Author: Farook

Bukhari-1731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 128 ஹஜ்ஜுத் தமத்துஉ’ செய்பவர்கள் உம்ராவுக்குப் பின் தலைமுடியைக் குறைத்துக் கொள்ளல். 

1731. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்த பின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்றும், பிறகு தலையை மழித்துக் கொள்ளவோ, முடியைக் குறைத்துக் கொள்ளவோ வேண்டுமென்றும் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
Book : 25


«لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ أَمَرَ أَصْحَابَهُ أَنْ يَطُوفُوا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، ثُمَّ يَحِلُّوا وَيَحْلِقُوا أَوْ يُقَصِّرُوا»


Bukhari-1730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1730. முஆவியா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் முடியைக் கத்தரிக் கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்.
Book :25


«قَصَّرْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِشْقَصٍ»


Bukhari-1729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1729. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் தலையை மழித்தனர். இன்னும் சிலர் முடியைக் குறைத்தனர்.
Book :25


«حَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ وَقَصَّرَ بَعْضُهُمْ»


Bukhari-1728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1728. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்…’ என்றனர். (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்…’ என்றனர்.

நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக!)’ எனக் கூறினார்கள்.
Book :25


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ» قَالُوا: وَلِلْمُقَصِّرِينَ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ»، قَالُوا: وَلِلْمُقَصِّرِينَ، قَالَهَا ثَلاَثًا، قَالَ: «وَلِلْمُقَصِّرِينَ»


Bukhari-1726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 127 இஹ்ராமிலிருந்து விடுபடும் போது முடியைக் குறைத்துக்கொள்வதும், மழித்துக்கொள்வதும். 

1726. & 1727. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கருணை புரி!’ எனக் கூறியதும் தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்’ என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு நீ கிருபை செய்வாயாக!’ எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்..’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)’ என்று கூறினார்கள்.

இன்னொரு அறிவிப்பின்படி ‘அல்லாஹ் தலையை மழித்துக் கொள்பவர்களுக்குக் கருணை புரிவானாக!’ என்று ஒரு முறையோ இரண்டு முறையோ கூறினார்கள் என உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது முறையில், ‘முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்…’ எனக் கூறினார்கள் என உள்ளது.
Book : 25


1726. «حَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّتِهِ»

1727. «اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ» قَالُوا: وَالمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «اللَّهُمَّ ارْحَمِ المُحَلِّقِينَ» قَالُوا: وَالمُقَصِّرِينَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَالمُقَصِّرِينَ»،

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي نَافِعٌ: «رَحِمَ اللَّهُ المُحَلِّقِينَ» مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، قَالَ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ: حَدَّثَنِي نَافِعٌ، وَقَالَ فِي الرَّابِعَةِ: «وَالمُقَصِّرِينَ»

 


Bukhari-1725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 126 இஹ்ராமின் போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும், தலையை மழித்துக் கொள்வதும். 

1725. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே. என்ன காரணம்?’ எனக் கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலையும் தொங்க விட்டு விட்டேன்; எனவே, குர்பானி கொடுக்கும்வரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது!’ என்றார்கள்.
Book : 25


يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ»


Bukhari-1724

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1724. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும்போது நான் அங்கு வந்தேன். அப்போது அவர்கள், ‘ஹஜ் செய்ய நாடி விட்டீரா?’ எனக் கேட்க, நான் ‘ஆம்!’ என்றேன். ‘எதற்காக இஹ்ராம் அணிந்தீர்?’ என அவர்கள் கேட்டதும் ‘நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காக!’ என்றேன்.

உடனே அவர்கள், ‘நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாவையும் வலம்வாரும்!’ என்றார்கள். பிறகு நான் கைஸ் கோத்திரத்தாரின் பெண்களில் (மஹ்ரமான) ஒருவரிடம் வந்தேன். அவர் என்னுடைய தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தேன்.

இந்த அடிப்படையிலேயே உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறி வந்தேன்! உமர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி நான் கூறியதும் அவர்கள், ‘நாம் இறைவேதத்தை எடுத்துக் கொண்டால், அதுவோ (ஹஜ் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகிறது; நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்டால், நபி(ஸல்) அவர்கள் பலிப் பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை என்று தெரிகிறது!’ எனக் கூறினார்கள்.
Book :25


قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِالْبَطْحَاءِ، فَقَالَ: «أَحَجَجْتَ؟»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِمَا أَهْلَلْتَ؟»، قُلْتُ: لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: «أَحْسَنْتَ، انْطَلِقْ، فَطُفْ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ»، ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ نِسَاءِ بَنِي قَيْسٍ، فَفَلَتْ: رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالحَجِّ، فَكُنْتُ أُفْتِي بِهِ النَّاسَ، حَتَّى خِلاَفَةِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَذَكَرْتُهُ لَهُ، فَقَالَ: إِنْ نَأْخُذْ بِكِتَابِ اللَّهِ، فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ نَأْخُذْ بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَحِلَّ حَتَّى بَلَغَ الهَدْيُ مَحِلَّهُ


Bukhari-1723

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1723. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!’ என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டதும். அவர்கள் ‘குற்றமில்லை!’ என்று கூறினார்கள். பிறகு அவர், ‘நான் பலியிடும் முன்பாகத் தலையை மழித்து விட்டேன்!’ என்ற போதும் அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றே கூறினார்கள்.
Book :25


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: رَمَيْتُ بَعْدَ مَا أَمْسَيْتُ فَقَالَ: «لاَ حَرَجَ»، قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لاَ حَرَجَ»


Bukhari-1722

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1722. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்து விட்டேன்’ என்றார். அதற்கவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள்.

பிறகு அவர், ‘நான் பலியிடுவதறகு முன்பாகத் தலையை மழித்து விட்டேன்’ என்றதும் அவர்கள் ‘குற்றமில்லை!’ என்றார்கள். மேலும் அவர் ‘நான் கல்லெறிவதற்கு முன்பாகப் பலியிட்டு விட்டேன்’ என்ற போதும் அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள்.

அத்தியாயம்: 25


قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ «لاَ حَرَجَ». قَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ، قَالَ: «لاَ حَرَجَ». قَالَ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «لاَ حَرَجَ»


Bukhari-1721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 125 தலைமுடியை மழிப்பதற்கு முன் குர்பானி கொடுத்தல். 

1721. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அது போன்றவற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை! குற்றமில்லை! என்றனர்.
Book : 25


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ فَقَالَ «لاَ حَرَجَ، لاَ حَرَجَ»


Next Page » « Previous Page