Author: Farook

Bukhari-1521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1521. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :25


«مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»


Bukhari-1520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1520. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்’ என்றார்கள்.
Book :25


يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لاَ، لَكِنَّ أَفْضَلَ الجِهَادِ حَجٌّ مَبْرُورٌ»


Bukhari-1519

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு. 

1519. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘செயல்களில் சிறந்தது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது’ என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது)?’ எனக் கேட்கப்பட்டபோது, ‘இறைவழியில் போர்புரிதல்’ என்றார்கள். ‘அதற்குப் பிறகு எது (சிறந்தது?)’ எனக் கேட்கப்பட்டபோது ‘பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 25


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «جِهَادٌ فِي سَبِيلِ اللَّهِ» قِيلَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»


Bukhari-1518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1518. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்து விட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை’ எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று அவருடன் தன்யீமிலிருந்து உம்ரா செய்துவிட்டு வாரும்’ என்றார்கள்.

அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் பின் பகுதியில் ஏற்றினார்; நான் உம்ரா செய்தேன்.
Book :25


 يَا رَسُولَ اللَّهِ، اعْتَمَرْتُمْ وَلَمْ أَعْتَمِرْ، فَقَالَ: «يَا عَبْدَ الرَّحْمَنِ، اذْهَبْ بِأُخْتِكَ، فَأَعْمِرْهَا مِنَ التَّنْعِيمِ، فَأَحْقَبَهَا عَلَى نَاقَةٍ» فَاعْتَمَرَتْ


Bukhari-1517

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1517. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

அனஸ்(ரலி) ஒட்டகச் சிவிகை அமைக்காமல் ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். (அவர் ஒட்டகச் சிவிகை அமைக்காதற்குக் கஞ்சத்தனம் காரணமில்லை) ஏனெனில், அவர் கஞ்சராக இருந்ததில்லை.

நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகச் சிவிகை அமைக்காமல்) ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்ததாகவும் அனஸ்(ரலி) (எங்களுக்கு) அறிவித்தார்கள்.
Book :25


«حَجَّ أَنَسٌ عَلَى رَحْلٍ وَلَمْ يَكُنْ شَحِيحًا» وَحَدَّثَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّ عَلَى رَحْلٍ وَكَانَتْ زَامِلَتَهُ»


Bukhari-1516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல். 

1516. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள்.
ஹஜ்ஜுக்கு வாகனத்தைத் தயார்படுத்துங்கள். ஏனெனில் அது இரண்டு ஜிஹாதுகளில் ஒன்றாகும் என்று உமர்(ரலி) கூறினார்.
Book : 25


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ، فَأَعْمَرَهَا مِنَ التَّنْعِيمِ، وَحَمَلَهَا عَلَى قَتَبٍ» وَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «شُدُّوا الرِّحَالَ فِي الحَجِّ فَإِنَّهُ أَحَدُ الجِهَادَيْنِ»


Bukhari-1515

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1515. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

துல்ஹுலைஃபாவில் வாகனம் சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் நபி(ஸல்) இஹ்ராம் அணிந்தார்கள்.

இதைப் போன்று அனஸ்(ரலி)யும் இப்னு அப்பாஸ்(ரலி)யும் அறிவித்தார்கள்.
Book :25


«أَنَّ إِهْلاَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذِي الحُلَيْفَةِ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ» رَوَاهُ أَنَسٌ، وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ


Bukhari-1514

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் எனும் (22:27, 28ஆகிய) இறைவசனங்கள். 

1514. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தம் வாகனத்தில் அமர்ந்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சரியாக நின்றபோது இஹ்ராம் அணிந்து தல்பியாக் கூறியதை பார்த்தேன்.
Book : 25


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكَبُ رَاحِلَتَهُ بِذِي الحُلَيْفَةِ، ثُمَّ يُهِلُّ حَتَّى تَسْتَوِيَ بِهِ قَائِمَةً»


Bukhari-1513

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஹஜ்

பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல்

அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தையும் கொடுங்கள்! (2:43, 2:83, 2:110). நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவினருடன் இணக்கமாக இருத்தல்,சுயமரியாதை ஆகியவற்றைக் கட்டளையிட்டார்கள் என்று அபூசுஃப்யான் (ஹிர்கல்-ஹெராக்ளியஸ் மன்னரிடம்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது ‘கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார்.

(இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்!’ என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.
Book : 25


كَانَ الفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ، فَجَعَلَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْرِفُ وَجْهَ الفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا، لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»، وَذَلِكَ فِي حَجَّةِ الوَدَاعِ


Bukhari-1512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 78 நோன்புப் பெருநாள் தர்மம் சிறியவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் (ஏழைகளுக்கு) கொடுக்கப்பட வேண்டும். 

1512. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

சிறியவர்,பெரியவர், சுதந்திரமானவர், அடிமை அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம் பழமோ அல்லது ஒரு ஸாவு தீட்டாத கோதுமையோ (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாகக் (கொடுப்பதை) நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
Book : 24


«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَةَ الفِطْرِ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ عَلَى الصَّغِيرِ وَالكَبِيرِ، وَالحُرِّ وَالمَمْلُوكِ»


Next Page » « Previous Page