Author: Farook

Bukhari-1373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
Book :23


«قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا فَذَكَرَ فِتْنَةَ القَبْرِ الَّتِي يَفْتَتِنُ فِيهَا المَرْءُ، فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ المُسْلِمُونَ ضَجَّةً»


Bukhari-1372

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1372. மஸ்ரூக் அறிவித்தார்.

ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக’ என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் மண்ணறை வேதனை உள்ளது’ எனக் கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை’.
Book :23


أَنَّ يَهُودِيَّةً دَخَلَتْ عَلَيْهَا، فَذَكَرَتْ عَذَابَ القَبْرِ، فَقَالَتْ لَهَا: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ القَبْرِ، فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ القَبْرِ، فَقَالَ: «نَعَمْ، عَذَابُ القَبْرِ» قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ صَلَّى صَلاَةً إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ القَبْرِ زَادَ غُنْدَرٌ: «عَذَابُ القَبْرِ حَقٌّ»


Bukhari-1371

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1371. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (இறந்தவர்களின் விஷயத்தில்), ‘நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என்பதை இப்போது அவர்கள் அறிகிறார்கள்’ என்றே கூறினார்கள். (செவியுறுகிறார்கள் என்று கூறவில்லை; ஏனெனில்) ‘நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது’ (திருக்குர்ஆன் 27:80) என அல்லாஹ் கூறினான்.
Book :23


«إِنَّهُمْ لَيَعْلَمُونَ الآنَ أَنَّ مَا كُنْتُ أَقُولُ لَهُمْ حَقٌّ» وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {إِنَّكَ لاَ تُسْمِعُ المَوْتَى} [النمل: 80]


Bukhari-1370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1370. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். ‘இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?’ என அவர்களிடம் கேட்கப்பட்டதும், ‘அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர்; ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்’ எனக் கூறினார்கள்.
Book :23


اطَّلَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَهْلِ القَلِيبِ، فَقَالَ: «وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا؟» فَقِيلَ لَهُ: تَدْعُو أَمْوَاتًا؟ فَقَالَ: «مَا أَنْتُمْ بِأَسْمَعَ مِنْهُمْ، وَلَكِنْ لاَ يُجِيبُونَ»


Bukhari-1369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1369. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்’ என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் ‘நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்’ (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான்.

பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

வசனம் மண்ணறை வேதனை சம்பந்தமாகவே அருளப்பட்டது என ஷுஅபாவின் அறிவிப்பில் காணப்படுகிறது.

Book :23


إِذَا أُقْعِدَ المُؤْمِنُ فِي قَبْرِهِ أُتِيَ، ثُمَّ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَذَلِكَ قَوْلُهُ: {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ} [إبراهيم: 27] “ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا – وَزَادَ – {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا} [إبراهيم: 27] نَزَلَتْ فِي عَذَابِ القَبْرِ


Bukhari-1368

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1368. அபுல் அஸ்வத் அறிவித்தார்.

நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர்(ரலி) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது’ என்றார். பிறகு இன்னொரு ஜனாஸ கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர்.

உடனே உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது’ என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது’ எனக் கூறினார். நான் ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும். ‘எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் ‘மூவர் சாட்சியாயிருந்தால்..?’ என்று கேட்டோம். அதற்கவர்கள் ‘மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்’ என்றனர். மீண்டும் ‘இருவர் சாட்சியாக இருந்தால்…’ என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்’ என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள்

قَدِمْتُ المَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَمَرَّتْ بِهِمْ جَنَازَةٌ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا، فَقَالَ: وَجَبَتْ، فَقَالَ أَبُو الأَسْوَدِ: فَقُلْتُ: وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ المُؤْمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا مُسْلِمٍ، شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ، أَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ» فَقُلْنَا: وَثَلاَثَةٌ، قَالَ: «وَثَلاَثَةٌ» فَقُلْنَا: وَاثْنَانِ، قَالَ: «وَاثْنَانِ» ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الوَاحِدِ


Bukhari-1367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1367. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது’ என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள். உமர்(ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்’ எனக் கூறினார்கள்.
Book :23


مَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ» ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا، فَقَالَ: «وَجَبَتْ» فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: مَا وَجَبَتْ؟ قَالَ: «هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا، فَوَجَبَتْ لَهُ الجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا، فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»


Bukhari-1366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1366. உமர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் மரணித்ததும் அவனுக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தத் தாயரானபோது நான் அவர்களிடம் சென்று, இறைத்தூதர் அவர்களே! அப்துல்லாஹ் இப்னு உபைக்காக ஜனாஸாத் தொழப் போகிறீர்களா? அவன் இன்னின்ன நாள்களில் இன்னின்னவற்றைப் பேசியுள்ளான் என, அவன் பேசியவற்றை நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் புன்கைத்தார்கள்.

நான் மேலும் அதிகமாக வலியுறுத்தியதும் அவர்கள், ‘எனக்கு(த் தொழுகை நடத்துதல், தொழுகை நடத்தாமலிருத்தல் ஆகிய இரண்டில் எதையும் செயல்படுத்த) அனுமதியுள்ளது. எழுபது முறைகளுக்கும் அதிகமாக நான் பாவமன்னிப்புத் தேடினால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதாக நான் அறிந்தால் அவ்வாறே நான் அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவேன்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அவனுக்காக ஜனாஸாத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பிச் சென்று சற்று நேரமாகுவதற்குள் பராஅத் (9-வது) அத்தியாயத்தின் இடரு வசனங்களான ‘அவர்களில் எவரேனும் இறந்தால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்’ என்ற இறை வசனங்கள் (திருக்குர்ஆன் 09:84, 85) இறங்கிவிட்டன.

அன்றையதினம் நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில்

لَمَّا مَاتَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ، دُعِيَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيُصَلِّيَ عَلَيْهِ، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَبْتُ إِلَيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَتُصَلِّي عَلَى ابْنِ أُبَيٍّ وَقَدْ قَالَ يَوْمَ كَذَا وَكَذَا: كَذَا وَكَذَا؟ أُعَدِّدُ عَلَيْهِ قَوْلَهُ، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «أَخِّرْ عَنِّي يَا عُمَرُ» فَلَمَّا أَكْثَرْتُ عَلَيْهِ، قَالَ: «إِنِّي خُيِّرْتُ فَاخْتَرْتُ، لَوْ أَعْلَمُ أَنِّي إِنْ زِدْتُ عَلَى السَّبْعِينَ يُغْفَرُ لَهُ لَزِدْتُ عَلَيْهَا» قَالَ: فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ انْصَرَفَ، فَلَمْ يَمْكُثْ إِلَّا يَسِيرًا، حَتَّى نَزَلَتِ الآيَتَانِ مِنْ بَرَاءَةٌ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا} [التوبة: 84] إِلَى قَوْلِهِ {وَهُمْ فَاسِقُونَ} [التوبة: 84] قَالَ: فَعَجِبْتُ بَعْدُ مِنْ جُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ


Bukhari-1365

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1365. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 23


«الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ، وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ»


Bukhari-1364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1364. ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் இந்த (பஸ்ராவின்) பள்ளி வாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார்கள். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்தப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் பொய் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை.

அவர்கள் கூறியதாவது: “(முற்காலத்தில்) ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அப்போது அல்லாஹ், “என் அடியான் தன் (உயிர்) விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திவிட் டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் தடுத்துவிட்டேன்” எனக் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 23


حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فِي هَذَا المَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: كَانَ بِرَجُلٍ جِرَاحٌ، فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ اللَّهُ: بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ


Next Page » « Previous Page