Author: Farook

Bukhari-1636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1636. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருக்கும்போது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி எனது நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ஸம்ஸம் நீரால் கழுவினர்.பிறகு ஈமானும் ஞானமும் நிரம்ப தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டு வந்து அதிலுள்ளதை என் நெஞ்சில் நிரப்பி நெஞ்சை மூடினார்.

பிறகு என்கையைப் பிடித்து முதல் வானத்திற்கு ஏற்றிச் சென்றார். முதல்வானத்தின் காவலரிடம் ,திறப்பீராக!, என்றார். ,தட்டுவது யார்,என அக்காவலர் கேட்க ஜிப்ரீல் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்..
Book :25


فُرِجَ سَقْفِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ، مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا: افْتَحْ قَالَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ


Bukhari-1635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1635. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் வழங்கும் இடத்திற்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) (தம் மகன்) ஃபள்ல் (ரலி) அவர்களிடம் ‘ஃபள்லே! நீ உன் தாயிடம் சென்று அவர்களிடமுள்ள தண்ணீரை எடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடு!’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்!’ எனக் கேட்க, அப்பாஸ் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்கள் கரங்களை இதனுள் போடுகிறார்கள்’ என்று கூறினார்கள். இறுதியாக அதிலிருந்தே தண்ணீர் குடித்துவிட்டு, ஸம்ஸம் கிணற்றிற்கு வந்தார்கள்.

அங்கு சிலர், தண்ணீர் வழங்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களிடம், ‘செய்யுங்கள்! நீங்கள் நல்ல வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள்!’ எனக் கூறிவிட்டு ‘மக்கள் உங்களை மிகைத்து விடமாட்டார்கள் என்றிருந்தால் ஒட்டகத்திலிருந்து இறங்கி நான் இதில் தண்ணீரைச் சுமப்பேன்’ என்று தம் தோளின் பக்கம் சைகை செய்து கூறினார்கள்.

அத்தியாயம்: 25


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى السِّقَايَةِ فَاسْتَسْقَى، فَقَالَ العَبَّاسُ: يَا فَضْلُ، اذْهَبْ إِلَى أُمِّكَ فَأْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ مِنْ عِنْدِهَا، فَقَالَ: «اسْقِنِي»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ، قَالَ: «اسْقِنِي»، فَشَرِبَ مِنْهُ، ثُمَّ أَتَى زَمْزَمَ وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا، فَقَالَ: «اعْمَلُوا فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ» ثُمَّ قَالَ: «لَوْلاَ أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ، حَتَّى أَضَعَ الحَبْلَ عَلَى هَذِهِ» يَعْنِي: عَاتِقَهُ، وَأَشَارَ إِلَى عَاتِقِهِ


Bukhari-1634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1634. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி). (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் வினியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக் கொள்ள, நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
Book :25


اسْتَأْذَنَ العَبَّاسُ بْنُ عَبْدِ المُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيتَ بِمَكَّةَ  لَيَالِيَ مِنًى، مِنْ أَجْلِ سِقَايَتِهِ، «فَأَذِنَ لَهُ»


Bukhari-1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1633. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

‘நான் நோயுற்றுள்ளேன்!’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அதற்கவர்கள் ‘நீ மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து வலம் வா!’ என்றார்கள். நான் அது போன்றே வலம்வந்தேன்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அத்தூர்’ எனும் அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பகுதியில் தொழுது கொண்டிருந்தார்கள்.
Book :25


شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَشْتَكِي، فَقَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَنْبِ البَيْتِ، وَهُوَ يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ


Bukhari-1632

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1632. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை வலம்வந்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம் கையிலுள்ள ஏதேனும் ஒன்றைக் கொண்டு ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டுத் தக்பீரும் கூறுவார்கள்.
Book :25


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالْبَيْتِ وَهُوَ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ فِي يَدِهِ، وَكَبَّرَ»


Bukhari-1631

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1631. அப்துல் அஸிஸ் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள்,  அஸருக்குப் பின்பும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழையும்போதெல்லாம் இந்த இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை’ என ஆயிஷா(ரலி) கூறினார் என்றும் அறிவித்தார்.
Book :25


وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، – وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلَّا صَلَّاهُمَا»


Bukhari-1630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1630. அப்துல் அஸிஸ் இப்னு ருஃபை(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸுப்ஹுக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுவதை கண்டேன்.’
Book :25


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَطُوفُ بَعْدَ الفَجْرِ وَيُصَلِّي رَكْعَتَيْنِ


Bukhari-1629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1629. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றிருக்கிறேன்.
Book :25


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَنْهَى عِنِ الصَّلاَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ، وَعِنْدَ غُرُوبِهَا»


Bukhari-1628

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1628. உர்வா அறிவித்தார்.

சிலர் ஸுப்ஹுத் தொழுகைக்குப் பின்னர் வலம் வந்துவிட்டு, மார்க்கப் பிரசங்கம் செய்பவரிடம் போய் அமர்ந்துவிட்டார்கள். பிறகு சூரியன் உதயமான போது எழுந்து (தவாஃபுடைய இரண்டு ரக்அத்) தொழுதார்கள்.

ஆயிஷா(ரலி), பிரசங்கத்தில் அமர்ந்தவர்களைக் குறித்து, ‘இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, தொழுவது வெறுக்கப்படும் நேரத்தில் எழுந்து தொழுகிறார்களா?’ எனக் கண்டித்தார்கள்.
Book :25


أَنَّ نَاسًا طَافُوا بِالْبَيْتِ بَعْدَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ قَعَدُوا إِلَى المُذَكِّرِ، حَتَّى إِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامُوا يُصَلُّونَ، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «قَعَدُوا، حَتَّى إِذَا كَانَتِ السَّاعَةُ الَّتِي تُكْرَهُ فِيهَا الصَّلاَةُ، قَامُوا يُصَلُّونَ»


Bukhari-1627

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1627. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது கஅபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல் ஓடுவத)ற்காகப் புறப்பட்டார்கள். ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரியுள்ளது’ என இறைவன் கூறுகிறான்.
Book :25


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ المَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّفَا»

وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]


Next Page » « Previous Page