Author: Farook

Bukhari-1763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 146 மக்காவிலிருந்து புறப்படும் நாளில் அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல். 

1763. அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8ஆம் நாள் எங்கு லுஹர் தொழுதார்கள்?’ என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்!’ என்று பதிலளித்தார்கள்.

அடுத்து நான், ‘(மக்காவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 வது) நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்கே அஸர் தொழுதார்கள்?’ என்று கேட்டதற்கு. ‘அப்தஹில்!’ என்று கூறிவிட்டு, ‘உன்னுடைய தலைவர்கள் செய்வது போல் நீயும் செய்து கொள்!’ என்று கூறினார்கள்.
Book : 25


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَخْبِرْنِي بِشَيْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ؟ قَالَ: «بِمِنًى»، قُلْتُ: فَأَيْنَ صَلَّى العَصْرَ يَوْمَ النَّفْرِ؟ قَالَ: «بِالأَبْطَحِ» افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ


Bukhari-1762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1762. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா, மர்வாவையும் வலம்வந்தார்கள். ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களின் மனைவிமார்கள், அவர்களின் தோழர்கள் அனைவரும் வலம்வந்தார்கள். பிறகு அவர்களில் பலிப்பிராணி கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்க மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா வழிபாடுகளையும் செய்தோம்.

நபி(ஸல்) அவர்கள் முஹஸ்ஸப் என்னுமிடத்தில் தங்கியிருந்த வீடு திரும்ப வேண்டிய இரவில் நான், ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்!’ என்றேன். அதற்கவர்கள், ‘நாம் மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ வலம் வரவில்லைதானே!’ எனக் கேட்டார்கள். நான் ‘இல்லை!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீ உன்னுடைய சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்! மேலும் இன்னின்ன இடங்களில் என்னைச் சந்தித்துக் கொள்!’ எனக் கூறினார்கள்.

நான்

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نَرَى إِلَّا الحَجَّ، فَقَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ بِالْبَيْتِ، وَبَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ وَلَمْ يَحِلَّ، وَكَانَ مَعَهُ الهَدْيُ، فَطَافَ مَنْ كَانَ مَعَهُ مِنْ نِسَائِهِ وَأَصْحَابِهِ، وَحَلَّ مِنْهُمْ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ الهَدْيُ، فَحَاضَتْ هِيَ، فَنَسَكْنَا مَنَاسِكَنَا مِنْ حَجِّنَا، فَلَمَّا كَانَ لَيْلَةَ الحَصْبَةِ، لَيْلَةُ النَّفْرِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّ أَصْحَابِكَ يَرْجِعُ بِحَجٍّ وَعُمْرَةٍ غَيْرِي، قَالَ: «مَا كُنْتِ تَطُوفِينَ بِالْبَيْتِ لَيَالِيَ قَدِمْنَا» قُلْتُ: لاَ، قَالَ: «فَاخْرُجِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ، وَمَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا». فَخَرَجْتُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ، وَحَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَقْرَى حَلْقَى، إِنَّكِ لَحَابِسَتُنَا، أَمَا كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَلاَ بَأْسَ انْفِرِي» فَلَقِيتُهُ مُصْعِدًا عَلَى أَهْلِ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ، وَقَالَ مُسَدَّدٌ: قُلْتُ: لاَ، تَابَعَهُ جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ فِي قَوْلِهِ: لاَ


Bukhari-1761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1761. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவைவிட்டுச் செல்லக்கூடாது!’ என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு அவர்களே, ‘நபி(ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்!’ எனக் கூறினார்கள்.
Book :25


وَسَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: إِنَّهَا لاَ تَنْفِرُ، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: بَعْدُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَخَّصَ لَهُنَّ»


Bukhari-1760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1760. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃபுஸ் ஸியாரத் செய்தால் (மக்காவைவிட்டுச்) சென்று விடுவதற்கு அவளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.
Book :25


«رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا أَفَاضَتْ»


Bukhari-1758 & 1759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1758. & 1759. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘ஒரு பெண் வலம்வந்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘அவள் (தவாஃபுல்வதா செய்யாமல்) போய் விட வேண்டியது தான்!’ என்றார்கள்.

அப்போது அவர்கள், ‘உம்முடைய சொல்லை எடுத்துக் கொண்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் கூற்றைவிட்டுவிட நாங்கள் தயாரில்லை!’ என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்!’ என்றார்.

அவர்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்மு ஸுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள்.
Book :25


أَنَّ أَهْلَ المَدِينَةِ سَأَلُوا ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ امْرَأَةٍ طَافَتْ ثُمَّ حَاضَتْ، قَالَ لَهُمْ: تَنْفِرُ، قَالُوا: لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعُ قَوْلَ زَيْدٍ قَالَ: إِذَا قَدِمْتُمُ المَدِينَةَ فَسَلُوا، فَقَدِمُوا المَدِينَةَ، فَسَأَلُوا، فَكَانَ فِيمَنْ سَأَلُوا أُمُّ سُلَيْمٍ، فَذَكَرَتْ حَدِيثَ صَفِيَّةَ رَوَاهُ خَالِدٌ، وَقَتَادَةُ، عَنْ عِكْرِمَةَ


Bukhari-1757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 145 தவாஃபுஸ் ஸியாரத் செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால்…? 

1757. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு தோழர்கள் ‘அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்கள்!’ என்று கூற, நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியானால் பரவாயில்லை! (நாம் போகலாம்!)’ என்றார்கள்.
Book : 25


أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ – زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – حَاضَتْ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَحَابِسَتُنَا هِيَ» قَالُوا: إِنَّهَا قَدْ أَفَاضَتْ قَالَ: «فَلاَ إِذًا»


Bukhari-1756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1756. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிபு, இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுதுவிட்டு முஹஸ்ஸப் என்னும் (மக்காவுக்கும் மினாவுக்குமிடையேயுள்ள) ஓரிடத்தில் உறங்கினார்கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அங்கு வலம்வந்தார்கள்.
Book :25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ، وَالعَصْرَ، وَالمَغْرِبَ، وَالعِشَاءَ، ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى البَيْتِ، فَطَافَ بِهِ»


Bukhari-1755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 144 தவாஃபுல் வதா (விடைபெறும் தவாஃப்). 

1755. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர்.

ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும்விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)
Book : 25


«أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الحَائِضِ»


Bukhari-1754

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 143 கல்லெறிந்த பின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுஸ் ஸியாரத்திற்கு முன்பு தலை மழித்துக்கொள்வதும். 

1754. காஸிம்(ரஹ்) அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) ‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடிய போதும், தவாஃபுஸ் ஸியாரத் செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல்லெறிந்துவிட்டு, தலை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டு விட்டிருந்த வேளையிலும், நான் அவர்களுக்கு என்னுடைய இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கிறேன்!’ எனக் கூறித் தம் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார்கள்.
Book : 25


«طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ هَاتَيْنِ، حِينَ أَحْرَمَ، وَلِحِلِّهِ حِينَ أَحَلَّ، قَبْلَ أَنْ يَطُوفَ، وَبَسَطَتْ يَدَيْهَا»


Bukhari-1753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 142 முதலிரண்டு ஐம்ராக்களிலும் பிரார்த்தித்தல். 

1753. ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள்.

பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு இடப்பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து, கிப்லாவை முன்னோக்கி நின்று கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறுகற்களை எறிவார்கள்.

ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறுவார்கள். பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள்.
ஸாலிம்(ரஹ்) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் இச்செயலை, தம் தந்தை இப்னு உமர்(ரலி) வழியாக அறிவித்ததை செவியுற்றுள்ளேன். இப்னு உமர்(ரலி)யும் இவ்வாறே செய்பவராக இருந்தார்.
Book : 25


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَمَى الجَمْرَةَ الَّتِي تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا، فَوَقَفَ مُسْتَقْبِلَ القِبْلَةِ، رَافِعًا يَدَيْهِ يَدْعُو، وَكَانَ يُطِيلُ الوُقُوفَ، ثُمَّ يَأْتِي الجَمْرَةَ الثَّانِيَةَ، فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ اليَسَارِ، مِمَّا يَلِي الوَادِيَ، فَيَقِفُ مُسْتَقْبِلَ القِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، ثُمَّ يَأْتِي الجَمْرَةَ الَّتِي عِنْدَ العَقَبَةِ، فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَنْصَرِفُ وَلاَ يَقِفُ عِنْدَهَا» قَالَ الزُّهْرِيُّ: سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ مِثْلَ هَذَا، عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ


Next Page » « Previous Page