Author: Farook

Bukhari-1929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1929. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும் பொழுது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள்: நான் ‘ஆம்!’ என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன்!

நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக் குளிப்போம்! நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள்!’
Book :30


بَيْنَمَا أَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمِيلَةِ، إِذْ حِضْتُ فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي، فَقَالَ «مَا لَكِ أَنَفِسْتِ؟»، قُلْتُ: نَعَمْ، فَدَخَلْتُ مَعَهُ فِي الخَمِيلَةِ
«وَكَانَتْ هِيَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» «وَكَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ»


Bukhari-1928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

நோன்பாளி முத்தமிடல்.

‘ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!’ என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.

1928. உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!’ என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) சிரித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30


إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُقَبِّلُ بَعْضَ أَزْوَاجِهِ وَهُوَ صَائِمٌ»، ثُمَّ ضَحِكَتْ


Bukhari-1927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

நோன்பாளி மனைவியை அணைத்துக்கொள்ளல்.

‘‘(நோன்பாளிக்கு) உடலுறவு மட்டுமே தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்)” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1927. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!’

Book :30

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இங்கு ‘உணர்ச்சி’ என்பதைக் குறிப்பிட ஹதீஸின் மூலத்தில் ‘இர்ப்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதிலிருந்து பிறந்த (‘மஆரிப்’ (20:18) எனும் சொல்லுக்கு ‘தேவைகள்’ என்பது பொருளாகும்.

தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

‘ஃகைரு உலில் இர்பத்’ (24:31) என்பதற்கு ‘பெண்ணாசை இல்லாத பேடி’ என்பது பொருள்.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَكَانَ أَمْلَكَكُمْ لِإِرْبِهِ»،

وَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ {مَآرِبُ} [طه: 18]: «حَاجَةٌ»،

قَالَ طَاوُسٌ: {غَيْرِ أُولِي الإِرْبَةِ} [النور: 31]: «الأَحْمَقُ لاَ حَاجَةَ لَهُ فِي النِّسَاءِ»


Bukhari-1925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 நோன்பு நோற்றவர் (பெருந்துடக்கு ஏற்பட்டு) குளியல் கடமையானவராகக் காலை நேரத்தை அடைதல்.

1925. & 1926. அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!’ என்று ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார்.

மர்வான், என் தந்தையிடம், ‘இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூ ஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்!’ என்று கூறினார். பின்னர் நாங்கள் ‘துல்ஹுலைஃபா’ என்னும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது. அங்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது இருந்தார்;) என் தந்தை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், ‘நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்: மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப்போவதில்லை!’ என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُدْرِكُهُ الفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ، ثُمَّ يَغْتَسِلُ، وَيَصُومُ»،

وَقَالَ مَرْوَانُ، لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ، أُقْسِمُ بِاللَّهِ لَتُقَرِّعَنَّ بِهَا أَبَا هُرَيْرَةَ، وَمَرْوَانُ، يَوْمَئِذٍ عَلَى المَدِينَةِ فَقَالَ أَبُو بَكْرٍ: فَكَرِهَ ذَلِكَ عَبْدُ الرَّحْمَنِ، ثُمَّ قُدِّرَ لَنَا أَنْ نَجْتَمِعَ بِذِي الحُلَيْفَةِ، وَكَانَتْ لِأَبِي هُرَيْرَةَ هُنَالِكَ أَرْضٌ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: لِأَبِي هُرَيْرَةَ إِنِّي ذَاكِرٌ لَكَ أَمْرًا وَلَوْلاَ مَرْوَانُ أَقْسَمَ عَلَيَّ فِيهِ لَمْ أَذْكُرْهُ لَكَ، فَذَكَرَ قَوْلَ عَائِشَةَ، وَأُمِّ سَلَمَةَ: فَقَالَ: كَذَلِكَ حَدَّثَنِي الفَضْلُ بْنُ عَبَّاسٍ وَهُنَّ أَعْلَمُ

وَقَالَ هَمَّامٌ، وَابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِالفِطْرِ «وَالأَوَّلُ أَسْنَدُ»


Bukhari-1924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 நோன்பு நோற்பதாக பகலில் தீர்மானிப்பது.

அபூதர்தா (ரலி) அவர்கள் என்னிடம் உங்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா? என்று கேட்பார்கள்; இல்லையென்று நாங்கள் சொன்னால், நான் இன்றைய தினம் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்! என்று கூறுவார்கள்! என (அவர்களின் துணைவி) உம்மு தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூதல்ஹா (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்துள்ளனர்.

1924. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் ‘யார் சாப்பிட்டுவிட்டாரோ அவர் (நோன்பாக) இருக்கட்டும்!’ யார் சாப்பிடவில்லையோ அவரும் நோன்பாக இருக்கட்டும்! என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.
Book : 30


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا يُنَادِي فِي النَّاسِ يَوْمَ عَاشُورَاءَ «إِنَّ مَنْ أَكَلَ فَلْيُتِمَّ أَوْ فَلْيَصُمْ، وَمَنْ لَمْ يَأْكُلْ فَلاَ يَأْكُلْ»


Bukhari-1923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1923. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 30


«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً»


Bukhari-1922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 சஹர் செய்வதில் அருள்வளம் (-பரக்கத்) இருக்கிறது; ஆனால், அது கட்டாயமில்லை.

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தொடர்நோன்பு வைத்திருக்கிறார்கள்; (அப்படித் தொடர்நோன்பு நோற்ற காலங்களில்) சஹர் செய்தார்கள் என்று கூறப்படவில்லை.

1922. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (நோன்பு திறக்காமல்) தொடர் நோன்பு வைத்தார்கள்; மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு வைத்தார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.

நபித்தோழர்கள், ‘நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!’ என்று பதிலளித்தார்கள்.
Book : 30


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاصَلَ، فَوَاصَلَ النَّاسُ، فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ، قَالُوا: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى»


Bukhari-1921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 சஹருக்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?

1921. அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!’ என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் ‘பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!’ என்று பதிலளித்தார்.
Book : 30


«تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ»، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ ” قَالَ: «قَدْرُ خَمْسِينَ آيَةً»


Bukhari-1920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1920. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

‘நான் என் குடும்பத்தாருடன் ஸஹ்ர் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்!’
Book :30


«كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي، ثُمَّ تَكُونُ سُرْعَتِي أَنْ أُدْرِكَ السُّجُودَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

பிலால் பாங்கு சொல்வது நீங்கள் சஹர் செய்வதிலிருந்து (-வைகறைக்கு முன் உண்பதிலிருந்து) உங்களைத் தடுத்து விட வேண்டாம்! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

1918. ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

பிலால் (ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர் தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!’ என்று குறிப்பிட்டார்கள்.


‘அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!’ என்று காஸிம் (ரஹ்) கூறினார்.

அத்தியாயம்: 30


أَنَّ بِلاَلًا كَانَ يُؤَذِّنُ بِلَيْلٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ لاَ يُؤَذِّنُ حَتَّى يَطْلُعَ الفَجْرُ»،

قَالَ القَاسِمُ: وَلَمْ يَكُنْ بَيْنَ أَذَانِهِمَا إِلَّا أَنْ يَرْقَى ذَا وَيَنْزِلَ ذَا


Next Page » « Previous Page