ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 55
மழைநீர், வாய்க்கால் நீர் ஆகியவற்றால் நீர் பாய்ச்சப்படும் நிலங்களின் விளைச்சலுக்கு, பத்தில் ஒரு பாகம் ஸகாத் உண்டு என்பதும், தேனுக்கு ஸகாத் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்ற உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் கருத்தும்.
1483. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் நீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பாகம் ஸகாத் கொடுக்க வேண்டும். ஒட்டகம் (போன்றவற்றின்) மூலம் நீர் இறைத்து விளைவிக்கப்பட்டவற்றில் பத்தில் பாதி பாகம் (அதாவது இருபதில் ஒரு பாகம்) ஸகாத் கொடுக்க வேண்டும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்:
விளைபொருட்களில் தரப்பட வேண்டிய ஸகாத்தின் அளவை மட்டும் கூறிவிட்டு எந்த அளவுள்ள விளை பொருட்களுக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டும் என்று இப்னு உமர் (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்தாமல் போய்விட்டது. எந்த அளவுள்ள விளை பொருட்களில் ஸகாத் கடமையாகும் என்று தெளிவுபடுத்திக் கூறுகிற அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிற (புகாரி-1484) இல் வரும் ஹதீஸ், இந்த இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸிற்கு விளக்கமாக அமைந்துள்ளது.
ஒருவர் கூறுவதை விட அதிகமான விபரத்தை நம்பகமான மற்றொருவர் கூறினால் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும்.
«فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا العُشْرُ، وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ العُشْرِ»
சமீப விமர்சனங்கள்