Author: Farook

Bukhari-1614

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1614. & 1615. உர்வா இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தவுடன் முதல் வேலையாக உளூச் செய்து, ‘தவாஃப் செய்தார்கள். அது (வெறும்) உம்ராவாக இருக்கவில்லை. அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோரும் இது போன்றே ஹஜ் செய்தார்கள்’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

1615. ‘நான் என் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவரும் முதன்முதலாக வந்தார். முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் இவ்வாறு செய்ததையே பார்த்தேன். மேலும் ‘நானும், என் சகோதரியும், தந்தை ஸுபைரும், இன்னாரும், இன்னாரும் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தோம். நாங்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்ட பின் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்’ என்று என் தாய் (அஸ்மா) கூறினார்.
Book :25


1614. «أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ – حِينَ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ»، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً

1615. ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ، وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: مِثْلَهُ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ، ثُمَّ رَأَيْتُ المُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَهُ، وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي: أَنَّهَا أَهَلَّتْ هِيَ، وَأُخْتُهَا، وَالزُّبَيْرُ، وَفُلاَنٌ وَفُلاَنٌ، بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا


Bukhari-1613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62 ருக்னுக்கு அருகில் வரும் போது தக்பீர் கூறுதல்.

1613. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு ‘அல்லாஹு அக்பர்’ ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறினார்கள்.’
Book :25


«طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى الرُّكْنَ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ كَانَ عِنْدَهُ وَكَبَّرَ»


Bukhari-1612

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61 ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போது சைகை செய்தல்

1612. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும் போதெல்லாம் சைகை செய்தார்கள்.’
Book : 25


«طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ»


Bukhari-1611

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1611. ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார்.

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!’ எனக் கூறினார்கள்.

அப்போது நான், ‘கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!’ என (மீண்டும்) கூறினார்கள்.
Book :25


سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ اسْتِلاَمِ الحَجَرِ، فَقَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ» قَالَ: قُلْتُ: أَرَأَيْتَ إِنْ زُحِمْتُ، أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ، قَالَ: «اجْعَلْ أَرَأَيْتَ بِاليَمَنِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ»


Bukhari-1610

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது. 

1610. அஸ்லம் அறிவித்தார்.

ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!’ என்று கூறினார்கள்.
Book : 25


رَأَيْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَبَّلَ الحَجَرَ، وَقَالَ: «لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ»


Bukhari-1609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1609. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் தொட்டதை நான் பார்த்ததில்லை.’
Book :25


«لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ مِنَ البَيْتِ إِلَّا الرُّكْنَيْنِ اليَمَانِيَيْنِ»


Bukhari-1608

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற இரு மூலைகளை தொடாதிருத்தல். 

1608. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (தொடாமல்) தவிர்க்க முடியும்?

முஆவியா(ரலி) எல்லா மூலைகளையும் தொடுபவராக இருந்தார்கள்’ என்று அபூ ஷஅஸா கூறினார்.

முஆவியா(ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), ‘(ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரண்டு மூலைகளை தொடக் கூடாது’ என்றார்கள்.

அதற்கு அபூ ஷஅஸா ‘இந்த ஆலயத்தில் தொட தடுக்கப்பட்ட பகுதி ஏதுமில்லை’ என்றார். இப்னுஸ் ஸுபைர்(ரலி) எல்லா மூலைகளையும் தொடுவார்கள்.
Book : 25


«وَمَنْ يَتَّقِي شَيْئًا مِنَ البَيْتِ؟» وَكَانَ مُعَاوِيَةُ يَسْتَلِمُ الأَرْكَانَ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: إِنَّهُ لاَ يُسْتَلَمُ هَذَانِ الرُّكْنَانِ، فَقَالَ: «لَيْسَ شَيْءٌ مِنَ البَيْتِ مَهْجُورًا» وَكَانَ ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يَسْتَلِمُهُنَّ كُلَّهُنَّ»


Bukhari-1607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 தலை வளைந்த கம்பின் மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொடுதல். 

1607. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம்வந்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.
Book : 25


«طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ»


Bukhari-1606

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1606. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் தொட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் தொடுவதை விட்டதில்லை.’

‘இப்னு உமர்(ரலி) அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்து செல்வாரா?’ என நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் கேட்டபோது, ‘தொடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்துதான் செல்வார்’ எனக் கூறினார்’ என்று உபைதுல்லாஹ் அறிவித்தார்.
Book :25


«مَا تَرَكْتُ اسْتِلاَمَ هَذَيْنِ الرُّكْنَيْنِ فِي شِدَّةٍ وَلاَ رَخَاءٍ، مُنْذُ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُمَا»، قُلْتُ لِنَافِعٍ: أَكَانَ ابْنُ عُمَرَ يَمْشِي بَيْنَ الرُّكْنَيْنِ؟ قَالَ: «إِنَّمَا كَانَ يَمْشِي لِيَكُونَ أَيْسَرَ لِاسْتِلاَمِهِ»


Bukhari-1605

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1605. அஸ்லம் அறிவித்தார்.

உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்.

பிறகு ‘நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?’ எனக் கூறிவிட்டு, ‘எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனை விட்டுவிட நாம் விரும்பவில்லை’ எனக் கூறினார்கள்.
Book :25


أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لِلرُّكْنِ: «أَمَا وَاللَّهِ، إِنِّي لَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَلَمَكَ مَا اسْتَلَمْتُكَ»، فَاسْتَلَمَهُ ثُمَّ قَالَ: «فَمَا لَنَا وَلِلرَّمَلِ إِنَّمَا كُنَّا رَاءَيْنَا بِهِ المُشْرِكِينَ وَقَدْ أَهْلَكَهُمُ اللَّهُ»، ثُمَّ قَالَ: «شَيْءٌ صَنَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ نُحِبُّ أَنْ نَتْرُكَهُ»


Next Page » « Previous Page