Author: Farook

Bukhari-1752

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 141 முதல் ஐம்ராவிலும் இரண்டாவது ஐம்ராவிலும் கைகளை உயர்த்துதல். 

1752. ஸாலிம்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள்.
ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள்.

பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய் கிப்லாவை முன்னோக்கி மிக நீண்ட நேரம் நின்று கொண்டு கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள்.

பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, ‘இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!’ எனக் கூறுவார்கள்.
Book : 25


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، كَانَ يَرْمِي الجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، ثُمَّ يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ فَيُسْهِلُ، فَيَقُومُ مُسْتَقْبِلَ القِبْلَةِ قِيَامًا طَوِيلًا، فَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الجَمْرَةَ الوُسْطَى كَذَلِكَ، فَيَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيُسْهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ القِبْلَةِ قِيَامًا طَوِيلًا، فَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الجَمْرَةَ ذَاتَ العَقَبَةِ مِنْ بَطْنِ الوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا، وَيَقُولُ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ»


Bukhari-1751

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 139 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்துவிடுவது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக (அதாவது, நபி (ஸல்) அவர்கள் கடைசி ஜம்ராவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் திரும்பிவிட்டதாக) இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 140 இரண்டு ஜம்ராக்களில் கல்லெறிந்த பின்பு கிப்லாவை முன்னோக்கி, சமதளமான தரையில் நிற்பது. 

1751. ஸாலிம்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று பிரார்த்திப்பார்கள்.

பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடப்பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, ‘இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்!’ எனக் கூறுவார்கள்.
Book : 25


أَنَّهُ كَانَ يَرْمِي الجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ، فَيَقُومَ مُسْتَقْبِلَ القِبْلَةِ، فَيَقُومُ طَوِيلًا، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الوُسْطَى، ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيَسْتَهِلُ، وَيَقُومُ مُسْتَقْبِلَ القِبْلَةِ، فَيَقُومُ طَوِيلًا، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، وَيَقُومُ طَوِيلًا، ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ العَقَبَةِ مِنْ بَطْنِ الوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا، ثُمَّ يَنْصَرِفُ، فَيَقُولُ «هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ»


Bukhari-1750

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 138 ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறவேண்டும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அறிவித்துள்ளார்கள். 

1750. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார்.

ஹஜ்ஜாஜ் மிம்பர் மீது ஏறி, ‘பசுமாடு பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம். இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகிற அத்தியாயம், பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்’ என்று கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன்.

இதுபற்றி நான் இப்ராஹீமிடம் கூறியபோது அவர், இதுபற்றி அப்துர் ரஹ்மான் இப்னு யஸித் பின்வருமாறு கூறினார்கள் என குறிப்பிட்டார்.

‘நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருக்கும்போது, இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்போது பத்னுல்வாதி என்னும் இடத்தை அடைந்து, அதிலுள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்று கொண்டு, ஏழுகற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள்.

ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். ‘பிறகு அல்லாஹ்வின் மீது ஆணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந்தபடி) நின்றார்கள்!’ என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
Book : 25


سَمِعْتُ الحَجَّاجَ، يَقُولُ عَلَى المِنْبَرِ: السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا البَقَرَةُ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا آلُ عِمْرَانَ، وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا النِّسَاءُ، قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ فَقَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ أَنَّهُ كَانَ مَعَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ رَمَى جَمْرَةَ العَقَبَةِ، فَاسْتَبْطَنَ الوَادِيَ حَتَّى إِذَا حَاذَى بِالشَّجَرَةِ اعْتَرَضَهَا، فَرَمَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ قَالَ: «مِنْ هَا هُنَا وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ قَامَ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ البَقَرَةِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1749

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 137 ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது இறையில்லம் கஅபா, தமது இடப் பக்கமிருக்கும்படி நிற்பது. 

1749. அப்துர் ரஹ்மான் இப்னு யஸித்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன்; அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தங்களின் இடப்பக்கத்தில் கஅபாவும் வலப்பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்றார்கள். பிறகு அவர்கள் ‘இதுவே பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் எறிந்த இடமாகும்!’ என்று கூறினார்கள்.
Book : 25


أَنَّهُ حَجَّ مَعَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَرَآهُ يَرْمِي الجَمْرَةَ الكُبْرَى بِسَبْعِ حَصَيَاتٍ، فَجَعَلَ البَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ، ثُمَّ قَالَ: «هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ البَقَرَةِ»


Bukhari-1748

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 136 (ஜம்ராக்களின் மீது கல்லெறியும் போது) ஏழு சிறு கற்களை எறிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எறிந்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

1748. அப்துர் ரஹ்மான் இப்னு யஸித்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தம் இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும் படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார்.

பிறகு ‘இவ்வாறுதான், பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்களும் எறிந்தார்கள்!’ என்று கூறினார்கள்.
Book : 25


أَنَّهُ انْتَهَى إِلَى الجَمْرَةِ الكُبْرَى جَعَلَ البَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ، وَرَمَى بِسَبْعٍ وَقَالَ: «هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ البَقَرَةِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1747

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 135 பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிதல். 

1747. அப்துர் ரஹ்மான் இப்னு யஸித்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், ‘அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லெறிகின்றனர்?’ எனக் கேட்டேன்.

அதற்கவர்கள், ‘எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி(ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இதுதான்!’ எனக் கூறினார்கள்.
Book : 25


رَمَى عَبْدُ اللَّهِ مِنْ بَطْنِ الوَادِي، فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّ نَاسًا يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا؟ فَقَالَ: «وَالَّذِي لاَ إِلَهَ غَيْرُهُ، هَذَا مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ البَقَرَةِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1746. வபரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘நான் எப்போது கல்லெறிவது?’ என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘உம்முடைய தலைவர் எறியும்போது நீரும் எறியும்!’ என்றார்கள்.

நான் மீண்டும் அதே கேள்வி கேட்டபோது, ‘நாங்கள் சூரியன் உச்சி சாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல்எறிவோம்!’ எனக் கூறினார்கள்.
Book :25


سَأَلْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، مَتَى أَرْمِي الجِمَارَ؟ قَالَ: «إِذَا رَمَى إِمَامُكَ، فَارْمِهْ» فَأَعَدْتُ عَلَيْهِ المَسْأَلَةَ، قَالَ: «كُنَّا نَتَحَيَّنُ فَإِذَا زَالَتِ الشَّمْسُ رَمَيْنَا»


Bukhari-1745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1745. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டர்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
Book :25


أَنَّ العَبَّاسَ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَبِيتَ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى مِنْ أَجْلِ سِقَايَتِهِ، «فَأَذِنَ لَهُ»


Bukhari-1744

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1744. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டர்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
Book : 25

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ


Bukhari-1743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 133 தண்ணீர் வழங்குபவர்களும் மற்றவர்களும் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்கலாமா? 

1743. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ்(ரலி), அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
Book : 25


رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page