Author: Farook

Bukhari-1700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1700. அம்ர் பின்த் அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

‘பலிப்பிராணியைக் கொண்டு வருகிறவர் அதை பலியிடும்வரை ஹஜ் செய்பவரின் மீது விலக்கப்பட்டதெல்லாம்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறாரே!’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஸியாத் இப்னு அபீ சுஃப்யான் எழுதிக் கேட்டதற்கு ஆயிஷா(ரலி) சொல்வது போலில்லை;

நான் நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்கு, கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை என்னுடைய கையாலேயே கோர்த்திருக்கிறேன்; நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் அதன் கழுத்தில் தொங்கவிட்டார்கள்.

பிறகு, பிராணியை என்னுடைய தந்தையுடன் (மக்காவுக்கு) அனுப்பி வைத்தார்கள்; ஆனால் அந்த பலிப்பிராணி பலியிடப்படும் வரை அவர்கள், தமக்கு அல்லாஹ் அனுமதித்த எதையும் தடுத்துக் கொள்ளவில்லை!’ எனக் கூறினார்.
Book :25


أَنَّ زِيَادَ بْنَ أَبِي سُفْيَانَ كَتَبَ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الحَاجِّ حَتَّى يُنْحَرَ هَدْيُهُ، قَالَتْ عَمْرَةُ: فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ، «أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ أَحَلَّهُ اللَّهُ لَهُ حَتَّى نُحِرَ الهَدْيُ»


Bukhari-1699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1699. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்கு, (அவற்றின்) கழுத்தில் தொங்கவிடும் அடையாள மாலையை நான் என் கையால் கோர்த்தேன். அவற்றை அவர்கள் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டார்கள்… அல்லது நான் அவற்றைப் பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டேன்..

பிறகு அதை கீறிக் காயப்படுத்தி அடையாளமிட்டார்கள். பிறகு அதை இறையில்லம் கஅபாவின் பக்கமாக அனுப்பி வைத்துவிட்டு, மதீனாவில் தங்கியிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எதுவும் விலக்கப்படவில்லை.
Book :25


«فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا، أَوْ قَلَّدْتُهَا ثُمَّ بَعَثَ بِهَا إِلَى البَيْتِ، وَأَقَامَ بِالْمَدِينَةِ فَمَا حَرُمَ عَلَيْهِ شَيْءٌ كَانَ لَهُ حِلٌّ»


Bukhari-1698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1698. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே பலிப்பிராணியைக் கொண்டு செல்பவர்களாக இருந்தார்கள். எனவே, நான் அவர்களின் பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் மாலையைக் கோர்த்துக் கொடுப்பேன்.

(பலிப்பிராணியை அனுப்பிவிட்டு) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர் தவிர்த்துக் கொள்ளும் எதையும் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
Book :25


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُهْدِي مِنَ المَدِينَةِ، فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ، ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ المُحْرِمُ»


Bukhari-1697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1697. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே!’ எனக் கேட்டேன்.

அதற்கவர்கள் ‘நான் தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். என்னுடைய பலிப்பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்க விட்டுள்ளேன்; எனவே நான் ஹஜ்ஜை நிறைவேற்றாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்!’ எனக் கூறினார்கள்.
Book :25


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَحِلَّ مِنَ الحَجِّ»


Bukhari-1696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1696. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள்.

அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்.)
Book :25


«فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا وَأَشْعَرَهَا وَأَهْدَاهَا، فَمَا حَرُمَ عَلَيْهِ شَيْءٌ كَانَ أُحِلَّ لَهُ»


Bukhari-1694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1694. & 1695. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான்(ரலி) ஆகியோர் அறிவித்தார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த ஆண்டு நபி(ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள்.
Book :25


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الحُدَيْبِيَةِ مِنَ المَدِينَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ حَتَّى  إِذَا كَانُوا بِذِي الحُلَيْفَةِ، قَلَّدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الهَدْيَ، وَأَشْعَرَ وَأَحْرَمَ بِالعُمْرَةِ»


Bukhari-1693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1693. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ், தம் தந்தை இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கே இருங்கள். ஏனெனில் பைத்துல்லாஹ்வை நெருங்க விடாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது’ எனக் கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), ‘அப்படியாயின் நான் நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்வேன். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என அல்லாஹ் கூறியுள்ளான்.

எனவே, நான் என் மீது உம்ராவைக் கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களையே நான் சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறிவிட்டு, உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பைதா என்னுமிடத்தை அடைந்ததும் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து தல்பியா கூறினார்கள்.

பிறகு அவர்கள் ‘ஹஜ்ஜும் உம்ராவும் ஒரே மாதிரியானவையே!’ எனக் கூறிவிட்டு, குதைத் என்னுமிடத்தில் குர்பானிப் பிராணியை விலைக்கு வாங்கிக் கொண்டு இறையில்லம் கஅபாவுக்கு வந்து, அவ்விரண்டிற்காகவும் (ஹஜ்ஜுக்காகவும் உம்ராவிற்காகவும்) ஒரேயொரு வலம்வந்தார்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றும் வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அத்தியாயம்: 25


قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ لِأَبِيهِ: أَقِمْ، فَإِنِّي لاَ آمَنُهَا أَنْ سَتُصَدُّ عَنِ البَيْتِ، قَالَ: «إِذًا أَفْعَلُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ قَالَ اللَّهُ»: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]، «فَأَنَا أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عَلَى نَفْسِي العُمْرَةَ»، فَأَهَلَّ بِالعُمْرَةِ مِنَ الدَّارِ، قَالَ: ثُمَّ خَرَجَ حَتَّى إِذَا كَانَ بِالْبَيْدَاءِ أَهَلَّ بِالحَجِّ وَالعُمْرَةِ، وَقَالَ: «مَا شَأْنُ الحَجِّ وَالعُمْرَةِ إِلَّا وَاحِدٌ»، ثُمَّ اشْتَرَى الهَدْيَ مِنْ قُدَيْدٍ، ثُمَّ قَدِمَ فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، فَلَمْ يَحِلَّ حَتَّى حَلَّ مِنْهُمَا جَمِيعًا


Bukhari-1692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1692. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். மக்களும் அவர்களுடன் ஹஜ், உம்ராச் செய்தார்கள்.

இப்னு உமர்(ரலி) கூறிய (முன் ஹதீஸிலுள்ள) செய்தியையே ஆயிஷா(ரலி) எனக்குக் கூறினார் என உர்வா அறிவித்தார்.
Book :25


فِي تَمَتُّعِهِ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَهُ بِمِثْلِ الَّذِي أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-1691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1691. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜையும் செய்தார்கள். (மதீனாவாசிகளின் எல்லையான துல்ஹுலைஃபாவிலிருந்தே தம்முடன் குர்பானிப் பிராணியை ஓட்டிச் சென்று குர்பானியையும் கொடுத்தார்கள். முதலில் உம்ராவுக்காக தல்பியா கூறி, பிறகு ஹஜ்ஜுக்காக தல்பியா கூறினார்கள்.

மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்குமாகச் சேர்த்து இஹ்ராம் அணிந்தார்கள். மக்களில் சிலர் குர்பானி கொடுப்பவர்களாக இருந்தனர். எனவே, குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலரோ, குர்பானி கொடுப்பவர்களாக இல்லை. (எனவே, அவர்கள் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வரவில்லை); நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மக்களிடம், ‘உங்களில் யார் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்துள்ளார்களோ அவர் தம் ஹஜ்ஜை நிறைவேற்றாத வரை இஹ்ராமிருந்து விடுபடக் கூடாது; யார் குர்பானிப் பிராணி கிடைக்கவில்லையோ அவர் ஹஜ்ஜு நாள்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு) தம் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்கட்டும்!’ என்று கூறினார்கள். பிறகு மக்காவுக்கு நபி(ஸல்) அவர்கள் வந்ததும், இறையில்லம் கஅபாவை வலம்வந்துவிட்டு முதலாவதாக ருக்னை (ஹஜருல் அஸ்வதை) முத்தமிட்டார்கள். பிறகு மூன்று

تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، بِالعُمْرَةِ إِلَى الحَجِّ وَأَهْدَى، فَسَاقَ مَعَهُ الهَدْيَ مِنْ ذِي الحُلَيْفَةِ ، وَبَدَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهَلَّ بِالعُمْرَةِ ثُمَّ أَهَلَّ بِالحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ، فَكَانَ مِنَ النَّاسِ مَنْ أَهْدَى، فَسَاقَ الهَدْيَ وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَالَ: لِلنَّاسِ «مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى، فَإِنَّهُ لاَ يَحِلُّ لِشَيْءٍ حَرُمَ مِنْهُ، حَتَّى يَقْضِيَ حَجَّهُ، وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ أَهْدَى، فَلْيَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَلْيُقَصِّرْ وَلْيَحْلِلْ، ثُمَّ لِيُهِلَّ بِالحَجِّ، فَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا، فَلْيَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ». فَطَافَ حِينَ قَدِمَ مَكَّةَ، وَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَيْءٍ، ثُمَّ خَبَّ ثَلاَثَةَ أَطْوَافٍ وَمَشَى أَرْبَعًا، فَرَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ عِنْدَ المَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا، فَطَافَ بِالصَّفَا وَالمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ، ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ، وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ، وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَرُمَ مِنْهُ، وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَهْدَى وَسَاقَ الهَدْيَ مِنَ النَّاسِ


Bukhari-1690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1690. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்ளும்!’ என்றார்கள்.

அதற்கவர், ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே?’ என்றதும். ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!’ என்றார்கள். மீண்டும் அவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!’ என்றதும் ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!’ என மூன்றாம் முறையும் கூறினார்கள்.
Book :25


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» ثَلاَثًا


Next Page » « Previous Page