Author: Farook

Bukhari-1436

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 இணைவைப்பவராக இருக்கும் போது தர்மம் செய்துவிட்டுப் பின்பு இஸ்லாத்தில் இணைதல். 

1436. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு ‘தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்’ போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்!’ என்று பதிலளித்தார்கள்.
Book : 24


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ، وَصِلَةِ رَحِمٍ، فَهَلْ فِيهَا مِنْ أَجْرٍ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ»


Bukhari-1435

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 தர்மம் பாவங்களை அழித்துவிடும் 

1435. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்? என உமர்(ரலி) கேட்டார். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு, சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றேன்.

உமர்(ரலி), ‘நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர்! அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?’ என்று கேட்டார். ‘ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவவை அதற்கான பரிகாரமாகும்’ என்று நான் பதில் கூறினேன்.

‘நான் இதைக் கருதவில்லை; கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பத்)தைப் பற்றியே கேட்கிறேன்’ என்றார்கள். நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது’ எனக் கூறியதும், ‘அக்கதவு

قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَيُّكُمْ يَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الفِتْنَةِ؟ قَالَ: قُلْتُ: أَنَا أَحْفَظُهُ كَمَا قَالَ، قَالَ: إِنَّكَ عَلَيْهِ لَجَرِيءٌ، فَكَيْفَ؟ قَالَ: قُلْتُ: ” فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ، وَوَلَدِهِ، وَجَارِهِ، تُكَفِّرُهَا الصَّلاَةُ، وَالصَّدَقَةُ وَالمَعْرُوفُ -( قَالَ سُلَيْمَانُ: قَدْ كَانَ يَقُولُ: الصَّلاَةُ وَالصَّدَقَةُ ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ – وَالنَّهْيُ عَنِ المُنْكَرِ)

، قَالَ: لَيْسَ هَذِهِ أُرِيدُ، وَلَكِنِّي أُرِيدُ الَّتِي تَمُوجُ كَمَوْجِ البَحْرِ، قَالَ: قُلْتُ: لَيْسَ عَلَيْكَ بِهَا يَا أَمِيرَ المُؤْمِنِينَ بَأْسٌ بَيْنَكَ وَبَيْنَهَا بَابٌ مُغْلَقٌ، قَالَ: فَيُكْسَرُ البَابُ أَوْ يُفْتَحُ، قَالَ: قُلْتُ: لاَ بَلْ يُكْسَرُ، قَالَ: فَإِنَّهُ إِذَا كُسِرَ لَمْ يُغْلَقْ أَبَدًا،

قَالَ: قُلْتُ: أَجَلْ، فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ مَنِ البَابُ فَقُلْنَا لِمَسْرُوقٍ: سَلْهُ، قَالَ: فَسَأَلَهُ، فَقَالَ: عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْنَا، فَعَلِمَ عُمَرُ مَنْ تَعْنِي؟ قَالَ: نَعَمْ، كَمَا أَنَّ دُونَ غَدٍ لَيْلَةً وَذَلِكَ أَنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ


Bukhari-1434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 இயன்றளவு தர்மம் செய்தல் 

1434. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்’ எனக் கூறினார்கள். என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 24


أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ»


Bukhari-1433

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1433. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!’ எனக் கூறினார்கள்.

‘அப்தாவின் அறிவிப்பில், ‘நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்’ எனக் கூறினார்கள் என உள்ளது.
Book :24


قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ» حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدَةَ، وَقَالَ: «لاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ»


Bukhari-1432

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1432. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), ‘(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்’ எனக் கூறினார்கள்.
Book :24


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ»


Bukhari-1431

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும் 

1431. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்கள் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்களுக்கு உபதேசித்துவிட்டு, தர்மம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் காது வளையங்களையும் கை வளையல்களையும் (தர்மமாக) வழங்கலானார்கள்.
Book : 24


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ مَالَ عَلَى النِّسَاءِ، وَمَعَهُ بِلاَلٌ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ»، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُلْبَ وَالخُرْصَ


Bukhari-1430

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன்

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும் அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்பலன் அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துக்கமும் அடைய மாட்டார்கள். (2:262)

பாடம் : 20 தர்மத்தை அன்றே செய்ய விரும்புதல் 

1430. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்திவிட்டு உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் அல்லது கேட்கப்பட்டது அதற்கு நபி(ஸல்) ‘நான் என்னுடைய வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; அப்பொருளுடன் இரவைக் கழிக்க விரும்பவில்லை. எனவே, அதைப் பங்கிட்டு விட்டேன்’ எனக் கூறினார்கள்.
Book : 24


صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَصْرَ، فَأَسْرَعَ، ثُمَّ دَخَلَ البَيْتَ فَلَمْ يَلْبَثْ أَنْ خَرَجَ، فَقُلْتُ أَوْ قِيلَ لَهُ، فَقَالَ: «كُنْتُ خَلَّفْتُ فِي البَيْتِ تِبْرًا مِنَ الصَّدَقَةِ، فَكَرِهْتُ أَنْ أُبَيِّتَهُ، فَقَسَمْتُهُ»


Bukhari-1429

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1429. அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறியதாவது.

நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது’ என்றும் கூறினார்கள்.
Book :24


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ عَلَى المِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ، وَالتَّعَفُّفَ، وَالمَسْأَلَةَ: ” اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، فَاليَدُ العُلْيَا: هِيَ المُنْفِقَةُ، وَالسُّفْلَى: هِيَ السَّائِلَةُ


Bukhari-1427

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1427. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.
Book :24


«اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ»


Bukhari-1426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 தமது தேவைக்கு மிஞ்சிய செல்வம் உள்ளவரே தர்மம் செய்வார்.

ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ, தேவை இருக்கும்போதோ அல்லது கடனிருக்கும்போதோ தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்புச் செய்தல் ஆகியவற்றைவிட கடனைத் தீர்ப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை.

யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனினும் பொறுமையாளன் என்று அறிமுகமானவனாக இருந்தால், தனக்கு வறுமை இருந்தாலும் பிறர்க்கு தர்மம் செய்யலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறார்கள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முக்கியத்துவமளித்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதைத் தடுத்துள்ளார்கள். தர்மம் கொடுப்பதாகக் காரணம் காட்டி மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை.

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப்

«خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ»


Next Page » « Previous Page