Author: Farook

Bukhari-1574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 இரவிலோ அல்லது பகலிலோ மக்காவில் நுழைவது.

நபி (ஸல்) அவர்கள் தூத்துவாவில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். 

1574. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃதூத்துவா எனுமிடத்தில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

இப்னு உமரும்(ரலி) அவ்வாறே செய்தார் என நாபிவு கூறுகிறார்.
Book : 25


«بَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي طُوًى حَتَّى أَصْبَحَ، ثُمَّ دَخَلَ مَكَّةَ» وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ


Bukhari-1573

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 மக்காவில் நுழையும் போது குளிப்பது. 

1573. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) ஹரம் எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார். பிறகு ஃதூத்துவா எனுமிடத்தில் தங்கி ஸுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார். ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்.
Book : 25


كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «إِذَا دَخَلَ أَدْنَى الحَرَمِ أَمْسَكَ عَنِ التَّلْبِيَةِ، ثُمَّ يَبِيتُ بِذِي طِوًى، ثُمَّ يُصَلِّي بِهِ الصُّبْحَ، وَيَغْتَسِلُ»، وَيُحَدِّثُ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ


Bukhari-1572

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் எனும் (2:196ஆவது) இறைவசனம். 

1572. இக்ரிமா அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் தமத்துஉ பற்றிக் கேட்கப்பட்டது. ‘ஹஜ்ஜத்துல் வதாவில் முஹாஜிரீன்களும் அன்ஸாரிகளும் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் அணிந்தார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் அணிந்தோம். ஆனால், நாங்கள் மக்கா நகருக்கு வந்தபோது, நபி(ஸல்) ‘குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களைத் தவிர, மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுங்கள்!’ என்றார்கள்.

நாங்கள் கஅபாவைத் வலம்வந்து ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி, மனைவியருடன் கூடி (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘தம்மோடு பிராணி கொண்டு வந்தவர்கள் பிராணி தனக்குரிய இடத்தில் சேரும் வரை… குர்பானி கொடுக்கும் வரை.. இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது’ எனக் கட்டளையிட்டார்கள். எட்டாம் நாள் மாலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியக் கட்டளையிட்டார்கள். நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற வழிபாடுகளை முடித்துவிட்டு வலம்வந்தோம். ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினோம். எங்களின் ஹஜ் நிறைவு பெற்றுவிட்டது.

மேலும்,

سُئِلَ عَنْ مُتْعَةِ الحَجِّ، فَقَالَ: أَهَلَّ المُهَاجِرُونَ، وَالأَنْصَارُ، وَأَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، وَأَهْلَلْنَا، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوا إِهْلاَلَكُمْ بِالحَجِّ عُمْرَةً، إِلَّا مَنْ قَلَّدَ الهَدْيَ» فَطُفْنَا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَأَتَيْنَا النِّسَاءَ، وَلَبِسْنَا الثِّيَابَ، وَقَالَ: «مَنْ قَلَّدَ الهَدْيَ، فَإِنَّهُ لاَ يَحِلُّ لَهُ حَتَّى يَبْلُغَ الهَدْيُ مَحِلَّهُ» ثُمَّ أَمَرَنَا عَشِيَّةَ التَّرْوِيَةِ أَنْ نُهِلَّ بِالحَجِّ، فَإِذَا فَرَغْنَا مِنَ المَنَاسِكِ، جِئْنَا فَطُفْنَا بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، فَقَدْ تَمَّ حَجُّنَا وَعَلَيْنَا الهَدْيُ، كَمَا قَالَ اللَّهُ تَعَالَى: {فَمَا اسْتَيْسَرَ مِنَ الهَدْيِ، فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلاَثَةِ أَيَّامٍ فِي الحَجِّ، وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ} [البقرة: 196]: إِلَى أَمْصَارِكُمْ، الشَّاةُ تَجْزِي، فَجَمَعُوا نُسُكَيْنِ فِي عَامٍ، بَيْنَ الحَجِّ وَالعُمْرَةِ، فَإِنَّ اللَّهَ تَعَالَى أَنْزَلَهُ فِي كِتَابِهِ، وَسَنَّهُ نَبِيُّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَاحَهُ لِلنَّاسِ غَيْرَ أَهْلِ مَكَّةَ قَالَ اللَّهُ: {ذَلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي المَسْجِدِ الحَرَامِ} [البقرة: 196] وَأَشْهُرُ الحَجِّ الَّتِي ذَكَرَ اللَّهُ تَعَالَى فِي كِتَابهِ: شَوَّالٌ وَذُو القَعْدَةِ وَذُو الحَجَّةِ، فَمَنْ تَمَتَّعَ فِي هَذِهِ الأَشْهُرِ، فَعَلَيْهِ دَمٌ أَوْ صَوْمٌ

 وَالرَّفَثُ: الجِمَاعُ، وَالفُسُوقُ: المَعَاصِي، وَالجِدَالُ: المِرَاءُ


Bukhari-1571

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தல். 

1571. இம்ரான்(ரலி) அறிவித்தார்.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தோம். குர்ஆனின் மூலமே இச்சட்டம் இறங்கியது; எனினும் சிலர் ‘தமத்துஉ கூடாது’ எனத் தம் சுய அறிவால் தாம் நாடியதை எல்லாம் கூறுகின்றனர்.’
Book : 25


«تَمَتَّعْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ القُرْآنُ»، قَالَ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ


Bukhari-1570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 35

ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறுவதும் அதில் ஹஜ் என்று வாயால் கூறுவதும். 

1570. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்றோம். அப்போது “லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்” எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்தபோது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்.

அத்தியாயம்: 25


قَدِمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَقُولُ: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ بِالحَجِّ، «فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلْنَاهَا عُمْرَةً»


Bukhari-1569

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1569. ஸயீத் இப்னு முஸய்யப் அறிவித்தார்.

அலீ(ரலி), உஸ்மான்(ரலி) இருவரும் உஸ்ஃபான் எனுமிடத்தில் தமத்துஉவின் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அலீ(ரலி) ‘நபி(ஸல்) அவர்கள் செய்த செயலிலிருந்து எங்களை நீர் தடுக்க நாடுகிறீர்’ என்று உஸ்மான்(ரலி) அவர்களிடம் கூறி, ஹஜ், உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்.
Book :25


اخْتَلَفَ عَلِيٌّ، وَعُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُمَا بِعُسْفَانَ، فِي المُتْعَةِ، فَقَالَ عَلِيٌّ: «مَا تُرِيدُ إِلَّا أَنْ تَنْهَى عَنْ أَمْرٍ فَعَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَلَمَّا رَأَى ذَلِكَ عَلِيٌّ أَهَلَّ بِهِمَا جَمِيعًا


Bukhari-1568

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1568. அபூ ஷிஹாப் அறிவித்தார்.

நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ)… செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாள்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம் வந்து ‘இப்படித் தமத்துஉ – செய்தால் உம்முடைய ஹஜ் மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும்; (குறைந்த நன்மைகளே கிடைக்கும்’) என்றனர்.

நான் அதா இடம் சென்று இதைப் பற்றிக் கேட்டேன். அதா கூறினார்; ‘நபி(ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரிரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி ‘நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஒடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.

அதற்குத் தோழர்கள் ‘நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு

قَدِمْتُ مُتَمَتِّعًا مَكَّةَ بِعُمْرَةٍ، فَدَخَلْنَا قَبْلَ التَّرْوِيَةِ بِثَلاَثَةِ أَيَّامٍ، فَقَالَ لِي أُنَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ: تَصِيرُ الآنَ حَجَّتُكَ مَكِّيَّةً، فَدَخَلْتُ عَلَى عَطَاءٍ أَسْتَفْتِيهِ، فَقَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ حَجَّ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ سَاقَ البُدْنَ مَعَهُ، وَقَدْ أَهَلُّوا بِالحَجِّ مُفْرَدًا، فَقَالَ لَهُمْ: «أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ بِطَوَافِ البَيْتِ، وَبَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، وَقَصِّرُوا، ثُمَّ أَقِيمُوا حَلاَلًا، حَتَّى إِذَا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ فَأَهِلُّوا بِالحَجِّ، وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا مُتْعَةً»،

فَقَالُوا: كَيْفَ نَجْعَلُهَا مُتْعَةً، وَقَدْ سَمَّيْنَا الحَجَّ؟ فَقَالَ: «افْعَلُوا مَا أَمَرْتُكُمْ، فَلَوْلاَ أَنِّي سُقْتُ الهَدْيَ لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ، وَلَكِنْ لاَ يَحِلُّ مِنِّي حَرَامٌ حَتَّى يَبْلُغَ الهَدْيُ مَحِلَّهُ» فَفَعَلُوا قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «أَبُو شِهَابٍ لَيْسَ لَهُ مُسْنَدٌ إِلَّا هَذَا»


Bukhari-1567

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1567. நஸ்ரு இப்னு இம்ரான் அறிவித்தார்.

நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே, இதை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார். பிறகு ஒரு நாள் ஒருவர் என் கனவில் தோன்றி, ‘ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது’ எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது (‘தமத்துஉவே) நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறி, ‘நீ என்னுடன் தங்கிக் கொள். என்னுடைய செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்’ எனக் கூறினார்.

இப்னு அப்பாஸ்(ரலி) தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் இப்னு இம்ரானிடம் கேட்டேன். ‘நான் கண்ட கனவே காரணம்’ என அவர் கூறினார் என்று ஷுஉபா கூறுகிறார்.
Book :25


«تَمَتَّعْتُ»، فَنَهَانِي نَاسٌ، فَسَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَأَمَرَنِي، فَرَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّ رَجُلًا يَقُولُ لِي: حَجٌّ مَبْرُورٌ، وَعُمْرَةٌ مُتَقَبَّلَةٌ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: «سُنَّةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقَالَ لِي: أَقِمْ عِنْدِي، فَأَجْعَلَ لَكَ سَهْمًا مِنْ مَالِي، قَالَ شُعْبَةُ: فَقُلْتُ: لِمَ؟ فَقَالَ: لِلرُّؤْيَا الَّتِي رَأَيْتُ


Bukhari-1566

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1566. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால், நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபட வில்லையே! என்ன காரணம்?’ என நான் நபி(ஸல்) அவர்களைக் கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்னுடைய முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன்; என்னுடைய குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்கவிட்டு விட்டேன். எனவே, குர்பானி கொடுக்கும் வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாது’ என்றார்கள்.
Book :25


يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا بِعُمْرَةٍ، وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ»


Bukhari-1565

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1565. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டு வராததால்.. உம்ராவை முடித்து) இஹராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book :25


«قَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُ بِالحِلِّ»


Next Page » « Previous Page