Author: Farook

Bukhari-1448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 ஸகாத்தைப் (பணமாக அன்றிப்) பொருட்களாகப் பெறல்

முஆத் (ரலி), யமன் வாசிகளிடம் நீங்கள் உங்கள் ஸகாத் பொருட்களான தீட்டாத கோதுமை, தீட்டிய கோதுமை ஆகியவற்றுக்குப் பகரமாகத் துணிகள், ஆடைகளைத் தாருங்கள். இது உங்களுக்கு இலகுவானதாகவும் மதீனாவில் வசிக்கும் நபித் தோழர்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும் எனக் கூறினார்கள் என தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) தமது கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் தானம் செய்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்.

மேலும் ஸகாத்தைப் பிற தர்மங்களிலிருந்து வேறுபடுத்திக் கூறாமல் (பெண்களே!) உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். பெண்கள் தங்கள் கழுத்தணிகளையும் காது வளையங்களையும் தர்மமாக அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்கம், வெள்ளியைத்தான் தர்மமாகக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

1448. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அபூபக்ர்(ரலி) அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கட்டளையிட்டுள்ள (பிராணிகளுக்கான) ஸகாத் சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதியனுப்பியபோது

‘ஒரு வயது பெண் ஒட்டகம் ஸகாத் கொடுக்க வேண்டிய ஒருவரிடம், அது இல்லாமல் இரண்டு வயது

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ لَهُ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ، وَعِنْدَهُ بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيُعْطِيهِ المُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، فَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ بِنْتُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا، وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَيْءٌ»


Bukhari-1447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 121 குர்பானிப் பிராணிகளின் தோல்களை தர்மம் செய்ய வேண்டும். 

1447. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; ஐந்து ஊக்கியாவுக்குக் குறைவானவற்றில் (தானியங்களில்) ஸகாத் இல்லை.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book : 24


«لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ مِنَ الإِبِلِ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، سَمِعَ أَبَاهُ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا


Bukhari-1446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 ஸகாத்திலும் ஸதகாவிலும் கொடுப்பப்படவேண்டிய அளவும்-ஓர் ஆட்டை தர்மமாக்கலும். 

1446. ஹஃப்ஸா பின்த் ஸிரின் அறிவித்தார்.

நுஸைபா(உம்மு அதிய்யா(ரலி) அவர்களுக்கு ஓர் ஆடு (ஸதகாவாகக்) கொடுக்கப்பட்டது. அவர் அதில் கொஞ்சம் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆயிஷாவிடம்) ‘உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?’ எனக் கேட்டார்கள். ஆயிஷா(ரலி), ‘நுஸைபா(ரலி). ‘நுஸைபா(ரலி) அனுப்பி வைத்த இந்த ஆட்டைத் தவிர வேறெதுவும் இல்லை’ என்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொண்டு வா! அது தன்னுடைய இடத்தை அடைந்துவிட்டது’ என்று கூறினார்கள்.
Book : 24


بُعِثَ إِلَى نُسَيْبَةَ الأَنْصَارِيَّةِ بِشَاةٍ، فَأَرْسَلَتْ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا مِنْهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عِنْدَكُمْ شَيْءٌ؟» فَقُلْتُ: لاَ، إِلَّا مَا أَرْسَلَتْ بِهِ نُسَيْبَةُ مِنْ تِلْكَ الشَّاةِ، فَقَالَ: «هَاتِ، فَقَدْ بَلَغَتْ مَحِلَّهَا»


Bukhari-1445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1445. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்…?’ எனக் கேட்டனர்.

அதற்கு நபி(ஸல்), ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்’ என்றனர். தோழர்கள், ‘அதுவும் முடியவில்லையாயின்’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று பதிலளித்தார்கள்.

தோழர்கள், ‘அதுவும் இயலாவில்லையாயின்’ என்றதும் ‘நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!’ எனக் கூறினார்கள்.
Book :24


«عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ»، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، فَمَنْ لَمْ يَجِدْ؟ قَالَ: «يَعْمَلُ بِيَدِهِ، فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ» قَالُوا: فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: «يُعِينُ ذَا الحَاجَةِ المَلْهُوفَ» قَالُوا: فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: «فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ، وَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ، فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ»


Bukhari-1443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 28

தர்மம் செய்பவனுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் 

1443. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும்.

கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 24


«مَثَلُ البَخِيلِ وَالمُتَصَدِّقِ، كَمَثَلِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ»

وحَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ حَدَّثَهُ: أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ 

«مَثَلُ البَخِيلِ وَالمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا المُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلَّا سَبَغَتْ أَوْ وَفَرَتْ عَلَى جِلْدِهِ، حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا البَخِيلُ فَلاَ يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلَّا لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا، فَهُوَ يُوَسِّعُهَا وَلاَ تَتَّسِعُ» تَابَعَهُ الحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، فِي الجُبَّتَيْنِ


Bukhari-1442

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 அல்லாஹ் கூறுகிறான் : எனவே யார் (தான தர்மம்) கொடுத்து, (தம் இறைவனை) அஞ்சி நல்லவற்றை உண்மை என (அவை நல்லவையென்று) ஏற்கின்றாரோ அவருக்கு நாம் இலகுவான (நன்மையின்) பாதையை எளிதாக்குவோம். ஆனால் யார் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வின் தயவு) தேவையற்றவனாக தன்னைக் கருதிக்கொள்கிறானோ இன்னும் நல்லவற்றை பொய்பிக்(க முயல்)கின்றானோ, அவனுக்கு சிரமத்திற்குரிய (தீமையின்) பாதையைத்தான் எளிதாக்குவோம். (92:5-10)

அல்லாஹ்வே! பொருளை தர்மம் செய்பவனுக்கு (அதற்குரிய) பிரதிபலனைக் கொடுப்பாயாக! (என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.) 

1442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!’ என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!’ என்று கூறுவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24


مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا


Bukhari-1441

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1441. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன்னுடைய வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் (தர்மத்தின் நன்மை) அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும்.’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :24


«إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ ، فَلَهَا أَجْرُهَا، وَلِلزَّوْجِ بِمَا اكْتَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ»


Bukhari-1439

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 ஒரு பெண் தனது கணவனின் வீட்டிலுள்ள (பொருளிலிருந்து) எதையும் வீணாக்காமல் தர்மம் செய்தாலோ அல்லது (பிறருக்கு) உணவு வழங்கினாலோ அவளுக்கும் பலன் உண்டு. 

1439 & 1440. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலிருந்து (அதிலுள்ளதை) தர்மம் செய்தால்…

மற்றொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளதாவது:

ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அதற்கான நற்கூலி அவளுக்குக் கிடைக்கும். அதைப் போன்ற நற்கூலி அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். அவள் செலவழித்தற்காகவும் அவன் சம்பாதித்தற்காகவும் அந்த தர்மத்தின் நன்மையைப் பெறுகின்றனர்.’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 24


تَعْنِي إِذَا تَصَدَّقَتِ المَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا،

1440. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَطْعَمَتِ المَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ، كَانَ لَهَا أَجْرُهَا وَلَهُ مِثْلُهُ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لَهُ بِمَا اكْتَسَبَ وَلَهَا بِمَا أَنْفَقَتْ»

 


Bukhari-1438

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1438. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிமான,நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக – நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாக, தான் ஏவப்பட்டபடி ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்.’ எனஅபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :24


الخَازِنُ المُسْلِمُ الأَمِينُ، الَّذِي يُنْفِذُ – وَرُبَّمَا قَالَ: يُعْطِي – مَا أُمِرَ بِهِ كَامِلًا مُوَفَّرًا طَيِّبًا بِهِ نَفْسُهُ، فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ أَحَدُ المُتَصَدِّقَيْنِ


Bukhari-1437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 தன் எஜமானரின் கட்டளைப்படி அவரது பொருளைப் பாழ்படுத்தாமல் தர்மம் செய்யும் பணியாளுக்கும் நற்பலன் உண்டு. 

1437. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தன்னுடைய வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும்.’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 24


«إِذَا تَصَدَّقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ»


Next Page » « Previous Page