ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
1652. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் (இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்கு) எங்கள் குமரிப் பெண்கள் செல்வதைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் ஒரு பெண் வந்து பனீகலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கி இருந்தார்.
அந்தப் பெண் ‘என் சகோதரி (உம்மு அதிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களின் தோழர் ஒருவரின் மனைவியாக இருந்தார்; அவரின் கணவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்தார்: அவற்றில் ஆறு போர்களில் என் சகோதரியும் தன் கணவருடன் பங்கெடுத்தார். ஒரு முறை என் சகோதரி உம்மு அதிய்யா(ரலி), என்னிடம் ‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளித்து வந்தோம்; நான், நபி(ஸல்) அவர்களிடம் ‘எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?’ எனக் கேட்டேன். அதற்கு, ‘அவளுடைய தோழி, தன்னுடைய (உபரியான) மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்; அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்’ என்று அறிவித்தார்.
உம்மு அதிய்யா(ரலி) (என்னிடம்) வந்தபோது, ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?’ என நாங்கள் அவரிடம் கேட்டோம்.
كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ، فَقَدِمَتِ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ، فَحَدَّثَتْ أَنَّ أُخْتَهَا كَانَتْ تَحْتَ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدْ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشْرَةَ غَزْوَةً، وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتِّ غَزَوَاتٍ، قَالَتْ: كُنَّا نُدَاوِي الكَلْمَى، وَنَقُومُ عَلَى المَرْضَى، فَسَأَلَتْ أُخْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: هَلْ عَلَى إِحْدَانَا بَأْسٌ إِنْ لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لاَ تَخْرُجَ، قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا، وَلْتَشْهَدِ الخَيْرَ وَدَعْوَةَ المُؤْمِنِينَ» فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا سَأَلْنَهَا، – أَوْ قَالَتْ: سَأَلْنَاهَا -، فَقَالَتْ: وَكَانَتْ لاَ تَذْكُرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَدًا إِلَّا قَالَتْ: بِأَبِي، فَقُلْنَا أَسَمِعْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: كَذَا وَكَذَا، قَالَتْ: نَعَمْ بِأَبِي فَقَالَ: «لِتَخْرُجِ العَوَاتِقُ ذَوَاتُ الخُدُورِ – أَوِ العَوَاتِقُ وَذَوَاتُ الخُدُورِ -، وَالحُيَّضُ فَيَشْهَدْنَ الخَيْرَ وَدَعْوَةَ المُسْلِمِينَ، وَيَعْتَزِلُ الحُيَّضُ المُصَلَّى» فَقُلْتُ: أَلْحَائِضُ؟ فَقَالَتْ: أَوَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ، وَتَشْهَدُ كَذَا وَتَشْهَدُ كَذَا
சமீப விமர்சனங்கள்