Author: Farook

Bukhari-1584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1584. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, ‘இது கஅபாவில் சேர்ந்ததா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்!’ என்றார்கள். பிறகு நான் ‘எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?’ எனக் கேட்டேன். அதற்கவர்கள் ‘உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!’ என்று பதிலளித்தார்கள்.

நான் ‘கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?’ எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள்.

‘உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்’ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book :25


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي البَيْتِ؟ قَالَ: «إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ» قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا؟ قَالَ: «فَعَلَ ذَلِكَ قَوْمُكِ، لِيُدْخِلُوا مَنْ شَاءُوا وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ، فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ، أَنْ أُدْخِلَ الجَدْرَ فِي البَيْتِ، وَأَنْ أُلْصِقَ بَابَهُ بِالأَرْضِ»


Bukhari-1583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1583. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! நிச்சயமாக உன்னுடைய கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும்போது இப்ராஹீம்(அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா?’ எனக் கேட்டேன். ‘உன்னுடைய கூட்டத்தினர் இப்போது தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இல்லையெனில் அவ்வாறே நான் செய்திருப்பேன்’ என்றார்கள்.

‘ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதிக்கு எதிரே உள்ள இரண்டு மூலைகளில் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறை இல்லமான ‘கஅபா’வானது இப்ராஹீம்(அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (கொஞ்சம்விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதேயாகும் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book :25


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: «أَلَمْ تَرَيْ أَنَّ قَوْمَكِ لَمَّا بَنَوْا الكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ؟ قَالَ: «لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالكُفْرِ لَفَعَلْتُ» فَقَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَئِنْ كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أُرَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الحِجْرَ، إِلَّا أَنَّ البَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ


Bukhari-1582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 மக்காவின் சிறப்பும் கஅபாவின் நிர்மாணமும்.

அல்லாஹ் கூறுகிறான்:

(கஅபா என்னும்) இந்த வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை -மகாமு இப்ராஹீமை’- தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்! (என்றும் நாம் சொன்னோம்). மேலும் என் வீட்டைச் சுற்றி வருபவர்கள்,தங்கியிருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், சஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும் என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூருங்கள்:) இப்ராஹீம் அல்லாஹ்வே! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்குவாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனி வர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக!’ என்று கூறினார்;

(ஆம்;)யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகமனுபவிக்கச் செய்வேன்; பின்னர் அவரை நரக நெருப்பின் வேதனையின்பால் இழுத்துச் செல்வேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது,

 لَمَّا بُنِيَتِ الكَعْبَةُ ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الحِجَارَةَ، فَقَالَ العَبَّاسُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ، فَخَرَّ إِلَى الأَرْضِ، وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «أَرِنِي إِزَارِي» فَشَدَّهُ عَلَيْهِ


Bukhari-1581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1581. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

‘என் தந்தை உர்வா(ரலி) ‘கதாஉ’, ‘குதா’ இரண்டின் வழியாகவும் (மக்காவினுள்) நுழைபவராக இருந்தார். எனினும் அதிகமாக ‘கதாஉ’ வழியாகவே நுழைவார்.ஏனெனில் அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது’ என ஹிஷாம் கூறுகிறார்.

‘கதாஉ’ , ‘குதா’ என்பன இரண்டு இடங்கள் என்று அபூ அப்தில்லாஹ் புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Book :25


«دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ» وَكَانَ عُرْوَةُ: «يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا، وَكَانَ أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ أَقْرَبِهِمَا إِلَى مَنْزِلِهِ»


Bukhari-1580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1580. உர்வா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள்.

‘என் தந்தை உர்வா(ரலி) அதிகமாக ‘கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார். ஏனெனில், அவ்விரண்டில் ‘கதாஅ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது’ என ஹிஷாம் கூறுகிறார்.
Book :25


«دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ مِنْ أَعْلَى مَكَّةَ» وَكَانَ عُرْوَةُ: «أَكْثَرَ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ»


Bukhari-1579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1579. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘கதாஉ’ (எனும் கணவாய் வழியாக) நுழைந்தார்கள்.

‘என் தந்தை உர்வா(ரலி) ‘கதாஉ’ ‘குதா’ இரண்டின் வழியாகவும் நுழைபவராக இருந்தார். எனினும் அதிகமாக ‘கதாஉ’ வழியாகவே நுழைவார். ஏனெனில் அவ்விரண்டில் ‘கதாஉ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது’ என ஹிஷாம் கூறுகிறார்.
Book :25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ أَعْلَى مَكَّةَ» قَالَ هِشَامٌ: وَكَانَ عُرْوَةُ: «يَدْخُلُ عَلَى كِلْتَيْهِمَا مِنْ كَدَاءٍ، وَكُدًا، وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَتْ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ»


Bukhari-1578

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1578. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மக்கா வெற்றியின்போது நபி(ஸல்) அவர்கள் ‘கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள ‘குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.
Book :25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَامَ الفَتْحِ مِنْ كَدَاءٍ، وَخَرَجَ مِنْ كُدًا مِنْ أَعْلَى مَكَّةَ»


Bukhari-1577

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1577. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தால் அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.
Book :25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا جَاءَ إِلَى مَكَّةَ دَخَلَ مِنْ أَعْلاَهَا، وَخَرَجَ مِنْ أَسْفَلِهَا»


Bukhari-1576

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41 மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது? 

1576. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.
Book : 25


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ مِنْ كَدَاءٍ مِنَ الثَّنِيَّةِ العُلْيَا الَّتِي بِالْبَطْحَاءِ، وَخَرَجَ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «كَانَ يُقَالُ هُوَ مُسَدَّدٌ كَاسْمِهِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ، يَقُولُ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ: «لَوْ أَنَّ مُسَدَّدًا أَتَيْتُهُ فِي بَيْتِهِ، فَحَدَّثْتُهُ لاَسْتَحَقَّ ذَلِكَ، وَمَا أُبَالِي كُتُبِي كَانَتْ عِنْدِي أَوْ عِنْدَ مُسَدَّدٍ»


Bukhari-1575

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 மக்காவினுள் எவ்வழியே நுழைவது? 

1575. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.
Book : 25


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ العُلْيَا، وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى»


Next Page » « Previous Page