Author: Farook

Bukhari-1678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1678. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பி வைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன்.
Book :25


«أَنَا مِمَّنْ قَدَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ المُزْدَلِفَةِ فِي ضَعَفَةِ أَهْلِهِ»


Bukhari-1676

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1676. ஸாலிம் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (மினாவிற்கு) அனுப்பி விடுவார். மற்றவர்கள் முஸ்தலிஃபாவில் மஷ்அருல் ஹராம் என்னுமிடத்தில் இரவு தங்குவார்கள். அங்கு விரும்பியவாறு அல்லாஹ்வை நினைவு கூர்வர். பிறகு இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்னமேயே இவர்கள் (மினாவுக்குத்) திரும்பி விடுவார்கள்.

அவர்களில் சிலர் ஃபஜ்ருத் தொழுகைக்கு மினாவை அடைவர். இன்னும் சிலர் அதற்குப் பின்னால் வந்தடைவர். அவர்கள் அங்கு வந்ததும் ஜம்ராவில் கல்லெறிவர். பலவீனர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) கூறுவார்.
Book :25


وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُقَدِّمُ ضَعَفَةَ أَهْلِهِ، فَيَقِفُونَ عِنْدَ المَشْعَرِ الحَرَامِ بِالْمُزْدَلِفَةِ بِلَيْلٍ فَيَذْكُرُونَ اللَّهَ مَا بَدَا لَهُمْ، ثُمَّ يَرْجِعُونَ قَبْلَ أَنْ يَقِفَ الإِمَامُ وَقَبْلَ أَنْ يَدْفَعَ، فَمِنْهُمْ مَنْ يَقْدَمُ مِنًى لِصَلاَةِ الفَجْرِ، وَمِنْهُمْ مَنْ يَقْدَمُ بَعْدَ ذَلِكَ، فَإِذَا قَدِمُوا رَمَوْا الجَمْرَةَ وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: «أَرْخَصَ فِي أُولَئِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-1675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1675. அப்துர்ரஹ்மான் இப்னு யஸித் அறிவித்தார்.

‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஹஜ் செய்தார்கள். நாங்கள் இஷாவின் பாங்கு கூறப்படும் நேரத்திலோ, அதற்குச் சற்று முன்னரோ முஸ்தலிஃபாவிற்கு வந்தோம்.

இப்னு மஸ்வூத்(ரலி), ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட, அவர் பாங்கும் இகாமத்தும் கூறினார். பின்னர் இப்னு மஸ்வூத்(ரலி) மக்ரிப் தொழுதுவிட்டு அதன்பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

பிறகு இரவு உணவைக் கொண்டு வரச் செய்து உண்டார்கள். பிறகு ஒருவரை பாங்கும் இகாமத்தும் கூறுமாறு கட்டளையிட்டார்கள். பின், இஷாவை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். விடிந்ததும், ‘நபி(ஸல்) அவர்கள் இந்த தினத்தில் இந்த இடத்தில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் இந்த நேரத்தில் தொழுததில்லை’ என்று கூறினார்கள்.

மேலும், ‘இவ்விரு தொழுகைகளும் (இங்கு, இந்த தினத்தில் மட்டும்) அவற்றிற்குரிய நேரங்களைவிட்டும் மாற்றப்பட்டுள்ளன. மக்ரிபுத் தொழுகை, மக்கள் முஸ்தலிஃபாவுக்கு வந்த பின்பு என்றும், ஃபஜ்ருத் தொழுகை, ஃபஜ்ரு உதயமாகும் வேளையில் என்றும் (ஹஜ்ஜின்போது முஸ்தலிஃபாவில் மட்டும்) மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
Book :25


حَجَّ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَأَتَيْنَا المُزْدَلِفَةَ حِينَ الأَذَانِ بِالعَتَمَةِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ، فَأَمَرَ رَجُلًا  فَأَذَّنَ وَأَقَامَ، ثُمَّ صَلَّى المَغْرِبَ، وَصَلَّى بَعْدَهَا رَكْعَتَيْنِ، ثُمَّ دَعَا بِعَشَائِهِ فَتَعَشَّى، ثُمَّ أَمَرَ أُرَى فَأَذَّنَ وَأَقَامَ – قَالَ عَمْرٌو: لاَ أَعْلَمُ الشَّكَّ إِلَّا مِنْ زُهَيْرٍ -، ثُمَّ صَلَّى العِشَاءَ رَكْعَتَيْنِ، فَلَمَّا طَلَعَ الفَجْرُ قَالَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يُصَلِّي هَذِهِ السَّاعَةَ إِلَّا هَذِهِ الصَّلاَةَ، فِي هَذَا المَكَانِ مِنْ هَذَا اليَوْمِ»

قَالَ عَبْدُ اللَّهِ: ” هُمَا صَلاَتَانِ تُحَوَّلاَنِ عَنْ وَقْتِهِمَا: صَلاَةُ المَغْرِبِ بَعْدَ مَا يَأْتِي النَّاسُ المُزْدَلِفَةَ، وَالفَجْرُ حِينَ يَبْزُغُ الفَجْرُ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ


Bukhari-1674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1674. அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி)

அத்தியாயம்: 25


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَمَعَ فِي حَجَّةِ الوَدَاعِ المَغْرِبَ وَالعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ»


Bukhari-1673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96

இரு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர் கடமையல்லாத (கூடுதல்) தொழுகைகளைத் தொழாதிருத்தல்

1673. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத் சொல்லப்பட்டது. இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக்கும் பின்போ கடமையல்லாத (கூடுதல்) தொழுகை எதையும் அவர்கள் தொழவில்லை.

அத்தியாயம் : 25


«جَمَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ بِجَمْعٍ كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ، وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا، وَلاَ عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا»


Bukhari-1672

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1672. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பினார்கள். வழியிலுள்ள பள்ளத்தாக்கில் இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பிறகு சுருக்கமாக உளூச் செய்தார்கள்.

நான் அவர்களிடம், ‘தொழப் போகிறீர்களா?’ என்றேன். அதற்கு அவர்கள் ‘தொழுகை உனக்கு முன்னால் (முஸ்தலிஃபாவில் தொழ வேண்டியதாகவே) இருக்கிறது!’ என்றார்கள்.

பிறகு முஸ்தலிஃபாவிற்கு வந்து முழுமையாக உளூச் செய்தார்கள். இகாமத் சொல்லப்பட்டதும் மக்ரிபு தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே (வேறு எதுவும்) தொழவில்லை.
Book :25


دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ، فَنَزَلَ الشِّعْبَ، فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الوُضُوءَ، فَقُلْتُ لَهُ: الصَّلاَةُ؟، فَقَالَ: «الصَّلاَةُ أَمَامَكَ»، فَجَاءَ المُزْدَلِفَةَ، فَتَوَضَّأَ فَأَسْبَغَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى المَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا


Bukhari-1671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1671. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள்.

உடனே தம் சாட்டையால் சைகை செய்து, ‘மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ விரட்டுவதிலோ இல்லை’ எனக் கூறினார்கள்.
Book :25


أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَرَفَةَ، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا، وَضَرْبًا وَصَوْتًا لِلْإِبِلِ، فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ، وَقَالَ: «أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ فَإِنَّ البِرَّ لَيْسَ بِالإِيضَاعِ»


Bukhari-1670

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1670. ஃபள்ல்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வை அடையும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
Book :25


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الجَمْرَةَ


Bukhari-1669

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1669. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன்.

சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்’ எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் நாளில் ஃபழ்ல் இப்னு அப்பாஸைத் தம் வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றினார்கள்.
Book :25


رَدِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَاتٍ، فَلَمَّا بَلَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشِّعْبَ الأَيْسَرَ، الَّذِي دُونَ المُزْدَلِفَةِ، أَنَاخَ، فَبَالَ ثُمَّ جَاءَ، فَصَبَبْتُ [ص:164] عَلَيْهِ الوَضُوءَ، فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا، فَقُلْتُ: الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ أَمَامَكَ»، فَرَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَتَى المُزْدَلِفَةَ فَصَلَّى، ثُمَّ رَدِفَ الفَضْلُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ جَمْعٍ


Bukhari-1668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1668. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மஃரிபையும் இஷாவையும் சேர்த்து முஸ்தலிஃபாவில் தொழுபவராக இருந்தார். ஆயினும் அவர், வழியில் நபி(ஸல்) அவர்கள் தேவையை நிறைவேற்ற ஒதுங்கிய பள்ளத்தாக்குக்குச் சென்று தம் தேவையை நிறைவேற்றி, உளூவும் செய்து முஸ்தலிஃபாவுக்கு வந்த பிறகுதான் தொழுவார்.
Book :25


كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ بِجَمْعٍ، غَيْرَ أَنَّهُ يَمُرُّ بِالشِّعْبِ الَّذِي أَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَدْخُلُ، فَيَنْتَفِضُ وَيَتَوَضَّأُ، وَلاَ يُصَلِّي حَتَّى يُصَلِّيَ بِجَمْعٍ»


Next Page » « Previous Page