Author: Farook

Bukhari-1321

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1321. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இரவில் அடக்கம் செய்யப்பட்டவரின் கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், ‘இது அடக்கம் செய்யப்பட்டது எப்போது?’ எனக் கேட்டார்கள். தோழர்கள் ‘நேற்றிரவு தான்’ என்றதும். ‘எனக்கும் சொல்லியனுப்பியிருக்கக் கூடாதா’ எனக் கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், ‘அதை நாங்கள் இருள் சூழ்ந்த இரவில் அடக்கினோம். எனவேதான், உங்களை விழிக்கச் செய்ய விரும்பவில்லை’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழத் தயாராக எழுந்து நின்றார்கள். நான் உட்பட அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்ததும் அவர்கள் ஜனாஸாத் தொழுதார்கள்.
Book :23


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَرَّ بِقَبْرٍ قَدْ دُفِنَ لَيْلًا، فَقَالَ: «مَتَى دُفِنَ هَذَا؟» قَالُوا: البَارِحَةَ، قَالَ: «أَفَلاَ آذَنْتُمُونِي؟» قَالُوا: دَفَنَّاهُ فِي ظُلْمَةِ اللَّيْلِ فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ، فَقَامَ، فَصَفَفْنَا خَلْفَهُ، قَالَ ابْنُ عَبَّاسٍ: وَأَنَا فِيهِمْ فَصَلَّى عَلَيْهِ


Bukhari-1320

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1320. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இன்றையதினம் அபிஸினியாவைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் மரணித்துவீட்டார். எனவே வாருங்கள்; அவருக்காக ஜனாஸாத் தொழுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்து நின்றதும் நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அணியில் நின்றிருந்தேன்.
Book :23


«قَدْ تُوُفِّيَ اليَوْمَ رَجُلٌ صَالِحٌ مِنَ الحَبَشِ، فَهَلُمَّ، فَصَلُّوا عَلَيْهِ»، قَالَ: فَصَفَفْنَا، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ وَنَحْنُ مَعَهُ صُفُوفٌ  قَالَ أَبُو الزُّبَيْرِ: عَنْ جَابِرٍ «كُنْتُ فِي الصَّفِّ الثَّانِي»


Bukhari-1319

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1319. ஷைபானீ அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தனித்திருந்த ஒரு கப்ரின் பக்கம் வந்து தோழர்களை அணிவகுக்கச் செய்து நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள் என்று நபி(ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் கூறினார்’ என ஷஅபீ கூறினார். நான் அம்ரின் தந்தை (ஷஅபி)யே! உமக்குக் கூறிய அவர் யார்? எனக் கேட்டதும் ‘இப்னு அப்பாஸ்(ரலி) தாம்’ என்று பதில் கூறினார்.
Book :23


«أَتَى عَلَى قَبْرٍ مَنْبُوذٍ، فَصَفَّهُمْ، وَكَبَّرَ أَرْبَعًا» قُلْتُ: مَنْ حَدَّثَكَ، قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا


Bukhari-1318

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1318. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்கள் நஜ்ஜாஷியின் மரணச் செய்தியைத் தம் தோழர்களுக்கு அறிவித்துவிட்டு, பிறகு சற்று முன்னால் நகர்ந்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றதும் (நபி(ஸல்) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.)
Book :23


«نَعَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَصْحَابِهِ النَّجَاشِيَّ، ثُمَّ تَقَدَّمَ، فَصَفُّوا خَلْفَهُ، فَكَبَّرَ أَرْبَعًا»


Bukhari-1317

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1317. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்கள் நஜ்ஜாஷி (மன்னரு)க்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான் இரண்டாவது அல்லது மூன்றாவது அணியில் நின்றிருந்தேன்.
Book :23


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النَّجَاشِيِّ، فَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي أَوِ الثَّالِثِ»


Bukhari-1316

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும்.

அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.’
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :23


إِذَا وُضِعَتِ الجِنَازَةُ، فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ لِأَهْلِهَا: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا، يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَ الإِنْسَانُ لَصَعِقَ


Bukhari-1315

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51

பிரேதத்தை விரைவாக கொண்டு செல்வது.

நீங்கள் பிரேதத்தை அடக்கம் செய்யக் கொண்டு செல்வதாயிருந்தால் அதன் முன்புறம், பின்புறம், இடப்புறம் என எல்லாப் பக்கமும் நடந்து செல்லுங்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

“அத்துடன் பிரேதத்துக்குச் சமீபமாகவும் நடக்க வேண்டும் என்று மற்றவர்கள் (அப்துர்ரஹ்மான் பின் குர்த்-ரலி) கூறுகின்றனர்.

1315. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.’

இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :23


«أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»


Bukhari-1314

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.

இதை அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.

Book :23


إِذَا وُضِعَتِ الجِنَازَةُ ، وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً، قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ، قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ


Bukhari-1313

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1313. இப்னு அபீ லைலா அறிவித்தார்.

நான் கைஸ்(ரலி) உடனும் ஸஹ்ல்(ரலி) உடனும் இருந்தேன். அவர்கள் கூறினார்கள். ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அப்போது இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது என்று கூறும் மற்றோர் அறிவிப்பும் வந்துள்ளது.

மஸ்வூத்(ரலி)யும் கைஸ்(ரலி)யும் ஜனாஸாவிற்காக எழுந்து நின்றார்கள் என்றும் இப்னு அபீ லைலா அறிவித்தார்.
Book :23


كُنْتُ مَعَ قَيْسٍ، وَسَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالاَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ زَكَرِيَّاءُ عَنِ الشَّعْبِيِّ، عَنْ ابْنِ أَبِي لَيْلَى، كَانَ أَبُو مَسْعُودٍ، وَقَيْسٌ: «يَقُومَانِ لِلْجَنَازَةِ»


Bukhari-1312

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1312. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.

அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காபிரின்) ஜனாஸாவல்லவா?’ எனக்கேட்கப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.
Book :23


كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ، وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالقَادِسِيَّةِ، فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ، فَقَامَا، فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ، فَقَالاَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ لَهُ: إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا»


Next Page » « Previous Page