Author: Farook

Bukhari-1667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1667. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பும்போது ஒரு பள்ளத்தாக்கிற்குப் போய் தம் (மலஜலத்) தேவைகளை நிறைவேற்றி விட்டு, உளூச் செய்தார்கள்.

அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொழவா போகிறீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்’ எனக் கூறினார்கள்.
Book :25


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَةَ مَالَ إِلَى الشِّعْبِ، فَقَضَى حَاجَتَهُ فَتَوَضَّأَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَتُصَلِّي؟ فَقَالَ: «الصَّلاَةُ أَمَامَكَ»


Bukhari-1666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1666. உர்வா அறிவித்தார்.

நான் உஸாமா(ரலி)வுடன் அமர்ந்திருக்கும்போது, உஸாமாவிடம், ‘கடைசி ஹஜ்ஜில் அரஃபாவிலிருந்து திரும்பிய நபி(ஸல்) அவர்களின் நடை எவ்வாறிருந்தது?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர், ‘நபி(ஸல்) அவர்கள் சாதாரணமாக நடப்பார்கள். (மக்கள் நெருக்கடியில்லாத) விசாலமான இடம் வந்ததும் விரைந்து நடப்பார்கள்’ எனக் கூறினார்.
Book :25


سُئِلَ أُسَامَةُ وَأَنَا جَالِسٌ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ فِي حَجَّةِ الوَدَاعِ حِينَ دَفَعَ؟ قَالَ: «كَانَ يَسِيرُ العَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ»

قَالَ هِشَامٌ: وَالنَّصُّ: فَوْقَ العَنَقِ،


Bukhari-1665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1665. உர்வா அறிவித்தார்.

மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்க வில்லையோ அவர் நிர்வாணமாக வலம்வருவார்.

மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள்.

‘மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்’ என்ற (திருக்குர்ஆன் 02:199) வசனம் குரைஷிகள் பற்றி இறங்கியதுதான்.

அவர்கள் முஸ்தலிஃபா என்னும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களாயிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு திருப்பி விடப்பட்டனர். என ஆயிஷா(ரலி) கூறினார் என என்னுடைய தந்தை (ஸுபைர்) எனக்கு அறிவித்தார்.
Book :25


«كَانَ النَّاسُ يَطُوفُونَ فِي الجَاهِلِيَّةِ عُرَاةً إِلَّا الحُمْسَ، وَالحُمْسُ قُرَيْشٌ وَمَا وَلَدَتْ، وَكَانَتِ الحُمْسُ يَحْتَسِبُونَ عَلَى النَّاسِ، يُعْطِي الرَّجُلُ الرَّجُلَ الثِّيَابَ يَطُوفُ فِيهَا، وَتُعْطِي المَرْأَةُ المَرْأَةَ الثِّيَابَ تَطُوفُ فِيهَا، فَمَنْ لَمْ يُعْطِهِ الحُمْسُ طَافَ بِالْبَيْتِ عُرْيَانًا، وَكَانَ يُفِيضُ جَمَاعَةُ النَّاسِ مِنْ عَرَفَاتٍ، وَيُفِيضُ الحُمْسُ مِنْ جَمْعٍ»، قَالَ: وَأَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ” أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الحُمْسِ: {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ} [البقرة: 199]، قَالَ: كَانُوا يُفِيضُونَ مِنْ جَمْعٍ، فَدُفِعُوا إِلَى عَرَفَاتٍ


Bukhari-1664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1664. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) அரஃபா தினத்தில் என்னுடைய ஒட்டகம் காணாமல் போனது. அதைத் தேடி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்றிருந்ததைப் பார்த்தேன்.

அப்போது நான், இவர் (நபி(ஸல்)) குரைஷிக் குலத்தவராயிற்றே!’ இவருக்கு இங்கு என்ன வேலை? என என்னுள் கூறிக் கொண்டேன். (ஏனெனில் மக்காக் குறைஷிகள் ஹரம் எல்லைக்கு வெளியே ஹஜ்ஜின் எந்தக் கிரியைகளையும் செய்வதில்லை).
Book :25


أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا بِعَرَفَةَ، فَقُلْتُ: «هَذَا وَاللَّهِ مِنَ الحُمْسِ فَمَا شَأْنُهُ هَا هُنَا»


Bukhari-1663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1663. ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

அப்துல் மலிக் இப்னு மர்வான், ஹஜ்ஜின்போது இப்னு உமரைப் பின்பற்றுமாறு ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர்(ரலி) வந்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அவர் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று ‘எங்கே அவர்?’ என்று சப்தமிட்டார். உடனே ஹஜ்ஜாஜ் வெளிவந்தார். இப்னு உமர்(ரலி), ‘நீர் இங்கிருந்து புறப்படுவீராக!’ என்றார்.

ஹஜ்ஜாஜ், ‘இப்போதேவா? எனக் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார். ஹஜ்ஜாஜ் ‘நான் இதோ குளித்துவிட்டுப் புறப்படுகிறேன்; அவகாசம் கொடுங்கள்’ எனக் கூறினார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜாஜ் வரும்வரை, (தம் வாகனத்திலிருந்து) இறங்கிக் காத்திருந்தார். ஹஜ்ஜாஜ் எனக்கும் என்னுடைய தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான், ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றேன். இப்னு உமர்(ரலி) ‘(ஸாலிம்) உண்மையே கூறினார்’ என்றார்.
Book :25


أَنَّ عَبْدَ المَلِكِ بْنَ مَرْوَانَ، كَتَبَ إِلَى الحَجَّاجِ أَنْ يَأْتَمَّ بِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي الحَجِّ، فَلَمَّا كَانَ يَوْمُ عَرَفَةَ، جَاءَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَأَنَا مَعَهُ حِينَ زَاغَتِ الشَّمْسُ أَوْ زَالَتْ، فَصَاحَ عِنْدَ فُسْطَاطِهِ أَيْنَ هَذَا؟ فَخَرَجَ إِلَيْهِ فَقَالَ ابْنُ عُمَرَ: «الرَّوَاحَ» فَقَالَ: الآنَ، قَالَ: «نَعَمْ»، قَالَ: أَنْظِرْنِي أُفِيضُ عَلَيَّ مَاءً، فَنَزَلَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَتَّى خَرَجَ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي فَقُلْتُ: إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ السُّنَّةَ اليَوْمَ فَاقْصُرِ الخُطْبَةَ وَعَجِّلِ الوُقُوفَ فَقَالَ ابْنُ عُمَرَ «صَدَقَ»


Bukhari-1662

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

1662. இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னுஸ் ஸுபைர் (ரலி) உடன் தாம் போர் தொடுத்த ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்த ஹஜ்ஜாஜ் என்பவர், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘அரஃபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்பட்டீர்கள்?’ எனக் கேட்டதற்கு ஸாலிம் அவர்கள், ‘நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் அரஃபா நாளில் நடுப்பகலில் தொழுது விடுவீராக! என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), ‘ஸாலிம் கூறியது உண்மைதான்.

(நபித்தோழர்கள் அரஃபாவில்) லுஹரையும் அஸரையும் நபி வழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்’ என்றார்.

நான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா? என ஸாலிமிடம் கேட்டேன். அதற்கவர், ‘இந்த விஷயத்தில் நபிவழியைத் தவிர வேறு யாருடைய வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் எனக் கேட்டார்.

அத்தியாயம்: 25


أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ الحَجَّاجَ بْنَ يُوسُفَ، عَامَ نَزَلَ بِابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، سَأَلَ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَيْفَ تَصْنَعُ فِي المَوْقِفِ يَوْمَ عَرَفَةَ؟ فَقَالَ سَالِمٌ: «إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَهَجِّرْ بِالصَّلاَةِ يَوْمَ عَرَفَةَ»، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: «صَدَقَ، إِنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ الظُّهْرِ وَالعَصْرِ فِي السُّنَّةِ»، فَقُلْتُ لِسَالِمٍ: أَفَعَلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ سَالِمٌ: «وَهَلْ تَتَّبِعُونَ فِي ذَلِكَ إِلَّا سُنَّتَهُ»


Bukhari-1661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1661. உம்முல் ஃபழ்ல் பின்த் அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். சிலர், ‘நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் இன்னும் சிலர், ‘இல்லை’ என்றும் கூறிக் கொண்டிருந்தனர்.

எனவே நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பாலைக் கொடுத்தனுப்பினேன்; அவர்கள் தங்களின் ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டே அதைக் குடித்தார்கள்.
Book :25


أَنَّ نَاسًا اخْتَلَفُوا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُهُمْ: هُوَ صَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: لَيْسَ بِصَائِمٍ، «فَأَرْسَلْتُ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهُوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ، فَشَرِبَهُ»


Bukhari-1660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


كَتَبَ عَبْدُ المَلِكِ إِلَى الحَجَّاجِ: أَنْ لاَ يُخَالِفَ ابْنَ عُمَرَ فِي الحَجِّ، فَجَاءَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَأَنَا مَعَهُ يَوْمَ عَرَفَةَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَاحَ عِنْدَ سُرَادِقِ الحَجَّاجِ، فَخَرَجَ وَعَلَيْهِ مِلْحَفَةٌ مُعَصْفَرَةٌ فَقَالَ: مَا لَكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ: «الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ»، قَالَ: هَذِهِ السَّاعَةَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَنْظِرْنِي حَتَّى أُفِيضَ عَلَى رَأْسِي ثُمَّ أَخْرُجُ، فَنَزَلَ حَتَّى خَرَجَ الحَجَّاجُ فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي فَقُلْتُ: إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَاقْصُرِ الخُطْبَةَ وَعَجِّلِ الوُقُوفَ، فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَبْدِ اللَّهِ فَلَمَّا رَأَى ذَلِكَ عَبْدُ اللَّهِ قَالَ: «صَدَقَ»


Bukhari-1659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1659. மாலிக் அறிவித்தார்.

முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸகஃபீ, அனஸ் இப்னு மாலிக்(ரலி) இருவரும் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் போகும்போது முஹம்மத் இப்னு அபீ பக்ர், அனஸ்(ரலி) அவர்களிடம் ‘நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய தினம் என்ன செய்தீர்கள்?’ எனக் கேட்டார்.

‘அன்று எங்களில் சிலர் தல்பியாக் கூறிக் கொண்டிருந்தனர்; நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுக்கவில்லை. இன்னும் சிலர் தக்பீர் கூறினார்கள்; அதையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை’ என அனஸ்(ரலி) கூறினார்.
Book :25


سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا اليَوْمِ، مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَ يُهِلُّ مِنَّا المُهِلُّ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا المُكَبِّرُ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ»


Bukhari-1658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1658. உம்முல் ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன்; அதையவர்கள் குடித்தார்கள்.
Book :25


شَكَّ النَّاسُ يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَبَعَثْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ فَشَرِبَهُ»


Next Page » « Previous Page