Author: Farook

Bukhari-1710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1710. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வழக்கமாக நபி(ஸல்) அவர்கள் பலியிட்ட இடத்தில் பலியிடுவார்.
Book :25


أَنَّ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ «كَانَ يَنْحَرُ فِي المَنْحَرِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: «مَنْحَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1709. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள், நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும் ‘பலிப்பிராணியைக் கொண்டு வராதவர்கள் வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி முடித்தவுடன், இஹ்ராமைக் களைந்து விடவேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. ‘இது என்ன?’ என கேட்டேன். மக்கள் ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரின் சார்பாக பலியிட்டார்கள்’ என்றனர்.
Book :25


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي القَعْدَةِ، لاَ نُرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ إِذَا طَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ أَنْ يَحِلَّ»، قَالَتْ: فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ، فَقُلْتُ: مَا هَذَا؟ قَالَ: نَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَزْوَاجِهِ


Bukhari-1708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1708. நாஃபிவு அறிவித்தார்.

இப்னுஸ் ஸுபைர்(ரலி) உடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டு, இப்னு உமர்(ரலி) ஹஜ் செய்ய நாடினார். அப்போது அவரிடம், ‘மக்களிடையே போர் மூண்டுள்ளது; எனவே உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்’ எனக் கூறப்பட்டது.

உடனே அவர், ‘அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது! எனவே அந்த நேரத்தில் (நபி(ஸல்) அவர்கள் செய்ததையே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறிப் புறப்பட்டு ‘பைதா’ என்னுமிடத்திற்கு வந்ததும் ‘ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றேதான்; (எனவே) நான் உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்!’ எனக் கூறினார்.

மேலும் அடையாள மாலையிடப்பட்ட பலிப்பிராணியை வாங்கினார். மக்கா வந்து கஅபாவைத் வலம்வந்துவிட்டு, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி சஃயு செய்தார். இதை விட வேறெதுவும் அதிகமாகச் செய்யவில்லை.

துல்ஹஜ் 10ஆம் நாளில்தான் குர்பானிப் பிராணியை பலியிட்டுவிட்டுத் தலைமுடியை மழித்தார். அதுவரை, இஹ்ராம் அணிந்த நிலையில் விலக்கப்பட்ட எதையும் செய்யவில்லை.

‘முதலில் தாம் நிறைவேற்றிவிட்ட தவாஃபே ஹஜ் – உம்ரா இரண்டிற்கும் போதும்’

أَرَادَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا الحَجَّ عَامَ حَجَّةِ الحَرُورِيَّةِ فِي عَهْدِ ابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ وَنَخَافُ أَنْ يَصُدُّوكَ، فَقَالَ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21] «إِذًا أَصْنَعَ كَمَا صَنَعَ، أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً» حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ البَيْدَاءِ، قَالَ: «مَا شَأْنُ الحَجِّ وَالعُمْرَةِ إِلَّا وَاحِدٌ أُشْهِدُكُمْ أَنِّي قَدْ جَمَعْتُ حَجَّةً مَعَ عُمْرَةٍ»، وَأَهْدَى هَدْيًا مُقَلَّدًا اشْتَرَاهُ حَتَّى قَدِمَ، فَطَافَ بِالْبَيْتِ وَبِالصَّفَا، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى يَوْمِ النَّحْرِ، فَحَلَقَ وَنَحَرَ، وَرَأَى أَنْ قَدْ  قَضَى طَوَافَهُ الحَجَّ وَالعُمْرَةَ بِطَوَافِهِ، الأَوَّلِ ثُمَّ قَالَ: «كَذَلِكَ صَنَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1707. அலீ(ரலி) அறிவித்தார்.

பலியிடும் பிராணியின் சேணத்தையும் அதன் தோலையும் தர்மம் செய்து விடவேண்டுமென நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

Book :25


«أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ البُدْنِ الَّتِي نَحَرْتُ وَبِجُلُودِهَا»


Bukhari-1706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1706. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பலிப்பிராணியை இழுத்துச் சென்ற ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்ளும்’ என்றார்கள். அதற்கு அவர், ‘இது பலிப்பிராணி’ என்றதும் ‘அதில் ஏறுவீராக!’ என்றனர்.

பிறகு அவர் அதில் ஏறிச் சென்றதை பார்த்தேன். அவர் நபி(ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பிராணியின் கழுத்தில் செருப்பு கிடந்தது.
Book :25


أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا»، قَالَ: فَلَقَدْ رَأَيْتُهُ رَاكِبَهَا، يُسَايِرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّعْلُ فِي عُنُقِهَا


Bukhari-1705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1705. உம்முல் மூமினீன் (ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளை என்னிடத்திலிருந்த கம்பளியால் செய்தேன்.
Book :25


«فَتَلْتُ قَلاَئِدَهَا مِنْ عِهْنٍ كَانَ عِنْدِي»


Bukhari-1704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1704. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பாக, அவர்களின் பலிப்பிராணிக்கு கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைத் தொடுத்தேன்.
Book :25


«فَتَلْتُ لِهَدْيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – تَعْنِي القَلاَئِدَ – قَبْلَ أَنْ يُحْرِمَ»


Bukhari-1703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1703. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் ஆட்டிற்குக் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையொன்றைத் தொடுத்தேன்.

அந்த (கழுத்தில் அடையாளம் தொங்கவிடப்பட்ட) ஆட்டை நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) அனுப்பிவிட்டு அவர்கள் (வீட்டில்) இஹ்ராமில்லாத நிலையில் தங்கினார்கள்.
Book :25


«كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ الغَنَمِ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَبْعَثُ بِهَا، ثُمَّ يَمْكُثُ حَلاَلًا»


Bukhari-1702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1702. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்காகக் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலைகளைக் கோர்த்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்டின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். (பிராணியை மக்காவுக்கு அனுப்பிவிட்டுத்) தம் வீட்டில் இஹ்ராம் அணியாத நிலையில் தங்கினார்கள்.
Book :25


«كُنْتُ أَفْتِلُ القَلاَئِدَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيُقَلِّدُ الغَنَمَ، وَيُقِيمُ فِي أَهْلِهِ حَلاَلًا»


Bukhari-1701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1701. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை ஆட்டைப் பலியிட்டார்கள்.
Book :25


«أَهْدَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً غَنَمًا»


Next Page » « Previous Page