الزَّبِيلُ -، قَالَ: «أَطْعِمْ هَذَا عَنْكَ» قَالَ: عَلَى أَحْوَجَ مِنَّا، مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا، قَالَ: «فَأَطْعِمْهُ أَهْلَكَ»


Bukhari-1936

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 ரமளானில் பகலில் தாம்பத்தியஉறவு கொண்டுவிட்டு, அதற்குப் பரிகாரம் செய்வதற்கு ஏதுமில்லாத நிலையில் ஒருவருக்கு தர்மம் செய்யப்பட்டால் அதையே அவர் பரிகாரமாக வழங்கலாம்.

1936. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!’ என்று அவர் சொன்னார்.

நபி(ஸல்) அவர்கள், ‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இல்லை!’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், ‘இல்லை!’ என்றார்.

நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘கேள்வி கேட்டவர் எங்கே’ என்றார்கள். ‘நானே!’ என்று அவர் கூறினார். ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்)

بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ. قَالَ: «مَا لَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ»، قَالَ: لاَ، فَقَالَ: «فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا». قَالَ: لاَ، قَالَ: فَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهَا تَمْرٌ – وَالعَرَقُ المِكْتَلُ – قَالَ: «أَيْنَ السَّائِلُ؟» فَقَالَ: أَنَا، قَالَ: «خُذْهَا، فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ الرَّجُلُ: أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا – يُرِيدُ الحَرَّتَيْنِ – أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أَهْلَكَ»


Bukhari-1935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தட்டும்! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று. இந்தக் கூற்றில் நோன்பாளி, நோன்பு நோற்காதவர் என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் கூறவில்லை.

நோன்பாளி, தொண்டைக்குள் செல்லாத வகையில் மூக்கிற்குள் மருந்துச் சொட்டுகளை விட்டுக் கொள்வதில் தவறில்லை என்றும் அவர் அஞ்சனமும் (-சுர்மா) இட்டுக் கொள்ளலாம் என்றும் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் வாய் கொப்பளித்து, வாயிலுள்ள தண்ணீரைத் துப்பிவிட்டால் அதனால் (நோன்பிற்கு) எந்த பாதிப்பும் இல்லை; அவர் எச்சிலையும் வாயில் எஞ்சிய தண்ணீரையும் விழுங்காமல் இருக்க வேண்டும்;பிசின் (போன்ற பண்டங்)களை மெல்லக் கூடாது! அதனுடைய எச்சில் கலந்த சாற்றை விழுங்கவிட்டால் நோன்பு முறியும் என்று நான் கூற மாட்டேன்; எனினும், அ(வ்வாறு விழுங்குவ)து தடுக்கப்பட வேண்டும்! மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தும் போது, தன்னையும் மீறி தண்ணீர் தொண்டைக்குள் நுழைந்து விட்டால் அதில் தவறில்லை என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 29 ரமளானில் (பகலில்) தாம்பத்தியஉறவு கொள்ளுதல்.

ஒருவர் ரமளானில் ஒரு நோன்பை, நோயோ தக்க காரணமோ

إِنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّهُ احْتَرَقَ، قَالَ: «مَا لَكَ؟»، قَالَ: أَصَبْتُ أَهْلِي فِي رَمَضَانَ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِكْتَلٍ يُدْعَى العَرَقَ، فَقَالَ: «أَيْنَ المُحْتَرِقُ» قَالَ: أَنَا، قَالَ: «تَصَدَّقْ بِهَذَا»


Bukhari-1934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 நோன்பாளி ஈரமான மற்றும் காய்ந்த பொருட்களால் பல் துலக்குதல்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள் நான் பார்த்திருக்கிறேன் என்று ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆகிவிடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறும் நான் அவர்களுக்கு உத்தர விட்டிருப்பேன்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் வழியாகவும் இதைப் போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

பல் துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பல் துலக்கும் போது எச்சிலை விழுங்கலாம் என்று கத்தாதா (ரஹ்) அதாஉ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

1934. ஹும்ரான் அறிவித்தார்.

உஸ்மான்(ரலி) உளூச் செய்யும்போது தம் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிப் பின்னர் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்கும்

رَأَيْتُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، تَوَضَّأَ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ اليُمْنَى إِلَى المَرْفِقِ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ يَدَهُ اليُسْرَى إِلَى المَرْفِقِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ اليُمْنَى ثَلاَثًا، ثُمَّ اليُسْرَى ثَلاَثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وَضُوئِي هَذَا ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ وُضُوئِي هَذَا، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ نَفْسَهُ فِيهِمَا بِشَيْءٍ، إِلَّا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»


Bukhari-1933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1933. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :30


«إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»


Bukhari-1931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1931. & 1932. அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

‘நானும் என் தந்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றோம். ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாகக் காலை நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள!’ என்று கூறினார்கள்.

1932. பிறகு, உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.!’
Book :30


كُنْتُ أَنَا وَأَبِي فَذَهَبْتُ مَعَهُ حَتَّى دَخَلْنَا عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: «أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كَانَ لَيُصْبِحُ جُنُبًا مِنْ جِمَاعٍ غَيْرِ احْتِلاَمٍ، ثُمَّ يَصُومُهُ»

1932 – ثُمَّ دَخَلْنَا عَلَى أُمِّ سَلَمَةَ فَقَالَتْ: مِثْلَ ذَلِكَ


Bukhari-1930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 நோன்பாளி குளிப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது ஓர் ஆடையை நனைத்துத் தம் மேல் போட்டுக் கொண்டார்கள்.

ஷஅபீ (ரஹ்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது குளியலறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

(நோன்பாளி) சமையல் பாத்திரத்தில் உள்ளதையோ, வேறெதையுமோ ருசி பார்ப்பதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளி வாய் கொப்பளிப்பதும் (வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக) தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் காலையில் எண்ணெய் தடவித் தலைவாரிக் கொள்ளட்டும்! என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

என்னிடம் கல்தொட்டி ஒன்று இருந்தது; நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அதனுள் அமிழ்வேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது பல் துலக்கினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகலின் ஆரம்ப நேரத்திலும் கடைசி நேரத்திலும் நோன்பாளி பல் துலக்கலாம்; எச்சிலை விழுங்கக் கூடாது என்ற இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُدْرِكُهُ الفَجْرُ فِي رَمَضَانَ مِنْ غَيْرِ حُلْمٍ، فَيَغْتَسِلُ وَيَصُومُ»


Next Page » « Previous Page