Author: Farook

Bukhari-1742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1742. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது, ‘இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றனர். உடனே அவர்கள் ‘இது புனிதமிக்க தினமாகும்!

இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்க மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றனர். உடனே அவர்கள் ‘(இது) புனித மிக்க நகரமாகும்!

இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?’ என்றதும் மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘(இது) புனிதமிக்க மாதமாகும்!’ எனக் கூறிவிட்டு,

‘உங்களுடைய இந்த (புனித) நகரத்தில் உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும் உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!’ எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்தபோது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கிடையே நின்று கொண்டு, ‘இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்!’ எனக் கூறினார்கள்.

மேலும், ‘இறைவா! நீயே சாட்சி!’ என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே, மக்களும் ‘இது நபி(ஸல்) அவர்கள்

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَقَالَ: «فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا؟»، قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «بَلَدٌ حَرَامٌ، أَفَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” شَهْرٌ حَرَامٌ، قَالَ: فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا “، وَقَالَ هِشَامُ بْنُ الغَازِ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ بَيْنَ الجَمَرَاتِ فِي الحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا، وَقَالَ: «هَذَا يَوْمُ الحَجِّ الأَكْبَرِ» فَطَفِقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اشْهَدْ» وَوَدَّعَ النَّاسَ، فَقَالُوا: هَذِهِ حَجَّةُ الوَدَاعِ


Bukhari-1741

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1741. அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10-ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ எனக் கேட்டார்கள். நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்துவிட்டு, ‘இது (பலியிடுவதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?’ என்றனர். நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘இது எந்த மாதம்?’ என அவர்கள் கேட்டதும் நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள்.

பிறகு, ‘இது துல்ஹஜ் மாதம் அல்லவா?’ என அவர்கள் கேட்க, நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்!’ என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மெளனமாக இருந்தார்கள். பிறகு ‘இது புனிதமிக்க நகரமல்லவா?’ எனக் கேட்க, நாங்கள் ‘ஆம்!’ என்றோம். பிறகு ‘உங்களுடைய (புனிதமான) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ

خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، قَالَ: «أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا؟»، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ؟» قُلْنَا: بَلَى، قَالَ: «أَيُّ شَهْرٍ هَذَا؟»، قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ «أَلَيْسَ ذُو الحَجَّةِ؟»، قُلْنَا: بَلَى، قَالَ «أَيُّ بَلَدٍ هَذَا؟» قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَسَكَتَ حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، قَالَ «أَلَيْسَتْ بِالْبَلْدَةِ الحَرَامِ؟» قُلْنَا: بَلَى، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ، أَلَا هَلْ بَلَّغْتُ؟»، قَالُوا: نَعَمْ، قَالَ: «اللَّهُمَّ اشْهَدْ، فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَرُبَّ مُبَلَّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ، فَلَا تَرْجِعُوا بَعْدِي  كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-1740

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1740. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்’                                                                        Book :25


«سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ بِعَرَفَاتٍ»


Bukhari-1739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘மக்களே! இது எந்த நாள்?’ எனக் கேட்டார்கள். மக்கள் ‘புனிதமிக்க தினம்’ என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இது எந்த நகரம்?’ எனக் கேட்டதும் மக்கள் ‘புனிதமிக்க நகரம்’ என்றனர். பிறகு அவர்கள் ‘இது எந்த மாதம்?’ எனக் கேட்டதும் மக்கள் ‘புனிதமிக்க மாதம்!’ என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!’ எனப் பல முறை கூறினார்கள்.

பிறகு தலையை உயர்த்தி, ‘இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?’ என்றும் கூறினார்கள்.
என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.

பின்னர் ‘இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.                     

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ النَّحْرِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ أَيُّ يَوْمٍ هَذَا؟»، قَالُوا: يَوْمٌ حَرَامٌ، قَالَ: «فَأَيُّ بَلَدٍ هَذَا؟»، قَالُوا: بَلَدٌ حَرَامٌ، قَالَ: «فَأَيُّ شَهْرٍ هَذَا؟»، قَالُوا: شَهْرٌ حَرَامٌ “، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا»، فَأَعَادَهَا مِرَارًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: ” اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ، اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ – قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهَا لَوَصِيَّتُهُ إِلَى أُمَّتِهِ، فَلْيُبْلِغِ الشَّاهِدُ الغَائِبَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ


Bukhari-1737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1737 & 1738. அப்துல்லாஹ் இப்னு அம்ர்ப்னுல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, ‘நான் இதற்கு முன் இது என நினைத்தேன்!’ என்றார்.

இன்னொருவர் எழுந்து, ‘நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! பலியிட்டு விட்டேன்!’ என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்!’ என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்!’ என்றே கூறினார்கள்.
Book :25


أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ النَّحْرِ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ: كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا، ثُمَّ قَامَ آخَرُ فَقَالَ: كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا، حَلَقْتُ  قَبْلَ أَنْ أَنْحَرَ، نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، وَأَشْبَاهَ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْعَلْ وَلاَ حَرَجَ» لَهُنَّ كُلِّهِنَّ، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ: «افْعَلْ وَلاَ حَرَجَ»

1738. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عِيسَى بْنُ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ العَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاقَتِهِ، فَذَكَرَ الحَدِيثَ، تَابَعَهُ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ


Bukhari-1736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 131 ஜம்ராவில், வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் போது (மக்களுக்குத்) தீர்ப்பளித்தல். 

1736. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (தம் வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், ‘நான் பலியிடுவதற்கு முன்பாக, உணராமல் தலையை மழித்து விட்டேன்!’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது பலிப்பிராணியை) அறுப்பீராக!’ என்று கூறினார்கள்.

பிறகு இன்னொருவர் வந்து ‘கல்லெறிவதற்கு முன்பு அறியாமையினால் அறுத்து பலியிட்டுவிட்டேன்’ எனக் கூறியதும் அவர்கள் ‘குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக!’ என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டு விட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்படவேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (விடுபட்டத்தைச்) செய்வீராக!’ என்றே கூறினார்கள்.
Book : 25


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ فِي حَجَّةِ الوَدَاعِ، فَجَعَلُوا يَسْأَلُونَهُ، فَقَالَ رَجُلٌ: لَمْ أَشْعُرْ، فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: «اذْبَحْ وَلاَ حَرَجَ»، فَجَاءَ آخَرُ فَقَالَ: لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «ارْمِ وَلاَ حَرَجَ»، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ إِلَّا قَالَ: «افْعَلْ وَلاَ حَرَجَ»


Bukhari-1735

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1735. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மினாவில் இருந்தபோது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு ‘குற்றமில்லை!’ என்றே பதில் கூறினார்கள்.

ஒருவர் ‘நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்து விட்டேன்!’ என்று கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! (இப்போது) பலியிடுவீராக!’ எனக் கூறினார்கள்.

பிறகு அவர் ‘நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்!’ என்றதும் நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.
Book :25


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْأَلُ يَوْمَ النَّحْرِ بِمِنًى، فَيَقُولُ: «لاَ حَرَجَ» فَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: «اذْبَحْ وَلاَ حَرَجَ» وَقَالَ: رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ، فَقَالَ: «لاَ حَرَجَ»


Bukhari-1734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 130 மறதியினாலோ அறியாமையினாலோ, மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானி கொடுப்படுதற்கு முன்பு தலையை மழிப்பதும். 

1734. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பலியிடுவது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை!’ எனக் கூறினார்கள்.
Book : 25


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ فِي الذَّبْحِ، وَالحَلْقِ، وَالرَّمْيِ، وَالتَّقْدِيمِ، وَالتَّأْخِيرِ فَقَالَ: «لَا حَرَجَ»


Bukhari-1733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1733. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபியா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் ஸஃபியாவிடம் உறவு கொள்ள நாடினார்கள்.

நான், இறைத்தூதர் அவர்களே! அவருக்கு மாதவிடாய் வந்துள்ளதே! என்றேன் அதற்கவர்கள், ‘அவர் (நம்முடைய பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், ‘அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!’ என்றதும் ‘அப்படியாயின் புறப்படுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :25


حَجَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَفَضْنَا يَوْمَ النَّحْرِ، فَحَاضَتْ صَفِيَّةُ فَأَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا مَا يُرِيدُ الرَّجُلُ مِنْ أَهْلِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا حَائِضٌ، قَالَ: «حَابِسَتُنَا هِيَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَفَاضَتْ يَوْمَ النَّحْرِ، قَالَ: «اخْرُجُوا»

وَيُذْكَرُ عَنِ القَاسِمِ، وَعُرْوَةَ، وَالأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَفَاضَتْ صَفِيَّةُ يَوْمَ النَّحْرِ


Bukhari-1732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 129

துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவு வரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள். 

1732. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஒரேயொரு வலம் வந்துவிட்டுப் பகல் தூக்கமடைந்தார். பிறகு துல்ஹஜ் பத்தாம்நாள் மினாவுக்கு வந்தார்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக (இப்னு உமர்(ரலி) கூறினார் என) மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
Book : 25


«أَنَّهُ طَافَ طَوَافًا وَاحِدًا ثُمَّ يَقِيلُ، ثُمَّ يَأْتِي مِنًى، يَعْنِي يَوْمَ النَّحْرِ»

وَرَفَعَهُ عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ


Next Page » « Previous Page