Author: Farook

Bukhari-1501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 68

ஸகாத்துடைய ஒட்டகத்தையும் அதன் பாலையும் வழிப்போக்கர்களுக்காகப் பயன்படுத்துவது. 

1501. அனஸ் (ரலி) அறிவித்தார்.

உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர்.

செய்தியறிந்த நபி (ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படி விட்டுவிட்டார்கள்.

அத்தியாயம்: 24


أَنَّ نَاسًا مِنْ عُرَيْنَةَ اجْتَوَوْا المَدِينَةَ «فَرَخَّصَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا، وَأَبْوَالِهَا»، فَقَتَلُوا الرَّاعِيَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، وَتَرَكَهُمْ بِالحَرَّةِ يَعَضُّونَ الحِجَارَةَ


Bukhari-1500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 ஸகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கு (ஸகாத் பொருளை விநியோகிக்க வேண்டும்) எனும் (9:60ஆவது) இறைவசனமும், ஸகாத் வசூலிப்பவர்களிடம் தலைவர் கணக்குக் கேட்க வேண்டும் என்பதும். 

1500. அபூ ஹுமைத் அஸ் ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் அஸத் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை பனூஸுலைம் எனும் கோத்திரத்தாரிடையே ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள்.
Book : 24


«اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنَ الأَسْدِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ، يُدْعَى ابْنَ اللُّتْبِيَّةِ فَلَمَّا جَاءَ حَاسَبَهُ»


Bukhari-1499

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 66

புதையலின் ஸகாத் ஐந்தில் ஒரு பங்காகும்.

புதையல் என்பது பழங்காலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொருளாகும். அது குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

சுரங்கம் புதையலில் சேராது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சுரங்கத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு உள்ளது எனக் கூறினார்கள்’ என இமாம் மாலிக், இப்னு இத்ரீஸ் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றார்கள்.

சுரங்கத்திலிருந்து வரும் ஒவ்வோரு இருநூறு தீனாரிலும் ஐந்து தீனாரை ஸகாத்தாக உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் வசூலித்தார்கள்.

அந்நியர் ஆட்சிக்கு உட்பட்ட பூமியில் கிடைக்கும் புதையலுக்கு ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. இஸ்லாமிய ஆட்சி நடக்கும் பூமியில் கிடைக்கும் புதையலில் (தங்கத்தைப் போன்றே) ஸகாத் உள்ளது.

எதிரிகளின் பூமியில் பிறர் தவறவிட்ட பொருளைப் பெற்றுக் கொண்டால் அதைப் பிறருக்கு அறிவித்துவிடுங்கள். அது எதிரிகளின் பூமியிலிருந்து எடுக்கப்பட்டாலும் அதிலும் ஐந்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

சுரங்கம்

«العَجْمَاءُ جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»


Bukhari-1498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65 கடலிலிருந்து கிடைப்பவை.

புதையலில் கொழுப்புத் தலை திமிங்கம் (அம்பர்) சேராது. ஏனெனில் அது கடலலைகள் ஒதுக்கும் ஒரு பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

அம்பரிலும் முத்துக்களிலும் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் உள்ளது என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இது தவறாகும். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள் புதையலுக்குத்தான் ஐந்தில் ஒரு பகுதி ஸகாத் என்றார்கள். தண்ணீரில் கிடைப்பவற்றுக்கு அல்ல. 

1498. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் தீனார் கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.

ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் தீனாரையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார்.

ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் வெளிக் கிளம்பி (அவ்வழியே) வந்தபோது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு அதை (எரிப்பதற்கு) விறகாகத் தம் வீட்டிற்கு எடுத்து வந்தார். அதை(க் கோடாரியால்) பிளந்தபோது தம் பொருளைப் பெற்றார்.’ என அபூ ஹுரைரா(ரலி)

«أَنَّ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ بِأَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ فَخَرَجَ فِي البَحْرِ، فَلَمْ يَجِدْ مَرْكَبًا، فَأَخَذَ خَشَبَةً، فَنَقَرَهَا، فَأَدْخَلَ فِيهَا أَلْفَ دِينَارٍ، فَرَمَى بِهَا فِي البَحْرِ، فَخَرَجَ الرَّجُلُ الَّذِي كَانَ أَسْلَفَهُ، فَإِذَا بِالخَشَبَةِ، فَأَخَذَهَا لِأَهْلِهِ حَطَبًا»، فَذَكَرَ الحَدِيثَ فَلَمَّا نَشَرَهَا وَجَدَ المَالَ


Bukhari-1497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64 ஸகாத் கொடுப்பவர்களுக்காக தலைவர் பிரார்த்திப்பது.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை வசூலிப்பீராக! அது அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்கும்! இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்) ஆறுதலும் அளிக்கும். (9:103) 

1497. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

யாரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இன்னாரின் குடும்பத்திற்கு நீ கிருபை செய்வாயாக!’ என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். என்னுடைய தந்தை (அபூ அவ்ஃபா) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். ‘இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினர்க்கு கிருபை செய்வாயாக’ என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள்.
Book : 24


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ، قَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ»، فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ، فَقَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»


Bukhari-1496

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 தனவந்தர்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து ஏழைகள் எங்கிருந்தாலும் அவர்களுக்குக் கொடுப்பது. 

1496. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக!

இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், ‘அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக!

அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் ‘நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகிற ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்’ என அவர்களக்க அறிவிப்பீராக!

அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.’

முஆத் இப்னு ஜபல(ரலி) யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى اليَمَنِ: «إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ، فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ»


Bukhari-1495

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1495. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்’ என்றார்கள்.
Book :24


«هُوَ عَلَيْهَا صَدَقَةٌ، وَهُوَ لَنَا هَدِيَّةٌ»


Bukhari-1494

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62 தர்மம் (அன்பளிப்பாக) மாறுவது. 

1494. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று ‘(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), ‘நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியெனில் அது தன்னுடைய இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது’ என்றார்கள்.
Book : 24


دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟» فَقَالَتْ: لاَ إِلَّا شَيْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بَعَثَتْ بِهَا مِنَ الصَّدَقَةِ، فَقَالَ: «إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا»


Bukhari-1493

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1493. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அடிமையான பரீரா எனும் பெண்ணை விடுதலை செய்வதற்காக, (அவரை) நான் விலக்கு வாங்க நாடினேன். ஆனால், அப்பெண்ணின் உரிமையாளர்கள் பரீராவை (நாங்கள் உங்களுக்கு விற்றுவிட்டாலும்) அவரின் ‘வாரிசுரிமை’ எங்களுக்கு வேண்டும் என்று நிபந்தனையிட விரும்பினார்கள்.

நான் இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீ பரீராவை வாங்கிவிடு! வாரிசுரிமை விடுதலை செய்பவருக்குத்தான்!’ என்றார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது நான் ‘இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள்’ என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இது பரீராவுக்கு தர்மமாகும் நமக்கு அன்பளிப்பாகும்’ என்றார்கள்.
Book :24


أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ لِلْعِتْقِ، وَأَرَادَ مَوَالِيهَا أَنْ يَشْتَرِطُوا وَلاَءَهَا، فَذَكَرَتْ عَائِشَةُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ» قَالَتْ: وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ، فَقُلْتُ: هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، فَقَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ»


Bukhari-1492

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61

நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரின் அடிமைகளுக்கு தர்மம் செய்தல். 

1492. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள்.

‘இது செத்ததாயிற்றே!’ எனத் தோழர்கள் கூறியதும் ‘இதை உண்பதுதான் தடுக்கப்பட்டுள்ளது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 24


وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»


Next Page » « Previous Page