Author: Farook

Bukhari-1459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அதில் ஸகாத் இல்லை 

1459. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஸகாத் இல்லை; ஐந்து ஊக்கியாக்களை விடக் குறைவாக உள்ள வெள்ளியில் ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களை விடக் குறைவானவற்றிலும் ஸகாத் இல்லை.’ என அபூ ஸயீத் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book : 24


«لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الوَرِقِ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ»


Bukhari-1458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1458. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது அவரிடம் ‘நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர். எனவே அவர்களை முதன் முதலில் இறைவணக்கத்தின் பால் அழைப்பீராக! அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) அறிந்தால் ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்களின் மீது கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு தெரிவிப்பீராக!

தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால் அவர்களின் செல்வங்களிலிருந்து வசூலித்து அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்களின் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக!

அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத் பெறுவீராக! மக்களின் பொருட்களில் உயர்தரமானவற்றை வசூலிக்காதீர்! என்று கூறி அனுப்பினார்கள்.
Book :24


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى اليَمَنِ، قَالَ: «إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ أَهْلِ كِتَابٍ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ عِبَادَةُ اللَّهِ، فَإِذَا عَرَفُوا اللَّهَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا فَعَلُوا، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِمْ زَكَاةً مِنْ أَمْوَالِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِذَا أَطَاعُوا بِهَا، فَخُذْ مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ»


Bukhari-1456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 ஒட்டகக் குட்டியை ஸகாத்தாக வசூலித்தல் 

1456. & 1457. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த (ஸகாத்களில்) ஓர் ஒட்டகக் குட்டியை என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்.’

1457. கொடுக்க மறுத்தவர்களின் மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்)படி அபூ பக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதுவும் நான் கருதவில்லை. ஆக, அதுதான் சரியானது என்பதை அறிந்து கொண்டேன்’ என உமர்(ரலி) கூறினார்.
Book : 24


«وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا»

1457 – قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فَمَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنَّ اللَّهَ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ بِالقِتَالِ، فَعَرَفْتُ أَنَّهُ الحَقُّ»


Bukhari-1455

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர வயதான அல்லது குறையுள்ள அல்லது ஆண் பிராணிகள் ஸகாத் பொருளாகப் பெறப்பட மாட்டாது. 

1455. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ பக்ர்(ரலி), அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கட்டளையிட்ட (ஸகாத்) சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதியபோது, ‘ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர, வயதானவற்றையோ, குறைகள் உள்ளவற்றையோ, ஆண் பிராணிகளையோ ஸகாத்தாகப் பெறக் கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
Book : 24


أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَتَبَ لَهُ الصَّدَقَةَ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلاَ يُخْرَجُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ وَلاَ ذَاتُ عَوَارٍ، وَلاَ تَيْسٌ إِلَّا مَا شَاءَ المُصَدِّقُ»


Bukhari-1454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 38

ஆடுகளின் ஸகாத்.

1454. அனஸ் (ரலி) அறிவித்தார்.

நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூபக்ர் (ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். இது அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு ஏவி அவர்கள் முஸ்லிம்களின் மீது கடமையாக்கிய ஸகாத் (பற்றிய விவரம்) ஆகும்.

முஸ்லிம்களில் யாரும் கணக்குப்படி ஸகாத் கோரப்பட்டால் அதை வழங்கவேண்டும். கணக்குக்கு மேல் ஸகாத் கோரப்பட்டால் அதைக் கொடுக்க வேண்டாம்.

24 ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், ஒவ்வொரு 5 ஒட்டகத்திற்கும் 1 ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும்.

25 ஒட்டகம் முதல் 35 வரை ஒரு வயது பெண் ஒட்டகம்.

36 முதல் 45 வரை, இரண்டு வயது பெண் ஒட்டகம்.

46 முதல் 60 வரை மூன்று வயதுள்ள, பருவமான பெண் ஒட்டகம்.

61 லிருந்து 75 வரை நான்கு வயது பெண் ஒட்டகம்.

76 லிருந்து 90 வரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள்.

91 லிருந்து 120 வரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரண்டு பெண் ஒட்டகங்கள் ஸகாத்தாகும்.

120 க்கும்

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَتَبَ لَهُ هَذَا الكِتَابَ لَمَّا وَجَّهَهُ إِلَى البَحْرَيْنِ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المُسْلِمِينَ، وَالَّتِي أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ، «فَمَنْ سُئِلَهَا مِنَ المُسْلِمِينَ عَلَى وَجْهِهَا، فَلْيُعْطِهَا وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلاَ يُعْطِ فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الإِبِلِ، فَمَا دُونَهَا مِنَ الغَنَمِ مِنْ كُلِّ خَمْسٍ شَاةٌ إِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلاَثِينَ، فَفِيهَا بِنْتُ مَخَاضٍ أُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلاَثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا بِنْتُ لَبُونٍ أُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الجَمَلِ، فَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ، فَفِيهَا جَذَعَةٌ فَإِذَا بَلَغَتْ يَعْنِي سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ، فَفِيهَا بِنْتَا لَبُونٍ فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَتِسْعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الجَمَلِ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ إِلَّا أَرْبَعٌ مِنَ الإِبِلِ، فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا، فَإِذَا بَلَغَتْ خَمْسًا مِنَ الإِبِلِ، فَفِيهَا شَاةٌ وَفِي صَدَقَةِ الغَنَمِ فِي سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ شَاةٌ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ إِلَى مِائَتَيْنِ شَاتَانِ، فَإِذَا زَادَتْ عَلَى مِائَتَيْنِ إِلَى ثَلاَثِ مِائَةٍ، فَفِيهَا ثَلاَثُ شِيَاهٍ، فَإِذَا زَادَتْ عَلَى ثَلاَثِ مِائَةٍ، فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ، فَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاةً وَاحِدَةً، فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا وَفِي الرِّقَّةِ رُبْعُ العُشْرِ، فَإِنْ لَمْ تَكُنْ إِلَّا تِسْعِينَ وَمِائَةً، فَلَيْسَ فِيهَا شَيْءٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا»


Bukhari-1453

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 ஒருவயதுடைய பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகச் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லையென்றால்…? 

1453. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கடமையாக்கிய ஸகாத் பற்றி அபூ பக்ர்(ரலி) எனக்குக் கடிதம் எழுதினார்.

அதில், நான்கு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய ஒருவரிடம், அது இல்லாமல் மூன்று வயதுடைய பெண் ஒட்டகம் இருந்தால் அதை அவரிடமிருந்து ஏற்கலாம்; அத்துடன் அவருக்கு சக்தி இருந்தால் அவரிடமிருந்து இரண்டு ஆடுகளை வசூலிக்க வேண்டும். அல்லது இருபது திர்கங்களை வசூலிக்க வேண்டும்.

மூன்று வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெறவேண்டும்; அத்துடன் இரண்டு ஆடுகளையோ இருபது திர்கங்களையோ (ஸகாத் அளிப்பவர்) கொடுக்க வேண்டும்.

இரண்டு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் மூன்று வயது பெண் ஒட்டகம் இருந்தால், அவருக்கு, வசூலிப்பவர் இருபது திர்கங்களையோ இரண்டு ஆடுகளையோ கொடுக்க வேண்டும்.

இரண்டு வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் ஒரு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற வேண்டும். அத்துடன் இருபது திர்கங்களையோ இரண்டு ஆடுகளையோ (ஸகாத் கொடுப்பவர்)

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ لَهُ فَرِيضَةَ الصَّدَقَةِ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنَ الإِبِلِ صَدَقَةُ الجَذَعَةِ، وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعَةٌ، وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الحِقَّةُ، وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنِ اسْتَيْسَرَتَا لَهُ، أَوْ عِشْرِينَ دِرْهَمًا،

وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الحِقَّةِ، وَلَيْسَتْ عِنْدَهُ الحِقَّةُ، وَعِنْدَهُ الجَذَعَةُ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الجَذَعَةُ، وَيُعْطِيهِ المُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ،

وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الحِقَّةِ، وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا بِنْتُ لَبُونٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ وَيُعْطِي شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا،

وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الحِقَّةُ وَيُعْطِيهِ المُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ،

وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ، وَعِنْدَهُ بِنْتُ مَخَاضٍ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ مَخَاضٍ وَيُعْطِي مَعَهَا عِشْرِينَ  دِرْهَمًا أَوْ شَاتَيْنِ»


Bukhari-1452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 ஒட்டகத்தின் ஸகாத்

இதுபற்றி அபூபக்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர். 

1452. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்கு அவர்கள், ‘உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?’ எனக் கேட்டார்கள்.

அவர், ‘ஆம் என்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்து விடமாட்டான்’ எனக் கூறினார்கள்.
Book : 24


أَنَّ أَعْرَابِيًّا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الهِجْرَةِ، فَقَالَ: «وَيْحَكَ، إِنَّ شَأْنَهَا شَدِيدٌ، فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ تُؤَدِّي صَدَقَتَهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاعْمَلْ مِنْ وَرَاءِ البِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا»


Bukhari-1451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர் (தமது பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தாமே செலுத்திவிடுவாராயின் அவர் தம் கூட்டாளியின் பங்கிற்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வார்.

இரு பங்குதாரர்கள் அவரவர் பங்குகளைப் பிரித்தறிந்திருந்தால் அவ்விருவரின் பொருட்கள் சேர்த்துக் கணக்கிடப்பட மாட்டாது என தாவூஸ், அதாஉ (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

ஆடுகள் வளர்க்கக் கூடிய பங்காளிகளில் இவருக்கு நாற்பது ஆடுகளும் அவருக்கு நாற்பது ஆடுகளும் நிறைவாகிவிட்டாலே தவிர ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

1451. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸதகாவைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) எழுதும்போது, ‘இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் (கூட்டாளிகள் இருவரில்) ஒருவர் (தன் பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின் அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற வேண்டும்’ எனக் குறிப்பிட்டார்.
Book : 24


أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَتَبَ لَهُ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ، فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ»


Bukhari-1450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 34

(ஸகாத்தைக் குறைக்கும் நோக்கில்) பிரிந்திருப்பவற்றைச் சேர்க்கவோ சேர்ந்திருப்பவற்றைப் பிரிக்கவோ கூடாது. இவ்வாறே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. 

1450. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸதகாவைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) எழுதியபோது, ‘ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது’ என அபூபக்ர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 24 


أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ لَهُ الَّتِي فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلاَ يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ، وَلاَ يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ»


Bukhari-1449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1449. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

பெருநாளன்று நான் நபி (ஸல்) அவர்களை கவனித்தேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுகை நடத்தினார்கள். பிறகு தம் உரை பெண்களின் செவிகளைச் சென்றடையவில்லை என அவர்கள் கருதியதால் பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள்.

பிலால் (ரலி), ஓர் ஆடையை ஏந்தியவராக நின்றிருந்தார்கள். அப்போது பெண்கள் அதில் (தம் அணிகலன்களைப்) போடலானார்கள்.

ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் என்பவர் இதை அறிவிக்கும்போது தம் காதையும் கழுத்தையும் சைகையால் காட்டினார்.

அத்தியாயம்: 24


أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ، فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ»، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي وَأَشَارَ أَيُّوبُ إِلَى أُذُنِهِ وَإِلَى حَلْقِهِ


Next Page » « Previous Page