Author: Farook

Bukhari-1626

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1626. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து) மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள். வலம்வராத நிலையில் நானும் புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஸுப்ஹுத் தொழுகைக்காக இகாமத் – சொல்லப்பட்டவுடன் மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின் மீதமர்ந்து வலம்வந்து கொள்’ எனக் கூறினார்கள். அவ்வாறே செய்தேன். இதனால் (இரண்டு ரக் அத்களை) பள்ளிக்கு வெளியே வந்த பிறகே தொழுதேன்.’
Book :25


«إِذَا أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَطُوفِي عَلَى بَعِيرِكِ وَالنَّاسُ يُصَلُّونَ». فَفَعَلَتْ ذَلِكَ، فَلَمْ تُصَلِّ حَتَّى خَرَجَتْ


Bukhari-1625

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1625. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை வலம்வந்தார்கள்; ஸஃபா மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள். இந்தத் வலம் வருவதற்குப் பின்னால் அரஃபாவிலிருந்து திரும்பும் வரை கஅபாவிற்குச் செல்லவில்லை.’
Book :25


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، فَطَافَ وَسَعَى بَيْنَ الصَّفَا، وَالمَرْوَةِ وَلَمْ يَقْرَبِ الكَعْبَةَ بَعْدَ طَوَافِهِ بِهَا، حَتَّى رَجَعَ مِنْ عَرَفَةَ»


Bukhari-1623

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1623 & 1624 அம்ர் அறிவித்தார்.

1623. உம்ராச் செய்யும் மனிதன் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுவதற்கு முன்னால் தன் மனைவியோடு கூடலாமா? என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டோம். ‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை சுற்றினார்கள்; பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு இடையில் ஓடினார்கள்’ என்று கூறிவிட்டு, இப்னு உமர்(ரலி) ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது’ என்ற வசனத்தை ஓதினார்.

1624. நான் இதே கேள்வியை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ‘ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஓடுவதற்கு முன்னால் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது’ என அவர்கள் பதிலளித்தார்கள்.
Book :25


1623. أَيَقَعُ الرَّجُلُ عَلَى امْرَأَتِهِ فِي العُمْرَةِ قَبْلَ أَنْ يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ؟ قَالَ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، ثُمَّ صَلَّى خَلْفَ المَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ» وَقَالَ: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ)

1624. قَالَ: وَسَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ: «لاَ يَقْرَبُ امْرَأَتَهُ حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»


Bukhari-1622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1622. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள்,

‘எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாக வலம்வரக் கூடாது’ என அறிவிக்கச் செய்தார்கள்.
Book :25


أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ بَعَثَهُ فِي الحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ حَجَّةِ الوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ «أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ العَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ»


Bukhari-1621

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1621. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் கையில் (ஒட்டக) வாரையோ (சேணக் கச்சையோ) அல்லது வேறு ஏதோ ஒன்றையோ கட்டியவராக வலம்வருவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதனைத் துண்டித்தார்கள்.
Book :25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَطُوفُ بِالكَعْبَةِ بِزِمَامٍ – أَوْ غَيْرِهِ -، فَقَطَعَهُ»


Bukhari-1620

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தாவாஃப் செய்யும் போது பேசுதல்

1620. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கஅபாவை வலம்வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு அருகே ஒருவர் தம் கையை ஒட்டக வாரினாலோ, கயிற்றினாலோ, வேறு ஏதோ ஒன்றினாலோ மற்றொருவரின் கையோடு இணைத்துக் கட்டிக் கொண்டு (வலம்வந்த வண்ணம்) சென்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கையால் துண்டித்துவிட்டு ‘இவருடைய கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லும்!’ என்று அந்த மற்றொருவரிடம் கூறினார்கள்.
Book :25


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ وَهُوَ يَطُوفُ بِالكَعْبَةِ بِإِنْسَانٍ رَبَطَ يَدَهُ إِلَى إِنْسَانٍ بِسَيْرٍ – أَوْ بِخَيْطٍ أَوْ بِشَيْءٍ غَيْرِ ذَلِكَ -، فَقَطَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ قَالَ: «قُدْهُ بِيَدِهِ»


Bukhari-1619

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1619. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) ‘நான் நோயுற்றுள்ளேன்’ என்று நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கவர்கள், ‘நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம் வா’ என்றார்கள். நான் அது போன்றே வலம்வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.
Book :25


شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَشْتَكِي، فَقَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَئِذٍ يُصَلِّي إِلَى جَنْبِ البَيْتِ وَهُوَ يَقْرَأُ: ” وَالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ


Bukhari-1618

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1618. இப்னு ஜுரைஜ் அறிவித்தார்.

பெண்கள் ஆண்களோடு வலம்வருவதை இப்னு ஹிஷாம் தடுத்தது பற்றி நான் அதாவிடம் கூறியபோது, ‘அவர் எப்படித் தடுக்கலாம்? நபி(ஸல்) அவர்களின் மனைவியர்கள் ஆண்களோடு வலம்வந்துள்ளனரே!’ என அதா கூறினார். அதற்கு நான் ‘இ(வ்வாறு செய்த)து ஹிஜாபின் சட்டம் அருளப்படுவதற்கு முன்னரா அல்லது பின்னரா?’ எனக் கேட்க, அவர் ‘ஆம்! என் வாழ்நாளின் (அதிபதி) மீது சத்தியமாக! ஹிஜாபுடைய சட்டம் அருளப்பட்டதற்குப் பின்னரே இந்நிகழ்ச்சியை கண்டேன்!’ என்றார்.

மீண்டும் நான் ‘அது எப்படி? பெண்கள் ஆண்களோடு (ஒருவரோடொருவர்) கலந்து விடுவார்களோ?’ என்று கேட்டேன். அதற்கு, ‘கலந்து விட மாட்டார்கள்; ஆயிஷா(ரலி) ஆண்களோடு கலக்காமல் ஓரமாக வலம்வருவார்கள்; அப்போது ஒரு பெண், ‘இறைநம்பிக்கையாளர்களின் தாயே! நடங்கள்! நாம் சென்று ஹஜருல் அஸ்வதை) முத்தமிடுவோம்!’ என்றார். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நீ போ(ய் முத்தமிடு)!’ என்றார்கள். அப்பெண் செல்ல மறுத்துவிட்டார்.

இரவிலும் பெண்கள் தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொண்டு சென்று ஆண்களோடு வலம்வருவார்கள், ஆனால், பெண்கள் கஅபாவினுள் நுழைய நாடினால், உள்ளே இருக்கும் ஆண்கள் வெளியேறும் வரை அதற்காகக் காத்திருப்பார்கள்; நானும் உபைத் இப்னு உமைரும் ஆயிஷா(ரலி) அவர்களைச் சந்திப்போம்; அப்போது

إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ مَعَ الرِّجَالِ، قَالَ: كَيْفَ يَمْنَعُهُنَّ؟ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الرِّجَالِ؟ قُلْتُ: أَبَعْدَ الحِجَابِ أَوْ قَبْلُ؟ قَالَ: إِي لَعَمْرِي، لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الحِجَابِ، قُلْتُ: كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ؟ قَالَ: لَمْ يَكُنَّ يُخَالِطْنَ، كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَطُوفُ حَجْرَةً مِنَ الرِّجَالِ، لاَ تُخَالِطُهُمْ، فَقَالَتْ امْرَأَةٌ: انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ المُؤْمِنِينَ، قَالَتْ: «انْطَلِقِي عَنْكِ»، وَأَبَتْ، يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ، فَيَطُفْنَ مَعَ الرِّجَالِ، وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ البَيْتَ، قُمْنَ حَتَّى يَدْخُلْنَ، وَأُخْرِجَ الرِّجَالُ، وَكُنْتُ آتِي عَائِشَةَ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، وَهِيَ مُجَاوِرَةٌ فِي جَوْفِ ثَبِيرٍ، قُلْتُ: وَمَا حِجَابُهَا؟ قَالَ: هِيَ فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ، لَهَا غِشَاءٌ، وَمَا بَيْنَنَا وَبَيْنَهَا غَيْرُ ذَلِكَ، وَرَأَيْتُ عَلَيْهَا دِرْعًا مُوَرَّدًا


Bukhari-1617

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1617. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முதல் வலம்வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள்.
Book :25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا طَافَ بِالْبَيْتِ الطَّوَافَ الأَوَّلَ، يَخُبُّ ثَلاَثَةَ أَطْوَافٍ، وَيَمْشِي أَرْبَعَةً، وَأَنَّهُ كَانَ يَسْعَى بَطْنَ المَسِيلِ، إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»


Bukhari-1616

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1616. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ வந்தால் முதன்முதலாக கஅபாவை வலம் வருவார்கள். அதில் முதல் மூன்று சுற்றுக்களில் விரைந்து ஓடுவார்கள்; பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவார்கள்.
Book :25


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا طَافَ فِي الحَجِّ أَوِ العُمْرَةِ، أَوَّلَ مَا يَقْدَمُ سَعَى ثَلاَثَةَ أَطْوَافٍ، وَمَشَى أَرْبَعَةً، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ يَطُوفُ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»


Next Page » « Previous Page