Author: Farook

Bukhari-1773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 26

உம்ரா

பாடம்: 1

உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.

(வசதியும் வாய்ப்பும் உள்ள) யார் மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகாமல் இருப்பதில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்” (அல்குர்ஆன்: 2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகின்றான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் உம்ரா செய்வது மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச் செயல் கலவாத) ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 26


«العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ»


Bukhari-1772

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1772. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். ஹஜ்ஜை மட்டுமே எண்ணத்தில் கொண்டு (மக்காவிற்கு) வந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு ஏவினார்கள். நாங்கள் ஊர் திரும்பும் (நஃபருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி)வுக்கு மாதவிடாய் வந்துவிட்டது.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!’ என்று கூறிவிட்டு ‘இவர் நம்மைத் தடுத்தேவிட்டாரே’ என்றார்கள். பிறகு அவர்கள், ‘நஹ்ருடைய (10-ஆம்) நாளில், நீ வலம்வந்தாயா?’ எனக் கேட்டதும் அவர் ‘ஆம்’ என்றார். ‘(அப்படியாயின்) நீ புறப்படு’ என்றார்கள்.
அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே என்றேன். அதற்கவர்கள், ‘தன்யீம் என்ற இடத்திற்கு போய் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்’ என்றார்கள்.

–நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன்.
பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களை இரவின் கடைசி நேரத்தில் – போய்க் கொண்டிருக்கும் நிலையில் சந்தித்தோம். அப்போதவர்கள் ‘இன்னின்ன இடங்களில் நீ என்னைச் சந்திக்க வேண்டும்’ என்றனர்.
Book :25


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَذْكُرُ إِلَّا الحَجَّ، فَلَمَّا قَدِمْنَا، أَمَرَنَا أَنْ نَحِلَّ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ النَّفْرِ، حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حَلْقَى عَقْرَى مَا أُرَاهَا إِلَّا حَابِسَتَكُمْ»، ثُمَّ قَالَ: «كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَانْفِرِي»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ حَلَلْتُ، قَالَ: «فَاعْتَمِرِي مِنَ التَّنْعِيمِ» فَخَرَجَ مَعَهَا أَخُوهَا، فَلَقِينَاهُ مُدَّلِجًا فَقَالَ: «مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا»


Bukhari-1771

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 151 முஹஸ்ஸபிலிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல். 

1771. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப்படுவதைவிட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!’ என்று கூறிவிட்டு ‘இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம்வந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் ‘அப்படியாயின் புறப்படு!’ என்றார்கள்.
Book : 25


حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ فَقَالَتْ: مَا أُرَانِي إِلَّا حَابِسَتَكُمْ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَقْرَى حَلْقَى، أَطَافَتْ يَوْمَ النَّحْرِ؟»، قِيلَ: نَعَمْ، قَالَ: «فَانْفِرِي»


Bukhari-1770

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 150 ஹஜ்ஜுக் காலத்தில் வியாபாரம் செய்தலும் அறியாமைக்கால கடைத் தெருக்களில் வாங்குதலும். 

1770. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். அவ்வியாபாரத் தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது ‘(ஹஜ்ஜின் போது) உங்களுடைய இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்களின் மீது குற்றமாகாது’ என்ற02:198வது வசனம் அருளப்பட்டது.

இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கிறது.
Book : 25


كَانَ ذُو المَجَازِ، وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ، حَتَّى نَزَلَتْ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198] فِي مَوَاسِمِ الحَجِّ


Bukhari-1769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 149 மக்காவிலிருந்து திரும்பும் போது தூத்துவாவில் தங்குதல். 

1769. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (மக்காவுக்கு) வரும்போது ஃதூத்துவாவில் இரவு தங்குவார், விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்பார்.

(மக்காவிலிருந்து) திரும்பும் போதும் ஃதூத்துவாவில் விடியும்வரை தங்குவார். மேலும், ‘இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்வார்கள்’ என்றும் கூறுவார்.
Book : 25


«أَنَّهُ كَانَ إِذَا أَقْبَلَ بَاتَ بِذِي طُوًى حَتَّى إِذَا أَصْبَحَ دَخَلَ، وَإِذَا نَفَرَ مَرَّ بِذِي طُوًى، وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ» وَكَانَ يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ


Bukhari-1768

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1768. காலித் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்.

உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் முஹஸ்ஸப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘நபி(ஸல்) அவர்கள், உமர்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்!’ என நாஃபிவு(ரஹ்) அறிவித்தாக எங்களிடம் கூறினார்.

‘இப்னு உமர்(ரலி) முஹஸ்ஸபில் லுஹர், அஸர் தொழுகைகளைத் தொழுவது வழக்கம்!’ என நாஃபிவு(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
‘மக்ரிபு தொழுகையையும் இப்னு உமர்(ரலி) அங்கு தொழுவார்கள்’ என்றும் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என்றும் உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இஷாவையும் இப்னு உமர்(ரலி) அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ(ரஹ்), உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

‘(இஷாவைத் தொழுத) பிறகு, இப்னு உமர்(ரலி) சிறிது நேரம் (அங்கேயே) உறங்கி விடுவார்கள்; பிறகு, ‘நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்’ என்றும் நாஃபிவு(ரஹ்) கூறினார்கள் என, உபைதுல்லாஹ்(ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.
Book :25


سُئِلَ عُبَيْدُ اللَّهِ عَنِ المُحَصَّبِ، فَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ قَالَ: «نَزَلَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعُمَرُ، وَابْنُ عُمَرَ»، وَعَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «كَانَ يُصَلِّي بِهَا – يَعْنِي المُحَصَّبَ – الظُّهْرَ وَالعَصْرَ» أَحْسِبُهُ قَالَ: «وَالمَغْرِبَ»، قَالَ خَالِدٌ لاَ أَشُكُّ فِي العِشَاءِ وَيَهْجَعُ هَجْعَةً، «وَيَذْكُرُ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1767

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் தூத்துவாவில் தங்குவதும், மக்காவைவிட்டுத் திரும்பும் போது துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹாவில் தங்குவதும். 

1767. நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஃதூத்துவாவிலுள்ள இரண்டு கணவாய்களுக்கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ மக்காவிற்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமின் வாசலருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள்.

பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து தவாஃபை ஆரம்பிப்பார்கள். அந்த ஏழு சுற்றுக்களில் மூன்றில் ஓடியும் நான்கில் நடந்தும் வலம்வருவார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு, தம் கூடாரத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவார்கள்.

மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக்குத்) திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தை உட்கார வைத்துத் தங்கிய, துல்ஹு லைஃபாவிலுள்ள பத்ஹா என்னுமிடத்தில் வாகனத்தை உட்கார வைத்துத் தங்குவார்கள்.
Book : 25


أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَانَ يَبِيتُ بِذِي طُوًى، بَيْنَ الثَّنِيَّتَيْنِ، ثُمَّ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الَّتِي بِأَعْلَى مَكَّةَ، وَكَانَ إِذَا قَدِمَ مَكَّةَ، حَاجًّا أَوْ مُعْتَمِرًا، لَمْ يُنِخْ نَاقَتَهُ إِلَّا عِنْدَ بَابِ المَسْجِدِ، ثُمَّ يَدْخُلُ، فَيَأْتِي الرُّكْنَ الأَسْوَدَ، فَيَبْدَأُ بِهِ، ثُمَّ يَطُوفُ سَبْعًا: ثَلاَثًا سَعْيًا وَأَرْبَعًا مَشْيًا، ثُمَّ يَنْصَرِفُ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَنْطَلِقُ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى مَنْزِلِهِ، فَيَطُوفُ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، وَكَانَ إِذَا صَدَرَ عَنِ الحَجِّ أَوِ العُمْرَةِ «أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الحُلَيْفَةِ، الَّتِي كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنِيخُ بِهَا»


Bukhari-1766

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1766. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல, அது நபி(ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம் அவ்வளவுதான்!’
Book :25


«لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ، إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1765

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 147 முஹஸ்ஸபில் தங்குதல். 

1765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல) பயணம் எளிதாவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்!’
Book : 25


«إِنَّمَا كَانَ مَنْزِلٌ يَنْزِلُهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِيَكُونَ أَسْمَحَ لِخُرُوجِهِ» يَعْنِي بِالأَبْطَحِ


Bukhari-1764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1764. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மஃரிபு, இஷா ஆகிய தொழுகைகளை நிறைவேற்றியதும் முஹஸ்ஸப் என்னுமிடத்தில் சற்று உறங்கிவிட்டு, பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை வலம்வந்தார்கள்.
Book :25


أَنَّهُ «صَلَّى الظُّهْرَ وَالعَصْرَ، وَالمَغْرِبَ وَالعِشَاءَ، وَرَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى البَيْتِ، فَطَافَ بِهِ»


Next Page » « Previous Page