Author: Farook

Bukhari-1332

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1332. ஸமுரா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று பிரசவத் தொடக்கில் இறந்த பெண்ணிற்கு ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அப்போது அவர்கள் மய்யித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றிருந்தார்கள்.
Book :23


«صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ عَلَيْهَا وَسَطَهَا»


Bukhari-1331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1331. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன்.
Book :23


«صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ عَلَيْهَا وَسَطَهَا»


Bukhari-1330

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, ‘யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்’ என்று கூறினார்கள்.

பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
Book :23


«لَعَنَ اللَّهُ اليَهُودَ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسْجِدًا»

قَالَتْ: وَلَوْلاَ ذَلِكَ لَأَبْرَزُوا قَبْرَهُ غَيْرَ أَنِّي أَخْشَى أَنْ يُتَّخَذَ مَسْجِدًا


Bukhari-1329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

அத்தியாயம்: 23


أَنَّ اليَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا «فَأَمَرَ بِهِمَا، فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الجَنَائِزِ عِنْدَ المَسْجِدِ»


Bukhari-1328

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1328. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களை முஸல்லா எனும் திடலில் அணிவகுக்கச் செய்து (நஜாஷி மன்னருக்காக) நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
Book :23


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفَّ بِهِمْ بِالْمُصَلَّى فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا»


Bukhari-1327

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1327. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அபிசினிய மன்னர்) நஜ்ஜாஷி இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை அறிவித்த நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் சகோதரருக்காக நீங்கள் பாவமன்னிப்பு தேடுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :23


نَعَى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ صَاحِبَ الحَبَشَةِ، يَوْمَ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ»


Bukhari-1326

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1326. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்கள் ஒரு கப்ருக்கருகில் வந்தார்கள். அப்போது இ(ந்த)மய்யித்)து நேற்றிரவுதான் அடக்கம் செய்யப்பட்டது என்று தோழர்கள் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுதார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணியாக நின்று (தொழுதோம்.)
Book :23


أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرًا، فَقَالُوا: هَذَا دُفِنَ – أَوْ دُفِنَتْ – البَارِحَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «فَصَفَّنَا خَلْفَهُ، ثُمَّ صَلَّى عَلَيْهَا»


Bukhari-1325

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1325. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

யார் ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)’ என்றார்கள்.
Book :23


«مَنْ شَهِدَ الجَنَازَةَ حَتَّى يُصَلِّيَ، فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ»، قِيلَ: وَمَا القِيرَاطَانِ؟ قَالَ: «مِثْلُ الجَبَلَيْنِ العَظِيمَيْنِ»


Bukhari-1323

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1323. & 1324. நாஃபிஉ அறிவித்தார்.

யார் ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் ‘அபூ ஹுரைரா(ரலி) மிகைப்படுத்துகிறார்’ என்றார்.

ஆயிஷா(ரலி) அபூ ஹுரைரா(ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், ‘நானும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார். இதைக்கேட்ட இப்னு உமர்(ரலி) ‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’ என்றார்.
Book :23


«مَنْ تَبِعَ جَنَازَةً فَلَهُ قِيرَاطٌ» فَقَالَ: أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ عَلَيْنَا

1324. فَصَدَّقَتْ يَعْنِي عَائِشَةَ أَبَا هُرَيْرَةَ، وَقَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهُ فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «لَقَدْ فَرَّطْنَا فِي قَرَارِيطَ كَثِيرَةٍ» فَرَّطْتُ: ضَيَّعْتُ مِنْ أَمْرِ اللَّهِ


Bukhari-1322

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1322. ஷைபானி அறிவித்தார்.

தனித்திருந்த கப்ரைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அதில் எங்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்துத் தொழுதோம் என்று நபி(ஸல்) அவர்களுடன் சென்ற ஒருவர் எனக்கு அறிவித்தார்’ என ஷஅபீ கூறினார். நாங்கள் ‘அம்ரின் தந்தை(யாகிய ஷஅபீ )யே! உங்களுக்கு அதை அறிவித்தவர் யார்?’ எனக் கேட்டதும் ‘இப்னு அப்பாஸ்(ரலி) தாம்’ என்றார் அவர்.
Book :23


«فَأَمَّنَا، فَصَفَفْنَا خَلْفَهُ»، فَقُلْنَا: يَا أَبَا عَمْرٍو، مَنْ حَدَّثَكَ؟ قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا


Next Page » « Previous Page