Author: Farook

Bukhari-1511

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77 அடிமையின் மீதும் சுதந்திரமானவன் மீதும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகும். 

1511. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஆண், பெண், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையையோ பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

ஸாவு தீட்டிய கோதுமை ஒரு ஸாவு தீட்டாத கோதுமைக்கு சமம் என மக்கள் கருதினார்கள்.
கூறுகிறார்.

உமர்(ரலி) நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழத்தையோ கொடுத்து வந்தார்கள். மதீனாவின் மக்களுக்குப் பேரீச்சம் பழத் தட்டுப்பாடு வந்தபோது தீட்டாத கோதுமையைக் கொடுத்தார்கள். (தம் குடும்பத்திலுள்ள) சிறியவர்களுக்காகவும், பெரியவர்களுக்காகவும், (அவரின் பணியாளராக நானிருந்ததால்) என்னுடைய குழந்தைகளுக்காகவும் கொடுத்து வந்தார்கள்.

இந்த தர்மத்தைப் பெற்றுக் கொள்பவருக்கெல்லாம் கொடுத்து வந்தார்கள். மேலும், பெரு நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள்.
Book : 24


فَرَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَةَ الفِطْرِ – أَوْ قَالَ: رَمَضَانَ – عَلَى الذَّكَرِ، وَالأُنْثَى، وَالحُرِّ، وَالمَمْلُوكِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ «فَعَدَلَ  النَّاسُ بِهِ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ، فَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،» يُعْطِي التَّمْرَ «، فَأَعْوَزَ أَهْلُ المَدِينَةِ مِنَ التَّمْرِ، فَأَعْطَى شَعِيرًا»، فَكَانَ ابْنُ عُمَرَ «يُعْطِي عَنِ الصَّغِيرِ، وَالكَبِيرِ، حَتَّى إِنْ كَانَ لِيُعْطِي عَنْ بَنِيَّ»، وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يُعْطِيهَا الَّذِينَ يَقْبَلُونَهَا، وَكَانُوا يُعْطُونَ قَبْلَ الفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ»


Bukhari-1510

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1510. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன.
Book :24


«كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ»، وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»


Bukhari-1509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 76 (நோன்புப் பெருநாள்) தர்மத்தைப் பெருநாளு(டைய தொழுகை)க்கு முன்பே கொடுத்தல். 

1509. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 24


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَاةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»


Bukhari-1508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை. 

1508. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு உலர்ந்த திராட்சையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுத்து வந்தோம்.

முஆவியா(ரலி) ஆட்சியில் ஷாம் நாட்டு உயர் ரகக் கோதுமை தாராளமாகக் கிடைத்தபோது, இதில் (தீட்டிய உயர் ரகக் கோதுமையில்) ஒரு முத்து (MUDD) அதில் (தீட்டாத கோதுமையில்) இரண்டு முத்துக்கு ஈடாகும் என்று முஆவியா(ரலி) கூறினார்.
Book : 24


«كُنَّا نُعْطِيهَا فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»، فَلَمَّا جَاءَ مُعَاوِيَةُ وَجَاءَتِ السَّمْرَاءُ، قَالَ: «أُرَى مُدًّا مِنْ هَذَا يَعْدِلُ مُدَّيْنِ»


Bukhari-1507

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74 நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ அளவுப் பேரீச்சம் பழம். 

1507. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாகக் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

மக்கள் ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமைக்குப் பகரமாக அரைஸாவு அளவு தீட்டிய கோதுமையைக் கொடுத்தார்கள்.
Book : 24


«أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزَكَاةِ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ»

قَالَ عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ»


Bukhari-1506

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 73 நோன்புப் பெருநாள் தர்மம் ஒரு ஸாஉ உணவுப் பொருள். 

1506. அபூ ஸயீதில் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம்.
Book : 24


«كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»


Bukhari-1505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72 (நோன்புப் பெருநாள் தர்மம்) ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமை. 

1505. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள்(நோன்புப் பெருநாள்) தர்மமாக ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை உணவுக்காகக் கொடுத்து வந்தோம்.
Book : 24


«كُنَّا نُطْعِمُ الصَّدَقَةَ صَاعًا مِنْ شَعِيرٍ»


Bukhari-1504

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 71 நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, அடிமையல்லாதார் அனைவர் மீதும் கடமை. 

1504. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, சுதந்திரமானவர் ஆண், பெண் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
Book : 24


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ، أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنَ المُسْلِمِينَ»


Bukhari-1503

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 நோன்புப் பெருநாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கடமை ஆகும்.

நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாகுமென அபுல் ஆலியா, அதாஉ, இப்னுசீரீன் (ரஹ் அலைஹிம்) கருதுகின்றனர். 

1503. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
Book : 24


«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»


Bukhari-1502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 தலைவர் தம் கைகளால் ஸகாத்துடைய ஒட்டகத்திற்கு அடையாளமிடுவது. 

1502. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹா எனும் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியைக் கொண்டு ஸதகா ஒட்டகத்திற்கு தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
Book : 24


«غَدَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، لِيُحَنِّكَهُ، فَوَافَيْتُهُ فِي يَدِهِ المِيسَمُ يَسِمُ إِبِلَ الصَّدَقَةِ»


Next Page » « Previous Page