Author: Farook

Bukhari-1647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1647. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினார்கள்.

‘இதை அறிவித்த பிறகு, ‘நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்னும் இறைவசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதினார்கள்’ என அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
Book :25


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَعَى بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»، ثُمَّ تَلاَ: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ)


Bukhari-1645

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1645 & 1646. அம்ருப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.

‘ஒருவர் உம்ரா செய்யும்போது இறையில்லம் கஅபாவை வலம் வந்துவிட்டார்; ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யவில்லை. இந்நிலையில் அவர் தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?’ என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம்.

அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறை வலம் வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்; பிறகு ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு முறை சஃயு செய்தார்கள்; அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!’ என இப்னு உமர்(ரலி) கூறினார்.

1646. இது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள், ‘ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்யாமல் மனைவியிடம் நெருங்கவே (தாம்பத்திய உறவு கொள்ளவே) கூடாது’ என்றார்கள்.
Book :25


سَأَلْنَا ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَنْ رَجُلٍ طَافَ بِالْبَيْتِ فِي عُمْرَةٍ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ أَيَأْتِي امْرَأَتَهُ؟ فَقَالَ: «قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ المَقَامِ رَكْعَتَيْنِ، فَطَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ سَبْعًا»: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]

1646. وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ: «لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»


Bukhari-1644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1644. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், கஅபாவை முதல் வலம் வரும்போது மூன்று சுற்றுக்களில் வேகமாக ஓடுவார்கள்; நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும், ஸஃபா – மர்வாவுக்கிடையே வலம் வரும் போது ஓடைப் பகுதியில் மட்டும் ஓடுவார்கள்.

உபைதில்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (தவாஃபின் போது) ருக்னுல் யமானியை அடைந்ததும் நடந்து தானே செல்வார்கள்? என நாஃபிவு இடம் கேட்டேன். அதற்கவர் ‘ருக்னுல் யமானியில் ஜன நெருக்கடி ஏற்பட்டாலே தவிர அவர் நடந்து செல்லமாட்டார்; ஏனெனில் அவர் ருக்னுல் யமானியைத் தொட்டு முத்தமிடாமல் விடுவதில்லை’ எனக் கூறினார்.
Book :25


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا طَافَ الطَّوَافَ الأَوَّلَ خَبَّ ثَلاَثًا وَمَشَى أَرْبَعًا، وَكَانَ يَسْعَى بَطْنَ المَسِيلِ إِذَا طَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَقُلْتُ لِنَافِعٍ: أَكَانَ عَبْدُ اللَّهِ يَمْشِي إِذَا بَلَغَ الرُّكْنَ اليَمَانِيَ؟ قَالَ: «لاَ، إِلَّا أَنْ  يُزَاحَمَ عَلَى الرُّكْنِ، فَإِنَّهُ كَانَ لاَ يَدَعُهُ حَتَّى يَسْتَلِمَهُ»


Bukhari-1643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1643. உர்வா அறிவித்தார்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை’ என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸஃபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி), ‘என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த முஷல்லல் என்னும் குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.

எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வாவை வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா – மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள்.

அப்போதுதான் அல்லாஹ், ‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும்

بِئْسَ مَا قُلْتَ يَا ابْنَ أُخْتِي، إِنَّ هَذِهِ لَوْ كَانَتْ كَمَا أَوَّلْتَهَا عَلَيْهِ، كَانَتْ: لاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَتَطَوَّفَ بِهِمَا، وَلَكِنَّهَا أُنْزِلَتْ فِي الأَنْصَارِ، كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ الطَّاغِيَةِ، الَّتِي كَانُوا يَعْبُدُونَهَا عِنْدَ المُشَلَّلِ، فَكَانَ مَنْ أَهَلَّ يَتَحَرَّجُ أَنْ يَطُوفَ بِالصَّفَا وَالمَرْوَةِ، فَلَمَّا أَسْلَمُوا، سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نَتَحَرَّجُ أَنْ نَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ} [البقرة: 158]. الآيَةَ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «وَقَدْ سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الطَّوَافَ بَيْنَهُمَا، فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَتْرُكَ الطَّوَافَ بَيْنَهُمَا»، ثُمَّ أَخْبَرْتُ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ: إِنَّ هَذَا لَعِلْمٌ مَا كُنْتُ سَمِعْتُهُ، وَلَقَدْ سَمِعْتُ رِجَالًا مِنْ أَهْلِ العِلْمِ يَذْكُرُونَ: أَنَّ النَّاسَ، – إِلَّا مَنْ ذَكَرَتْ عَائِشَةُ – مِمَّنْ كَانَ يُهِلُّ بِمَنَاةَ، كَانُوا يَطُوفُونَ كُلُّهُمْ بِالصَّفَا وَالمَرْوَةِ، فَلَمَّا ذَكَرَ اللَّهُ تَعَالَى الطَّوَافَ بِالْبَيْتِ، وَلَمْ يَذْكُرِ الصَّفَا وَالمَرْوَةَ فِي القُرْآنِ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كُنَّا نَطُوفُ بِالصَّفَا وَالمَرْوَةِ وَإِنَّ اللَّهَ أَنْزَلَ الطَّوَافَ بِالْبَيْتِ فَلَمْ يَذْكُرِ الصَّفَا، فَهَلْ عَلَيْنَا مِنْ حَرَجٍ أَنْ نَطَّوَّفَ بِالصَّفَا وَالمَرْوَةِ؟ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ} [البقرة: 158] الآيَةَ قَالَ أَبُو بَكْرٍ: «فَأَسْمَعُ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الفَرِيقَيْنِ كِلَيْهِمَا، فِي الَّذِينَ كَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بِالْجَاهِلِيَّةِ بِالصَّفَا وَالمَرْوَةِ، وَالَّذِينَ يَطُوفُونَ ثُمَّ تَحَرَّجُوا أَنْ يَطُوفُوا بِهِمَا فِي الإِسْلاَمِ، مِنْ أَجْلِ أَنَّ اللَّهَ تَعَالَى أَمَرَ بِالطَّوَافِ بِالْبَيْتِ، وَلَمْ يَذْكُرِ الصَّفَا، حَتَّى ذَكَرَ ذَلِكَ، بَعْدَ مَا ذَكَرَ الطَّوَافَ بِالْبَيْتِ»


Bukhari-1642

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1642. உர்வா இப்னு ஸுபைர் அறிவித்தார்.

என்னுடைய தாயார் அவரின் சகோதரி, (தந்தை) ஸுபைர்(ரலி) மற்றும் இன்னார் இன்னாரெல்லாம் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். ருக்னுல்யமானியைத் தொட்டதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். இதை என்னுடைய தாயார் எனக்கு அறிவித்தார்.
Book :25


أَنَّهَا أَهَلَّتْ هِيَ وَأُخْتُهَا وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ، بِعُمْرَةٍ، فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا


Bukhari-1641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1641. முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

நான், உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்களிடம் (நபி(ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக்) கேட்டேன். அதற்கு உர்வா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். ஆயிஷா(ரலி) அதுபற்றி என்னிடம், கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் முதன் முதலாக உளூச் செய்தார்கள்; பிறகு கஅபாவைத் வலம்வந்தார்கள்; பிறகு உம்ராவுக்காக தனித்து வலம் வரவில்லை’.

மேலும் உர்வா, அபூ பக்ர்(ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவைத் வலம்தான் வந்தார். பிறகு உம்ராவுக்கென்று வலம் ஏதும் வரவில்லை. உமர்(ரலி) அவ்வாறேதான் செய்தார். பிறகு உஸ்மான்(ரலி) ஹஜ் செய்தார். அவரும் முதன் முதலாகக் கஅபாவையே வலம்வந்ததைப் பார்த்தேன். அவர் உம்ராவுக்காக வலம் ஏதும் வரவில்லை. பிறகு முஆவியா(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) ஆகியோரும் ஹஜ் செய்துள்ளனர்.

என்னுடைய தந்தை ஸுபைர் இப்னு அல்அவ்வாம்(ரலி) உடன் நான் ஹஜ் செய்திருக்கிறேன். அவரும் முதன் முதலாக கஅபாவைத் வலம்வந்தார். பிறகு உம்ராவுக்காக அவர் தனியாக வலம் ஏதும் வரவில்லை. முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் இவ்வாறே செய்வதை பார்த்திருக்கிறேன். பிறகு உம்ராவுக்காக அவர்கள் (தவாஃபு) செய்யவில்லை. நான் கடைசியாக இப்னு உமர்(ரலி) இவ்வாறு செய்ததைப் பார்த்தேன். அவர் அந்த ஹஜ்ஜை

قَدْ حَجَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَتْنِي عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ أَنَّهُ تَوَضَّأَ، ثُمَّ طَافَ بِالْبَيْتِ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً» ثُمَّ حَجَّ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ بِالْبَيْتِ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مِثْلُ ذَلِكَ ثُمَّ حَجَّ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَرَأَيْتُهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ بِالْبَيْتِ ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ مُعَاوِيَةُ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي الزُّبَيْرِ بْنِ العَوَّامِ فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ بِالْبَيْتِ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً ثُمَّ رَأَيْتُ المُهَاجِرِينَ وَالأَنْصَارَ يَفْعَلُونَ ذَلِكَ، ثُمَّ لَمْ تَكُنْ عُمْرَةً، ثُمَّ آخِرُ مَنْ رَأَيْتُ فَعَلَ ذَلِكَ ابْنُ عُمَرَ، ثُمَّ لَمْ يَنْقُضْهَا عُمْرَةً، وَهَذَا ابْنُ عُمَرَ عِنْدَهُمْ فَلاَ يَسْأَلُونَهُ، وَلاَ أَحَدٌ مِمَّنْ مَضَى، مَا كَانُوا يَبْدَءُونَ بِشَيْءٍ حَتَّى يَضَعُوا أَقْدَامَهُمْ مِنَ الطَّوَافِ بِالْبَيْتِ، ثُمَّ لاَ يَحِلُّونَ وَقَدْ رَأَيْتُ أُمِّي وَخَالَتِي حِينَ تَقْدَمَانِ، لاَ تَبْتَدِئَانِ بِشَيْءٍ أَوَّلَ مِنَ البَيْتِ، تَطُوفَانِ بِهِ، ثُمَّ إِنَّهُمَا لاَ تَحِلَّانِ


Bukhari-1640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1640. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஹஜ்ஜாஜ் போரிட்ட ஆண்டில், இப்னு உமர்(ரலி) ஹஜ் செய்ய நாடினார்கள். அப்போது அவர்களிடம் ‘மக்களிடையே போர் மூண்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்ய விடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்’ எனக் கூறப்பட்டது. உடனே அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது! எனவே, அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து விட்டேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்’ எனக் கூறினார்கள்.

பின்னர் புறப்பட்டு பைதா என்னுமிடத்திற்கு வெளியே வந்ததும் ‘ஹஜ்ஜின் நிலையும் உம்ராவின் நிலையும் ஒன்றே தான்; (எனவே) நான் என்னுடைய உம்ராவுடன் ஹஜ்ஜுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிந்துள்ளேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்’ எனக் கூறினார்கள். மேலும் குதை என்னுமிடத்தில் குர்பானிக்கென்று ஒரு பிராணியை வாங்கி அதைத் தம்முடன் கொண்டு சென்றார். அதற்கு மேல் வேறெதுவும் செய்யவில்லை. யவ்முன் நஹ்ர் (துல்ஹஜ் பத்தாம் நாள்) வரை பலியிடவில்லை; இஹ்ராம் அணிந்திருக்கும்போது விலக்கப்பட்டவற்றில் எதையும் செய்யவுமில்லை; தலையை மழிக்கவோ (முடியைக்) குறைக்கவோ இல்லை.

துல்ஹஜ் பத்தாம் நாளில்தான் (பலிப்

أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَرَادَ الحَجَّ عَامَ نَزَلَ الحَجَّاجُ بِابْنِ الزُّبَيْرِ، فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ، وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ، فَقَالَ: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ) إِذًا ” أَصْنَعَ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً، ثُمَّ خَرَجَ، حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ البَيْدَاءِ، قَالَ: مَا شَأْنُ الحَجِّ وَالعُمْرَةِ إِلَّا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجًّا مَعَ عُمْرَتِي، وَأَهْدَى هَدْيًا اشْتَرَاهُ بِقُدَيْدٍ، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، فَلَمْ يَنْحَرْ، وَلَمْ يَحِلَّ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ، وَلَمْ يَحْلِقْ وَلَمْ يُقَصِّرْ، حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ، فَنَحَرَ وَحَلَقَ، وَرَأَى أَنْ قَدْ قَضَى طَوَافَ الحَجِّ وَالعُمْرَةِ بِطَوَافِهِ الأَوَّلِ ” وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-1639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1639. நாஃபிவு (ரஹ்) அறிவித்தார்:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் வந்தார். இப்னு உமர் (ரலி) ஹஜ்ஜுக்குச் செல்ல வாகனம் வீட்டில் தயாராக இருந்த நிலையில், அப்துல்லாஹ் ‘நிச்சயமாக, இவ்வருடம் மக்களுக்கிடையே போர் ஏற்படும் என்று நான் அஞ்சுகிறேன்; எனவே, உங்களை மக்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள். அதனால் நீங்கள் (ஹஜ்ஜுக்குப் போகாமல்) இங்கேயே தங்கிவிட்டால் நல்லது’ எனக் கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் (உம்ராவுக்காகப்) புறப்பட்டபோது கஅபாவுக்குச் செல்ல விடாமல் குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களைத் தடுத்தனர்.

எனவே, நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டாலும் நபி (ஸல்) அவர்கள் (அன்று) செய்ததைப் போன்றே நானும் செய்வேன். உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

நான் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்தே இஹ்ராம் அணிகிறேன் என்பதற்கு உன்னையே சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு இப்னு உமர் (ரலி) மக்காவுக்குச் சென்று (ஹஜ், உம்ரா) இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தவாஃப் செய்தார்கள்.

அத்தியாயம்: 25


أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا دَخَلَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ وَظَهْرُهُ فِي الدَّارِ، فَقَالَ: إِنِّي لاَ آمَنُ أَنْ يَكُونَ العَامَ بَيْنَ النَّاسِ قِتَالٌ فَيَصُدُّوكَ عَنِ البَيْتِ فَلَوْ أَقَمْتَ، فَقَالَ: «قَدْ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ بَيْنهُ وَبَيْنَ البَيْتِ ، فَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ أَفْعَلُ كَمَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ)» ثُمَّ قَالَ: «أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ مَعَ عُمْرَتِي حَجًّا»، قَالَ: ثُمَّ قَدِمَ، فَطَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا


Bukhari-1638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1638. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து, புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘யாரிடம் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! இரண்டும் நிறைவேற்றப்பட்ட பின்பே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்!’ எனக் கூறினார்கள்.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நான் மக்காவுக்கு வந்தேன். நாங்கள் எங்கள் ஹஜ்ஜை முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் என்னை (என்னுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களுடன் தன்யீம் என்ற இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். நான் (அங்கு போய்) உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதுவே உன் (விடுபட்ட) உம்ராவுக்குப் பகரமாகும்’ எனக் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் வலம்வந்தார்கள். ஆனால், ஹஜ்ஜையும், உம்ராவை சேர்த்துச் செய்தவர்கள் ஒரே வலம்தான்வந்தார்கள்.
Book :25


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، فَأَهْلَلْنَا بِعُمْرَةٍ، ثُمَّ قَالَ: «مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهِلَّ بِالحَجِّ وَالعُمْرَةِ، ثُمَّ لاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا»، فَقَدِمْتُ مَكَّةَ وَأَنَا حَائِضٌ، فَلَمَّا قَضَيْنَا حَجَّنَا، أَرْسَلَنِي مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ فَاعْتَمَرْتُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ مَكَانَ عُمْرَتِكِ»، فَطَافَ الَّذِينَ أَهَلُّوا بِالعُمْرَةِ، ثُمَّ حَلُّوا، ثُمَّ طَافُوا طَوَافًا آخَرَ، بَعْدَ أَنْ رَجَعُوا مِنْ مِنًى، وَأَمَّا الَّذِينَ جَمَعُوا بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّمَا طَافُوا طَوَافًا وَاحِدًا


Bukhari-1637

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1637. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்று கொண்டு குடித்தார்கள்.

அன்றைய தினம் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதுதான் இருந்தார்கள் என இக்ரிமா சத்தியம் செய்து கூறுகிறார் என ஆஸிம் கூறுகிறார்.
Book :25


«سَقَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ زَمْزَمَ، فَشَرِبَ وَهُوَ قَائِمٌ»

قَالَ عَاصِمٌ: فَحَلَفَ عِكْرِمَةُ مَا كَانَ يَوْمَئِذٍ إِلَّا عَلَى بَعِيرٍ


Next Page » « Previous Page